12-14-2010-36-anton-balasingham-remembered

நித்திய வாழ்வினில் நித்திரை கொள்பவன் செத்திடப்போவதில்லை…!!!

தேசத்தின் குரல் பாலா அண்ணா
இன்று உன்னை இழந்து நிற்கிறோம்.
கொடு நோயிலும் வலியிலும் நீ நடத்திய
தமிழீழ மக்களுக்கான விடுதலை வேள்வியில்
உன் அறிவுத்திறனை பயன்படுத்தி

தமிழீழத்திலும் சரி
புலம் பெயர் நாடுகளிலும் சரி
இலண்டனில் இருந்து கொண்டு
தமிழீழ மக்களின் விடிவிற்காய்
குரல் கொடுத்தாயே

உங்கள் அறிவின் ஆளுமையால்
எங்கள் தேசத்தின் விடுதலைக்கான
உரிமைக் குரலாய், மக்களின் குரலாய்
ஊடகவியலாளராய், தேசத்தின் குரலாய்
தலைவரின் அண்ணனாய்
தலைவரின் ஆலோசகராய்
எப்போதும் மக்களுக்காய்
மக்கள் படும் துன்பங்களுக்கு
முடிவு கட்ட வேண்டும் என்று
இரவு பகல் பாராது பணியாற்றினாயே

விடுதலைப் புலிகளை
பயங்கரவாதிகள் என்றவர்களை
இல்லை அவர்கள் போராளிகள்
உரிமைப் போர் செய்கின்ற
விடுதலைப் போராளிகள் என்று
உலகுக்கு உணர்த்தி
தமிழீழ மக்களின்
தமிழீழ போராட்டத்தை
உலக அரசியல் அரங்கில்
அவர்களுக்கு நியாயப்படுத்தி
நீதி வழங்க வேண்டும் என்று
சூழுரைத்து இயங்கிக் கொண்டிருந்த
மாமனிதன் நீ

இன்று உன்னை இழந்து நிற்கிறோம்
நீ ஓர் அரசியல் ஞானி
நீ ஓர் இராஜதந்திரி
நீ ஓர் சிந்தனைவாதி
நீ ஒரு மதி உரைஞர்
நீ ஒரு மனிதநேயன்
நீ ஒரு வரலாறு
நீ ஒரு சகாப்தம்
இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்
அண்ணே இன்று நீ இல்லை
ஆனால் உன் சிந்தனைகளை நாம்
உள் வாங்கி எங்களுடன்
நீ இருக்கின்றாய்
பாலா அண்ணே நீ சாகவில்லை
அண்ணிக்கும் ஆறுதல் சொல்லிக் கொண்டு
தேசத்தின் குரலே
மீளாத் துயில் கொள்ளும் அண்ணனே
தூங்குகிறாயே தூங்கு
நன்றாகத் தூங்கி இளைப்பாறு
தமிழ் வாழ் நல்லுலகம்
என்றென்றும் உன் நினைவாக
உனக்கு எங்கள் கண்ணீர் வணக்கங்கள்.
ஈழத்தின் சிங்கம் அன்ரன் பாலசிங்கம்…