859

நீயே எம் தமிழினத்தின் கடவுள்

எம் விழிகள் தேடும் தலைவன்
எம் விடுதலையின் வழிகாட்டி
தமிழினத்தின் காவலன்
தேச விடியலுக்காய் ஒளியூட்டினாய்
ஈழ விடுதலைக்காய் போர்க்களம் நடந்தாய்
இனத்தின் வாழ்வுக்காய் உன்
சந்ததியை நீ இழந்தாய்
ஆயிரம் கடவுள் இருந்தும்
அவதாரம் எடுக்கவில்லை
கடவுள்கள் இருந்தும் எமக்கு என்ன பயன்
இனம் காக்க நீ எழுந்தாய்
இதயத்தில் தமிழ் சுமந்தாய்
கடவுள்கள் எல்லாம் பொய்யே
இனத்தின் விடுதலைக்காய்
படை கூட்டி பகையை பந்தாடினாய்
நீயே எம் தமிழினத்தின் கடவுள்

Siva TE