வள்ளுவர் கூறிய வீரமும்.! வீரப்படையும் புலிகளிடம் இருந்தன !
வள்ளுவர் தந்த திருக்குறள் தனி மனித வாழ்வு, சமுதாய வாழ்வு, நாட்டு வாழ்வு, உலக வாழ்வு அனைத்தும் முழுதுறத் தழுவிய வாழ்வியல் நூல்.

கற்பனை கடவுள் கொள்கைகளையும்,அது தொடர்பான கட்டுரைகளையும் ஏற்காத நூல் , கர்ம பலனையும், யாகம்செய்தலையும் ஆதரிக்காத நூல், நல்லன எவை அல்லன எவை என்பதைச் சுட்டிக்காட்டும் நூல் . வறட்டுக் கொள்கை பேசும் நூலன்று கடமைகளை வலியுறுத்துதோடு, அண்டபுக்கும் அறத்திற்கும் விளக்கம் தந்து அவற்றிற்கு ஆக்கம் தரும் நுால் தீய பண்புகளையும், தீய செயல்களையும் வெறுத்து ஒதுக்கும் நூல், ஒழுக்கத்திற்கும் ஒப்புரவிற்கும் உயர்வு தந்து அறிவுக்கும் ஆற்றலுக்கும் மதிப்பளிக்கும் நூல். காதலின்ப வாழ்வை கண்ணெனப்போற்றும் நூல் சுருங்க கூறின் எந்நிலைய வாழ்க்கைக்கும் வழிகாட்டும் வாழ்க்கை விளக்க முதன்நூல் திருக்குறள் ஓர் உயிர் நுால் என்பது மெய்ப்பட வேண்டுமாயின் வள்ளுவர் குறள்களைக் கால நடப்புகளோடு பொருத்திஎழுதவும், சொல்லவும், விளக்கவும் வேண்டும்
உலகத்தில் நல்லரசும், அல்லரசும் உண்டு வல்லரசும்மெல்லரசும் உண்டு இந்தியாவின் முன்னாள் முதன்மை அமைச்சர் நேருவும், சீனாவின் முதன்மை அமைச்சர் சூ என்லாயும பஞ்சசீல உடன்படிக்கை செய்தனர். அதைத் தொடர்ந்து சீனத் தூதுவர் இந்தியாவில் ‘ சீனா – இந்தியா பாய் பாய் அதாவது சீனரும் இந்தியரும் உடன் பிறந்தார் என்று கூறித்திlந்தார்.ஆனால், கேள்போல் வந்த பகை வாள் போல் மாறியதை இந்தியா மீது சீனா படையெடுத்தது காட்டியது.
இலங்கையில்நடந்தது என்ன?
சமாதான உடன்படிக்கைகள் கிழித்தெறியப்படவில்லையா? இன்று நடப்பது என்ன ? வக்கற்றவர் அம்மாவின் பொதியை பொக்கிசம் என்கிறனர் போராடி உரிமைபெறும் எண்ணத்தைவிட்டு உறவாடுகின்றனர். ஆனால் வள்ளுவரின் எச்சரிக்கையை மறந்து உறவாடுகின்றனர் “தொழுதகையுள்ளும் படையொடுங்கும் ஒன்னார் அழுதகண்ணீரும் அனைத்து அதாவது பகைவர் வணங்கித் தொழுதக கையினுள்ளும் கொலைக் கருவி மறைந்திருக்கும். பகைவர் அழுது சொரிந்தகண்ணீரும் அத்தன்மையதே. அம்மையாரின் ‘சமாதானத்தின்பின்னால் தமிழனை அடியோடு அழிக்கும் எண்ணமே உள்ளது இன்று வரை தமிழினம் பல இனக்கலவரங்களைக் கண்டுள்ளது.
அம்மாவின் கிபீர், மிக், வானவூர்திகள் சொத்து நலன்களைப் பறித்து மக்களைத் துரத்தியடிக்கின்றன கோவில்கள் தேவாலயங்கள் இடிந்து வீழ்கின்றன. நம் நாட்டை நரகமாக்குகின்றன. இவற்றை உணர்ந்து நம்மை நாமே பாதுகாக்கவேண்டும். நம்மைக் காக்கும் நன்றி வேர்கள் இணையம் படையுடன் சேர்ந்து போராட வேண்டும். காக்கத் தவறுகிறவளைப் பார்த்துத்தான் வள்ளுவர் “வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்துாறு போலக் கெடும் என்று எச்சரிக்கின்றார்
வள்ளுவரின் பொருட்பால் எழுபது அதிகாரம் , எழுநூறு குறள்களைாக கொண்டது.
இறைமாட்சி என்பது முதலாவது அதிகாரம். அவ்வதிகாரத்தின் முதற்குறள்.
‘படை சூடி கூழ் அமைசசு தடபரண் ஆறும் உடையாள் அரசுருள் ஏறு”
இக்குறளில் முதற்சொல் படை, வள்ளுவர் , படை என்னும் ஆற்றலுடைய சொல்லை முதலாவதாக வைத்து பொருட்பாலை தொடங்கி உள்ளார். படையின் இன்றியமையாமையை இதவிைட வேறுவகையால் உணர்த்த முடியுமா?
‘படை என்பது தலைக்கு உரிய உறுப்புக்கள் அமைந்ததாகவும், இடையூறுகளுக்கு அஞ்சாததாகவும் எடுத்த கடமையில் வெற்றி பெற்றுத்தருவதாகவும் இருக்கக்கூடிய படையே தலைவனுடைய செல்வங்களுள் சிறந்த செல்வமாகும்
“உறுப்பமைந்து ஊறஞ்சாவெல்படை வேந்தன் வெறுக்கையும் எல்லாம் தலை ”
என்ற வள்ளுவனின் வாய்மொழிக்கேற்ப தமிழீழத் தேசியத் தலைவர் படை அமைத்து படையை நகர்த்தி பல நூற்றாண்டுக்காலம் அன்னியனின் காலடியில் இருந்த ஆனையிறவை மீட்டுத் தந்துள்ளார். தரணி போற்றும் தமிழைப் பேசும் தமிழனுக்கு ஒரு தாயகம் வேண்டும். அவன் மறத்தை, மானத்தை உலகம் போற்ற வேண்டும். அடாத சிங்களவன் ஆட்சியிலிருந்து தமிழ் மக்களைக் காப்பாற்ற வேண்டுமென எண்ணி தங்கத்தமிழ்த்தாய் பெற்றெடுத்த தவப்புதல்வன் பிரபாகரன் ஊண் உறக்கமின்றிப் போராடுகின்றார்
நம் ஈழ மன்னர்கள் ஐரோப்பியர்களுக்கும், சிங்களவர்களுக்கும் அடிமைப்ப்ட்டதற்குக் காரணம் காலத்துக்கேற்ற படைக்கருவிகளும் எதிரிகள் வைத்திருந்த கருவிவகைகளும் இல்லாமையே, இன்று நம் தலைவர் பொருத்தமான கருவிவகைகளை வைத்தே வன்னிப்பெருநிலப்பரப்பிலிருந்து எதிரிகளை ஓட ஓ விரட்டினர் இதனையோ வள்ளுவர் “வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும் பகைவர் கண்பட்டசெருக்கு”
நவீன கருவிகள் இருந்தால் போதுமா? எதிரியிடம் இல்லாத உளஉறுதி, இலட்சிய வெறி நம் வீரர்களிடம் உண்டு, வெல்லும் படைக்கு இவை தே வை எனபதை வள்ளுவர் கூற்றுடன்று மேல்வரி னும்கூடி எதிர் நிற்கும் ஆற்றலதுவே படை’ என்றார் அதாவது வியூகம் அமைத்து எமனே சினம்கொண்டு வந்தாலும் எதிர் நின்று வெல்லக் கூடிய ஆற்றல் உடையது நம்படை என்பதை நிரூபித்துள்ளார் நம் தேசியத் தலைவர்.
வள்ளுவரை ஒரு தீயன் கண்டபடி வைதான், வள்ளுவர் பொறுத்தார். அக்கொடியவன் அவர் துணைவி வாசுகியை தொட்டி முழுக்கப் போனான். வள்ளுவர் வைத்தார் வலிய அறை. ஏனைய அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல இகழ்வாரை பொறுத்தல் வேண்டும்நன்று எழுதிய நீரே பொறுமை இழந்து என்னை அடித்ததேன்’ என்று வினவினான் அக்கொடியவன் ஆனால் வள்ளுவரே , “செய்தக்க அல்ல செயக் கெடும் செய்தக்க செய்யாமை யானுங் கெடும்” என்று இன்னுமோர் அறை அறைந்தார்
நம் வீட்டில் கொடிய பகைவன் புகுந்து மங்கையர் மானத்தை, மக்களின் சொத்து சுகங்களை அழிக்கும் போது பாராமுகமா இருக்காமல மறம் ,மானம் கொண்ட படையில் சேர்ந்து போராடி அன்னியனை அடித்துத் துரத்த வேண்டாமா?
வள்ளுவர் சத்வீகப்பூச்சி அல்ல. பல போர்களைப் பார்த்தவர் அதனால்தான். கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்களை கட்டதன னொடு நேர்’ என்றார். பயிருக்கு களை பிடுங்குவது போல் நாட்டை அழிக்கும் , மக்களை அழிக்கும்தீயரை ஒழிக்க வேண்டும்.
வள்ளுவர் தந்த வீரப்படை உண்டு வள்ளுவர் தந்த வீரமறவர் உண்டு அவ்வீரப்படையை வழிநடத்த தரணி போற்றும் வல்லவம் மிக்க வீரத் தலைவன் உண்டு எனவே அணி அணியாக தலைவன் தலைமையில் அணிதிரண்டு மக்களையும் நாட்டையும் பாதுகாக்க அடாத சிங்களவனின் போரை எதிர்த்து வெல்ல வேண்டும் நஞ்சுப் பகைவார் நடுநடுங்கப்போர் புரியம் அஞ்சாப் படை வலிமையாக்கு…………
ஆக்கம்:மூவேந்தன்
மீள்வெளியீடு:எரிமலை இதழ்