பயங்கரவாதிகளை அரசியல் கைதிகளாக அடையாப்படுத்தமுடியாது – சரத் பொன்சேகா!

நாட்டில் பிரிவினையை உருவாக்க ஆயுதம் ஏந்திப் போராடிய பயங்கரவாதிகளை அரசியல் கைதிகளாக அடையாளப்படுத்த முடியாது என பீல்ட் மார்ஷலும், அமைச்சருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அத்துடன் இவர்கள் அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை கொடுக்கவேண்டும் என்பதே எமது நிலைப்பாடு எனவும் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், ஆயுதம் ஏந்தி நாட்டில் பிரிவினைவாதத்தை உருவாக்க முய்ற்சித்த விடுதலைப்புலிகளை முழுமையாக அழித்துள்ளோம்.

இறுதி யுத்தத்தில் 12ஆயிரம் விடுதலைப் புலிகள் எம்மிடம் ஆயுதத்துடன் சரணடைந்தனர். அவர்களில் மிகவும் மோசமானவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம்.

இவர்களையே இன்று வடக்கில் உள்ளவர்கள் அரசியல் கைதிகளாக அடையாளப்படுத்தி வருகின்றனர். அவர்களை அரசியல் கைதிகளாக அடையாப்படுத்தமுடியாது.

ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகளை அரசியல் கைதிகள் எனக் கூறவேமுடியாது எனவும் தெரிவித்தார்.