யார் இந்த பிரபாகரன்…!

பலரை வரலாறு படைக்கின்றது. ஒரு சிலர் தான் வரலாற்றைப் படைக்கிறார்கள். அந்தச் சிலரில் ஒருவர் பிரபாகரன். தமிழன் யார் என்பதை அகிலமே திரும்பிப் பார்க்க வைத்தவர். தமிழர்களுக்குத் தமிழுணர்வை ஊட்டியவர். சோம்பிக் கிடந்த இனத்தைத் தட்டியெழுப்பினவர்
பூமிப் பரப்பெல்லாம் தமிழின் விதை விதைக்கக் காரணமானவர் தமிழன் சென்ற இடத்தில் எல்லாம் தமிழர்களை நான் தமிழன் என்று துணிந்து சொல்ல வைத்தவர் பிரபாகரன்தான்.ஒரு நாட்டின் வரலாற்றை மாத்திரமல்ல உலகின் பெரும் பகுதி வரலாற்றையே தலைகீழாக புரட்டிப் போட்ட ஈழப் போராட்டத்தின் நாயகன் பெயர் பிரபாகரன்..
பிரபாகரனின் தனிப்பெரும் பண்புகளை இங்கு எடுத்துக் காட்டலாம். குறைந்த பேச்சு, நிறைந்த கேள்வி, தனித்த சிந்தனை, கருத்தில் தெளிவு சாதனைக்கு மதிப்பு எனலாம் அவர் மேடை போட்டு முழங்கியதில்லை. வேட்டி சால்வை அணிந்து அரசியல்வாதி வேடம் தரித்ததில்லை. தந்தவனுக்கே திருப்பி கொடு இது தான் அவருடைய செய்தி. அடித்தவனைத் திருப்பியடி என்பது இந்தச் செய்தியின் சாரம்சம். அறிவு ரீதியாகவும் விஞ்ஞான ரீதியாகவும் தமிழினம் வளர வேண்டுமென்று ஆசைப்பட்டு அதற்காக உழைத்தவர்.

தமிழன் ஓடிய இடமெல்லாம் அடி வாங்கினான் தமிழன் மலேசியாவில் அடி வாங்கினான் !ஓடினான்
தமிழன் பர்மாவில் அடி வாங்கினான்…! ஓடினான் தமிழன் அரேபியாவில் அடி வாங்கினான்…! ஓடினான் தமிழன் மும்பை, பெங்களூரியில் அடி வாங்கினான்…! ஓடினான் தமிழன் தென் ஆப்பிரிக்காவில் அடி வாங்கினான்…! ஓடினான் தமிழன் கேரளாவில் அடி வாங்கினான்…! ஓடினான் இப்படி போன இடமெல்லாம் அடி வாங்கிய தமிழன், ஒரே இடத்தில் மட்டும்தான் திருப்பி அடித்தான் அதுதான் இலங்கையில் திருப்பி அடித்த அந்த மறத்தமிழன் தான் பிரபாகரன் என்ற மா வீரன் …. அடிப்பவன் இனவாதி அடி வாங்கியன் ஒரு முறை திருப்பி அடித்தால் தீவிரவாதியா??????????????????

உலகத் தமிழினத்தின் எண்ணம்,சொல், செயல், மாற்றமடையக் காரணமானவர் பிரபாகரன்.
இனித் தமிழர் வரலாறு தூக்க நிலைக்குத் திரும்ப வாய்ப்பில்லை. அவர் அடியெடுத்த போராட்ட மரபு தொடரும். கூலிகள் என்றும் வந்தேறு குடிகள் என்றும் நாதியற்றவர்கள் என்றும் தூற்றப்பட்ட உலகத் தமிழர்களை வலிமை பெற்று உரிமை கோர வைத்தவர் தலைவர் பிரபாகரன்.
இணையத்தில் தமிழ் உலகின் முக்கிய மொழிகளில் ஒன்றாகத் திகழக் காரணமானவர். தமிழியலுக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் ஊக்கு கருவியாகத் திகழ்பவர். தமிழ் இலக்கியம், தமிழ்ப் பண்பாடு, தமிழன் தோற்றம், வளர்ச்சி பற்றிய ஆய்வுக்குத் தோன்றாத் துணையாக நிற்பவர்.

“ விடுதலைப் போராட்டம் என்பது இரத்தம் சிந்தும் புரட்சிகர அரசியல் பாதை. அவர் தொடர்ந்து பேசுகிறார் “விடுதலை என்ற இலட்சியத்தை நாம் இலகுவாகத் தேர்ந்தெடுக்கவில்லை. வரலாறுதான் அதை எம்மிடம் வலுக்கட்டாயமாகக் கையளித்துள்ளது சுதந்திரம் வேண்டுவதைத் தவிர வேறு வழி எதையும் வரலாறு எமக்கு விட்டு வைக்கவில்லை.”என்று பிரபாகரன்
கூறியிருக்கிறார்
பிரபாகரனின் தனிப்பெரும் பண்புகளை இங்கு எடுத்துக் காட்டலாம். குறைந்த பேச்சு, நிறைந்த கேள்வி, தனித்த சிந்தனை, கருத்தில் தெளிவு சாதனைக்கு மதிப்பு எனலாம் அவர் மேடை போட்டு முழங்கியதில்லை. வேட்டி சால்வை அணிந்து அரசியல்வாதி வேடம் தரித்ததில்லை. தந்தவனுக்கே திருப்பி கொடு இது தான் அவருடைய செய்தி. அடித்தவனைத் திருப்பியடி என்பது இந்தச் செய்தியின் சாரம்சம். அறிவு ரீதியாகவும் விஞ்ஞான ரீதியாகவும் தமிழினம் வளர வேண்டுமென்று ஆசைப்பட்டு அதற்காக உழைத்தவர்.

சாதி ஒழிப்பிற்கு அவர் முன்னுரிமை அளித்தார். சீதனக் கொடுக்கல் வாங்கலைத் தடைசெய்தார். மதச் சமத்துவத்தைப் பேணினார். தமிழீழ காவல்துறையை உருவாக்கி சட்ட ஒழுங்கை அமுலாக்கினார். எல்லாவற்றிக்கும் மேலாக அவர் பெண்கள் வாழ்வில் புரட்சிகர மாற்றத்தைத் ஏற்படுத்தினார். ஒரு புதுமைப் பெண்னை, புரட்சிகரப் பெண்னை தமிழீழ விடுதலைப்புலிகள் உருவாக்கினார்கள். அதன் தாக்கம் நிரந்தரமானது.
தேசியத் தலைவர் அவர்கள் ஒரு சந்தர்ப்பத்தில் “மகளிர் படையணினின் தோற்றமும் வளர்ச்சியும் எழுச்சியும் எமது இயக்கம் படைத்த மாபெரும் சாதனைகளில் ஒன்று “என்று சொன்னார்.
தன்னாட்சி பெற்ற தமிழீழத்திற்கான அரசியல் சாசனத்தை உருவாக்குவதற்காக உலகின் தலைசிறந்த அரசறிவியல் பேராசியர்களையும் புலிகள் அமைப்பில் உறுப்பியம் பெற்ற வல்லுனர்களையும் ஒன்றிணைத்து ஒரு வரைவைத் தயாரித்தார். சாசனவியலாளர்களால் அந்த வரைவு போற்றி பாதுகாக்கப்படுகிறது.
ஒடுக்கப்பட்ட இனம் தொடர்ந்து ஒடுங்கியிராது என்பதற்குப் பிரபாகரன் தொடுத்த விடுதலைப் போர் சாட்சியாக அமைகிறது பிரபாகரன் நேத்தாஜி சுபாஸ் சந்திரபோசை சேகுவேரா நெல்சன் மண்டேலா இவர்களை நேசித்தார். அவரைப் போலவே பிரபாகரன் தூய்மையாக வாழ்ந்தார் நேத்தாஜியின் போராட்டப் பங்களிப்பு இன்னும் சரிவர கணிப்பிடப் படவில்லை. மழுங்ககடிக்கப் படுகிறது என்று கூடச் சொல்லலாம்.
தமிழினத்தை கடந்த முப்பதிற்கும் மேலான வருட காலம் வழிநடத்தி வரும் பிரபாகரன் அவர்களின் தாக்கம் உலகத் தமிழினத்தால் மிக நன்றாக உணரப்படுகிறது. உலக தமிழ்ச் சமுதாயத்தில் எது நடந்தாலும் அவருடைய தாக்கம் இல்லாமல் நடக்க முடியாதளவிற்கு அவர் முத்திரை பதித்துள்ளார்.
பலரை வரலாறு படைக்கின்றது. ஒரு சிலர் வரலாற்றைப் படைக்கிறார்கள். அந்தச் சிலரில் ஒருவர் பிரபாகரன். மிக விரைவில் பிரபாகரன் யுகம் தோன்றும். அப்போது உலகம் நினைத்துப் பார்க்காத உயரத்திற்க்குத் தமிழினத்தைப் பிரபாகரன் தூக்கிச் சென்று நிறுத்தியதைத் தமிழினம் உணரும்.

இந்த உலகில் எங்கோ ஒரு இடத்தில் நடக்கும் கொடுமைகளை அணியாயங்ககளை கண்டு
உனக்கு அடக்க முடியாத கோபம் வருகிறதா ?
உன் கண்ணில் கண்ணீர் வருகிறதா ?
உன் மனம் போராட துடிக்கிறதா ?,
அப்படியானால் நாம் இருவரும் தோழர்களே -சேகுவேரா
ஒருவன் தன் வாழ்க்கையாலும் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டியதாலும் பல்லாயிரக் கணக்கானவர்களை தன் வழிப் படுத்தினால் அவன் என்றைக்குமே சாவதில்லை
சாவைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. என் துப்பாக்கியை எனக்கு பின்னால் வரும் தோழர்கள் எடுத்துக் கொள்வார்கள். தோட்டாக்கள் தொடர்ந்து சீரீ கொண்டே இருக்கும்
எங்கள் ஆயுத போராட்டம் மாராலாம் ஆனால் எங்கள் போராட்ட வடிவம் ஒருநாளும் மாறுவது இல்லை. எங்கள் போராட்டம் அடுத்த தலைமுறை கையில் சென்று விட்டது.