பல்லாயிரம் உறவுகள் திரண்டு துயிலுமில்லங்களில் சுடரேற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி
தாயகத்தில் மாவீரர் துயிலுமில்லங்களில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டது.
மாவீரர்களின் பெற்றோர்கள் மட்டுமன்றி விடுதலை வேட்கை கொண்ட பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு மாவீரச் செல்வங்களுக்கு மலர் தூவி சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.
தாயகத்தில் முக்கியமான துயிலுமில்லங்கள் அனைத்திலும் மாவீரர்களின் பெற்றோர் பொதுச்சுடரேற்றி வணக்கம் செலுத்தினர்.
முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லம் – பிரதான சுடரினை மேஜர் பசீலனின் தாயார் ஏற்றிவைத்தார்.
உடுத்துறை மாவீரர் துயிலுமில்லம் – பிரதான சுடரினை நான்கு மாவீரர்ரிகளின் தாயார் ஏற்றிவைத்தார்.
விசுவமடு, தேராவில் மாவீரர் துயிலுமில்லம் – பிரதான சுடரினை விசுவமடு மாவீரர் துயிலுமில்லத்தின் முதல் வித்துடல் லெப் நொடியவனின் தாய் ஏற்றி வைத்தார்.
முள்ளிவாய்க்கால் மாவீரர் துயிலுமில்லம் – மூன்று மாவீரர்ரிகளின் தாயார் ஏற்றிவைத்தார்.
மன்னார் மாவட்டம் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்திலும்,பெரிய பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்திலும் மாவீரர் தின நினைவேந்தல்கள் மிக உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் இடம்பெற்ற மாவீரர் தின நினைவேந்தல்களின் போது பொதுச் சுடரினை மூன்று மாவீரர்களின் தந்தையான எஸ்.ஞானப்பிரகாசம் ராசு ஏற்றி வைத்தார்.
பெரிய பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் பொதுச் சுடரினை கரும்புலி மாவீரரின் தாயர் திருமதி லூசியா ஏற்றிவைத்தார்.
கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம்
தீருவில் மாவீரர் துயிலுமில்லம்
கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் – பிரதான சுடரினை 3 மாவீரர்களின் தந்தையார் ஏற்றிவைத்தார்.