nimaal

இரு கால்களையும் இழந்த நிமாலின் மனிதாபிமானம்!

இறுதி யுத்தத்தின் போது இரண்டு காலையும் இழந்து விட்ட முன்னாள் போராளியான இசைக்கலைஞன் நிமால், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சியை சேர்ந்த மாணவிக்கு 50 ஆயிரம் ரூபா நிதியுதவி அளித்தார்.

கிளிநொச்சி, செல்வாநகரை சேர்ந்த மாணவியான சுரேஸ்நாத் ஜெனிக்கா என்ற மாணவி கடுமையாக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இவருக்கு சத்திரசிகிச்சை செய்வதற்கு ரூபா 8இலட்சத்து 50 ஆயிரம் வரையில் தேவைப்படும் என வைத்திய நிபுணர்களால் மதிப்பிடப்பட்ட நிலையில் ஜெனிக்காவின் சத்திரசிகிச்சைக்காக குடும்பத்தினரால் உதவிகள் கோரப்பட்டு புலம்பெயர் உறவுகளில் பலர் உதவ முன்வந்த நிலையில் நாளை ஜெனிக்காவுக்கு சத்திரசிகிச்சை நடைபெறவுள்ளது.

12

இந்நிலையில் ஜெனிக்கா மீது கரிசனை கொண்ட நிமால், தனது வலியின் வரிகள் இறுவட்டு வெளியீட்டு மூலம் அவுஸ்திரேலியா உறவான குவேந்திரன் கணேசலிங்கத்தின் ஒழுங்குபடுத்தலில் அவுஸ்திரேலிய புலம்பெயர் உறவுகளால் வழங்கப்பட்ட பணத்தில் ரூபா 50 ஆயிரத்தை இன்று ஜெனிக்காவின் தந்தையாரிடம் வழங்கி அவர் தனது சிறந்த மனிதாபிமானத்தை வெளிப்படுத்தினார்.

தனது துன்பங்களை மறந்த  நிமால், சிறுமி ஜெனிக்காவின் துன்பத்தை கண்டு துயருற்ற நிலையில் தனது திறமையினை பயன்படுத்தி இசை வெளியிட்டினை மேற்கொண்டு அதன் மூலம் பெற்றுக்கொண்ட தொகையினை அச்சிறுமியின் உயிரை காப்பதற்காக உதவியளித்தது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மனிதாபிமானத்தை மிகச்சிறந்த வழியில் காட்டிய நிமால் ஈழ சமுகத்துக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார்.