பால்ராஐ்யுக்கு பசிலன் வழங்கிய தண்டனை .!
1986ம் ஆண்டுகாலப்பகுதியில், மணலாற்றில்முந்திரிகைக்குளம் பகுதியில் ரோந்து செல்கின்றசிறீலங்கா இராணுவத்தினர் மீது தாக்குதல் ஒன்றை மேற்கொள்வதற்கு மேஜர்பசிலன் திட்டமிடுகின்றார்ரோந்துவரும் படையினரை தாக்கும்போது, வேறு பகுதியால் படையினருக்கு உதவிகள் வருவதைத்தடுப்பதற்கு (கட்டவுட்) பால்ராஜ்அண்ணை நிறுத்தப்
பட்டிருக்கின்றார்.
எதிர்பார்த்திருந்ததுபோல ரோந்துவந்த இராணுவத்தினர் மீது தாக்குதல்தொடங்கியது
எதிர்பார்ந்திருந்துபோல் ரோந்து வந்த இராணுவத்தினர் மீது தாக்குதல் தொடங்கியது
எதிர்பாராத அதிர்ச்சிகரத் தாக்குதலில் சிறிலங்காப்படையினர் பேரிழப்பைச் சந்தித்தனர்.
போராளிகளுககு எந்தவித இழப்புக்களுமின்றி தாக்குதல்முடிவடைந்தது.
இந்தத்தாக்குதலில்தான்விடுதலைப்புலிகளால் வரலாற்றில் ஒரே தடவையில் அதிகளவான ஆயுதங்கள் கைபற்றறபட்டன .
சுமார்22ஏகே47ரகத்துப்பாக்கிகள்கைப்பற்றப்பட்டிருந்தன சண்டைமுடிவடைந்து சிறீலங்காப்படையினரிடம்இருந்த ஆயுதங்களை பொறுக்கிக்கொண்டிருந்த போது, பால்ராஜ் அண்ணைக்கு தொடர்பெடுத்தபசிலண்ணை , “எங்கை நிக்கிறாய் சண்டைமுடிஞ்சுது வா” என்று கூற, பால்ராஜ் அண்ணை”இங்கைஉங்களுக்கு பக்கத்திலைதான் நிற்கிறன்”
என்று கூறியிருக்கிறார்.
திரும்பிப்பார்த்தபோதுபால்ராஜ்அண்ணையும்ஆயுதங்களைப்பொறுக்கிக்
கொண்டிருந்தார்.”எப்ப இங்கைவந்தனி?”எண்டுபசிலண்ணை பால்ல்ராஜ் அண்ணையிடம் கேட்டபோது, சண்டை தொடங்கேக்கையே வந்திட்டன்என்றுகூறியிருக்கின்றார்.
வழங்கப்பட்ட பணியை மேற்கொள்ளாமல், அங்கு வந்ததால் அவருக்குதண்டனை வழங்கினார் பசிலண்ணை .வேறுவழியால் உதவிக்கு இராணுவத்தினர் வந்திருந்ததால் அன்று அத்தனை போராளிகளும் இழப்புக்களைக்சந்திக்க வேண்டி வந்திருக்கும் என்பதை சுட்க்காட்டி
இவ்வாறான தவறுகள் ஏற்படாமல் இருப்பதற்காக அந்த தண்டனை வழங்குவதா கூறி
முந்திரிகைக்குளம் பகுதியில் இருந்து முல்லைத்தீவின் குமுழமுனைவரையும் நடந்தே வருமாறு கட்டளையிடுகின்றார்
அவரது கட்டளையை ஏற்றுக்கொண்டு.பால்ராஜ் அண்ணை நடந்தே குமுழமுனைக்கு
சென்றார். வழியில் பலரும் அவரை சைக்கிளில்ஏறுமாறு வற்புறுத்தியபோதும், வழங்கப்பட்ட
தண்டனையை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றுகூறியிருக்கின்றார். பின்நாட்களில் தன்னிடம் நின்றபோராளிகள், பொறுப்பாளர்கள் வழங்குகின்ற தண்டனையை ஏற்றுக்கொள்ளத் தயங்கினால் ,போராளிகளிடம் பால்ராஜ் அண்ணை பொறுப்பாளர் வழங்குகின்ற தண்டனைகளை ஏற்றுக்கொள்ளப் பழகவேண்டும். அதுவே எங்கள்தவறுகளைத் திருத்துவதற்கு வழிவகுக்கும் என்று, தனக்கு பசிலண்ணை வழங்கிய தண்டனையையும் அதனைத்தான் உறுதியோடு செய்து முடித்த இந்தச்சம்பவத்தை கூறி நினைவுகொள்வதுண்டு
-பசிலனின் இன்னொரு போர்முகம் பால்ராஜ் நூல் (பக்கம் 62)
மாவீரர் நாள் சிறப்பு பதிவிலிருந்து வேர்கள்.!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”