Fotor0205160745

கடைகள் தோறும் பிச்சை எடுக்கும் இருகால்களையும் இழந்த முன்நாள் போராளி

வவுனியாவில் கடைகள் தோறும் பிச்சை எடுக்கும் இரு கால்களையும் இழந்த முன்நாள் போராளி முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டிசுட்டான் பகுதியை சேர்ந்த இரத்தினம் புஸ்பரஜீவன் வவுனியாவில் கடைகள் தோறும் கடை ஒன்று கட்டவேண்டும் என காரணம்காட்டி பிச்சை எடுத்து வருகிறார். இச்செயற்பாடு குறித்து அவரிடம் கேட்டபோது இறுதி யுத்தத்தின்போது எனது இரண்டு கால்களையும் இழந்துவிட்டேன் எனக்கு இரண்டு குழந்தைகள் தடுப்பில் இருந்து புனர்வாழ்வு பெற்று விடுதலையாகி வந்தபோது எனது மனைவியும் என்னை பிரிந்து வேறு திருமணம் செய்து சென்றுவிட்டார்.

Fotor0205160944

எனக்கு இருக்கும் ஒரு துண்டு காணியில் ஒரு கடை கட்டி எனது வாழ்க்கையை நடத்த நினைக்கிறேன் ஒரு சில நிறுவனங்களில் இருந்து உதவிகள் கிடைத்தபோதும் அவை எனது வாழ்வாதாரத்திற்கு போதுமானதாக இல்லை நிரந்தரமான ஒரு தொழில் அல்லது வாழ்வாதாரம் இருக்கும் பட்சத்தில் என்னால் வாழ்க்கையை கொண்டு நடத்த முடியும். எல்லாவற்றையும் இழந்து இழப்பதற்கு எதுவுமே இல்லாமல் இருக்கும் என்னை போன்றவர்கள் இலைமறை காயாக இன்னும் இருக்கிறார்கள். வடமாகாணசபையால் முன்நாள் போராளிகளுக்கு உதவி வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கிறார்கள் ஆனால் அவ்வாறான உதவிகள் எதுவும் எனக்கு வழங்கப்படவில்லை என்பதோடு எங்களை போன்றோரை இச்சமூகம் ஒதுக்கி வைப்பதாகவும் தெரிவித்தார்.


விடுதலைப்புலிகளின் போராட்டத்தின் பயனாக பெற்றுக்கொள்ளப்பட்ட வடமாகாணசபையால் இன்று முன்னாள் போராளிகள் ஒதுக்கப்படுவது வேதனைக்குரியது. அத்துடன் தேர்தல் காலங்களில் பிரபாகரன் படத்தையும் புலிகளின் போராட்டத்தையும் விலைபேசி ஓட்டுக்களை வாங்கும் அரசியல்வாதிகள் பின்பு அவர்களை மறந்து போவதும் புலம்பெயர் தமிழர்களிடம் அவர்களை காட்டி உதவிசெய்ய வேண்டும் என கூறி பணத்தை பெற்று போராளிகளுக்கு கிள்ளித் தெளிப்பதும் என தங்கள் வாழ்க்கையை; வழப்படுத்துகின்றனர்.Fotor0205161110

வடமாகாணசபை அமைச்சர்கள் கோடிஸ்வரர்களாகவும், உறுப்பினர்கள் இலட்சாதிபதியாகவும் மாறியிருக்கிறார்கள் ஆனால் வறுமையில் வாடும் மக்கள் தொடர்ந்து ஏழைகளாகவே…..
போராளியின் தோலைபேசி இலக்கம் -0094778964527

மனமுள்ளோர் தயவு செய்து உதவி செய்யுங்கள்…

என் மக்கள் என் நாடு என் இனம் என்று  போராடியவன் இன்று வாழ வழி இன்றி படும் வேதனை யாருக்கு தெரியும் ?
“உங்களால் முடிந்த வரை இதைப் பகிரவும்”

 

 

(www.eelamalar.com)