பிரபஞ்சத் தமிழர்க்கெல்லாம் பிரபாகரன்தான் தமிழன்
நம்பிக்கை வில்லிலே
முன்னேற்ற நாண் பூட்டி
தம்பிக்கு பின்னாலே
எல்லோரும் வாருங்கள்
ஈராயிரம்மாண்டு
ஈழத்தமிழர் பெற்றவரம்
வாராது வந்துவிட்ட வரலாற்றின்
வலிய கரம் போராடும்
மனத்தோடு வேராக
நானிருப்பேன்
என்கின்ற விளைக்கின்ற
வீரக்குணம்
யாரால்அது யாரால் அது
சின்னப் பூஞ்சிரிப்பை
செவ்விதழிலே தவளவிட்டு
சீறும் சிந்தையிலே
விடுதலைக்காய் கணல் மூட்டி
இன்னமும் பணிதொடர்வேன்
என்று ஈறுமாப்போடு
இருக்கும் அண்ணண்
“பிரபாகரன்”என்னும்
அற்புதத்தின் அற்புதமே
அந்த கரிகாலன் இரு விழியை
உற்றுப்பாருங்கள்
உங்கள் பணிக்கான கட்டளை
அவன் விழிக்குள்ளே
தெறிகின்றதா
வேலையினை தொடருங்கள்
பிரபஞ்ச தமிழர்க்கெல்லாம்
பிரபாகரன்தான் தமிழன்
-பிரபாசெழியன்.