பிரபாகரனியம் – பகுதி 10

பகுதி 10 பிரபாகரனுக்கும் உமாமகேஸ்வரனுக்கும் இடைப்பட்ட சண்டை தொடர்பான சிறு பகுதிதான்.

பாகம் 11 இல் புலிகளின் முதலாவது தாக்குதல் சம்பவம் பற்றிய முழு கள நிலவரம் எழுதப்படும்

ஊர்மிளா என்னும் பெண்ணுடன் தவறான உறவை வைத்திருந்ததால் நீக்கப்பட்ட உமாமகேஸ்வரனுக்கும் பிரபாகரனுக்கும் இடையில் பிரச்சனை பூதாகரமாக வெடித்தது. உமாமேஸ்வரன் சில இளைஞர்களை சேர்த்துக்கொண்டு புலிகளுக்கெதிரான பொய்யான பிரச்சாரங்களை பரப்பியும் வசை பாடிக்கொண்டும் இருந்தனர். இது தமிழ் மக்களிடையே மிகப்பெரிய கவலையை உண்டாக்கியது. “பெடியல்களுக்க சண்டையாம்.” என்ற கதை ஊர்முழுக்க பரவ ஆரம்பித்தது.. இப்போது குழு இராண்டாக பிளக்கிறது. பிரபாகரன் குழு- உமாமகேஸ்வரன் குழு என இரு பிரிவுகளாக பிரிந்து நின்றது.

இதற்கிடையில் விடுதலைப்புலிகளின் மத்திய குழு கமிட்டி இரு முறை கூடியது. ஒரு முறை யாழ்ப்பாணத்திலும் மற்றைய முறை வவுனியாவிலும் கூடியது, அந்த குழுவில் இயக்கம் பற்றி பலதும் கலந்தாலோசிக்கப்பட்டது. முடிவில் விடுதலைப்புலிகள் இயக்கம் மக்கள் இயக்கமாக அறிவிக்கப்பட வேண்டும் என பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவித்தனர். ஆனாலும் பிரபாகரனுக்கு அதன் மீது விருப்பம் இல்லை.. கட்டுக்கோப்பான இராணுவ இயக்கமாக இருக்க வேண்டும் எனபது அவர் நோக்கமாக இருந்தது.

ஆனாலும் கமிட்டியில் பலரும் “மக்கள் இயக்கமாக இருக்க வேண்டும் என்னும் கருத்தையே தொடர்ந்து முன்வைத்தனர், அது பிரபாகரனுக்கு பிடிக்கவில்லை. சரி உங்கள் விருப்பப்படியே செய்யுங்கள். ஆனால் என் பேச்சுக்கு மரியாதை இல்லாத இடத்தில் நான் இருக்க மாட்டேன்” எனக்கூறிக்கொண்டு இயக்கத்தை விட்டு வெளியேறினார். பலரும் தடுத்தும் கேட்காமல் இயக்கத்தை விட்டு வெளியேறினார்.

வீட்டுக்கு போலீஸ் வரும் என்பதால் இயக்கத்தை விட்டு வெளியேறி வீட்டிற்கு செல்லவில்லை.. வல்வெட்டித்துறையில் இருந்த மாமா வீட்டிற்கு சென்றார். அங்கு சில காலம் தங்கி இருந்தார். . ஆனாலும் அவருக்கு நிம்மதி இல்லை.. இயக்கம் அழிந்து விடுமோ என்ற பயம் மனதுக்குள் இருந்தது.

அதனை உணர்ந்த மாமா “டெலோ அமைப்பின் தலைவரான தங்கதுரையை (பகுதி ஒன்றில் சொல்லப்பட்ட அதே தங்கதுரை-குட்டிமணிதான்) சந்திக்க ஏற்பாடு செய்தார்… தங்கதுரையும் பிரபாகரனை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் இந்தியாவின் தமிழகத்தில் திருச்சி-மதுரையில் அமைக்கப்பட்ட டெலோ அமைப்பின் பயிற்சி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

அதன் படி தமிழகம் வந்த பிரபாகரன் டெலோ அமைப்பின் உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்து வந்தார், ஆனாலும் அவருக்கு அதில் விருப்பம் இல்லை.. கட்டுக்கோப்பான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பையே அவர் விரும்பினார், ஆதலால் தனக்கு நம்பிக்கையான சீலன் எனப்படும் சார்ள்ஸ் அன்ரனி,பேபி சுப்பிரமணியம்,பண்டிதர்,கிட்டு,ராகவன் என்பவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி இயக்கத்தை தொடர கலந்தாலோசித்தார்.
இறுதில் பல போராளிகளின் கட்டாயத்தின் பேரில் 1980 இல் புலிகள் அமைப்பில் பிரபாகரன் மீண்டும் தலைமையேற்றார்.
1980 இல் தலைமையேற்ற பின்னர் 1981 இல் தமிழகம் நோக்கி புறப்பட்டார் பிரபாகரன். தமிழகத்தில் வேதாரண்யத்தில் வாழ்க்கையை கழிக்கத்தொடங்கினார், புலிகள் இயக்கத்தை பலப்படுத்துவதிலும் பயிற்சிகளை வழங்குவதிலும் கண்ணும் கருத்துமாக இருந்தார்.

இதற்கிடையில் தவறான நடந்தை காரணமாக விலக்கப்பட்ட உமாமகேஸ்வரன் புலிகளுக்கு எதிராக செயற்படத்தொடங்கினார்… ப்ளொட் என்னும் இயக்கத்தை ஆரம்பித்தார்.அதுமட்டுமல்லாது தென்னிலங்கை சிங்களவர்களோடும் உறவுகளை ஏற்படுத்திக்கொண்டான், அத்துடன்
பிராகரனுக்கு தமிழ் சமூகத்தில் இருக்கும் நல்ல பெயரை களங்கப்படுத்த வேண்டும் என்பதற்காக “புதியபாதை” என்னும் ஒரு பத்திரிக்கை மூலம் புலிகளின் நோக்கம்/செயற்பாடுகளைப்பாற்றியும் பிரபாகரனை பற்றியும் அவதூறு பரப்பி வந்தார்.
இதனால் புலிகள் ஆத்திரமடைந்தனர். சர்வதேச ரீதியில் தமிழர் போராட்டத்திற்கு பின்னடைவு ஏற்படும். ஊடகத்தின் மூலம் தமிழர் போராட்டம் கொச்சைப்படுத்தப்படுவதாக நினைத்தனர்..புலிகளின் கலந்துரையாடலின் பின்னர் புதிய பாதை என்னும் பத்திரிகையின் பொறுப்பாளரும் உமாமகேஸ்கரனின் வலது கையுமான சுந்தரம் என்பவரை தீர்த்துக்கட்ட முடிவெடுத்தனர். புலிகளின் குழு கூடி இந்த முடிவை எடுத்தது. தமிழரின் உரிமைக்காக போராடும் புலிகளுக்கு எதிராக அதுகும் தமிழ் பத்திரிக்கையே குரல் கொடுத்தால் அது சர்வதேசத்தில் தமிழர் உரிமைப்போராட்டத்தின் மீது கரும்புள்ளியாக அமையும் என புலிகள் நினைத்தனர். ஆகையால் உமாமகேஸ்வரனுக்கு ஆதரவாகவும் புலிகளுக்கு எதிராகவும் நடத்தப்பட்டு வந்த புதிய பாதை என்னும் பத்திரிக்கையில் விரோதமாக எழுதி வந்த சுந்தரம் என்பவனை சார்ள்ஸ் அன்ரனி என்னும் சீலன் சுட்டுக்கொன்றார்..
இது உமாமகேஸ்வரனுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. .தனது வலது கரமாக செயற்பட்டு வந்த சுந்தரம் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு பிரபாகரனை பழிவாங்க வேண்டும் என உமாமகேஸ்வரன் வெறி கொண்டு அலைந்தார்,; அந்த நேரத்தில் பிரபாகரன் தமிழகத்தில் இருந்தார்… பகை உச்சகட்டமாக முற்றியது.. இதற்கிடையில் உமாமகேஸ்வரனும் 1982 பெப்ரவரி 25ம் திகதி படகின் மூலம் சென்னை வந்தடைந்தார்… தமிழகம் வந்த உமாமகேஸ்வரன் கவிஞர் பெரும்சித்தனார் வீட்டில் தங்கி இருந்தார்..

பிரபாகரன் தமிழகத்தில் இருப்பது உமாமகேஸ்வரனுக்கு தெரியும்.. பிரபாகரனை பழிவாங்க வேண்டுமென என்பதற்காகத்தான் உமாமகேஸ்வரன் தமிழகமே வந்தார்
இந்த நிலையில் 1982-ம் ஆண்டு மே 19-ந்தேதி இரவு 9.45 மணிக்குபிரபாகரனும், ராகவனும் ஆங்கிலப்படம் பார்த்துவிட்டு சென்னை பாண்டிபஜாரில் உள்ள ஒரு ஓட்டலுக்குச் சென்றனர். அந்த ஓட்டலில் உமாமகேஸ்வரன், கண்ணனுடன் உணவு அருந்திவிட்டு வெளியே வந்துமோட்டார் சைக்கிளை `ஸ்டார்ட்’ செய்தார். அவர்களை பிரபாகரன்பார்த்துவிட்டார். அதே சமயம் கண்ணனும், பிரபாகரனைப் பார்த்துவிட்டு, “அதோ பிரபாகரன்!” என்று உமா மகேஸ்வரனிடம் கூறினார்.

இருவரிடமும் துப்பாக்கி இருந்தது. உமாமகேஸ்வரனின் துப்பாக்கி தோட்டாக்களை சுடும் முன்பே 6 புள்ளட்டுக்கள் பிரபாகரனின் துப்பாக்கியில் இருந்து சீறீப்பாய்ந்தது. . உமாமகேஸ்வரனின் நண்பனின் காலில் குண்டுகள் பாய்ந்தன. உமாமகேஸ்வரன் சுதாகரித்துக்கொண்டார். ,உடனடியாக பக்கத்தில் இருந்த மோட்டார் வண்டியை எடுத்துக்கொண்டு ஓடித்தப்பிவிட்டார். பிரபாகனும் விடுவதாக இல்லை.. துரத்தினார். இறுதியில் தமிழக போலீசாரால் கைது செய்யப்படுகிறார்.

பிரபாகரன் வாழ்க்கையில் கைதானது அதுவே முதன்முறை.. பிரபாகரனுக்கு அடுத்து உமாமகேஸ்வரனும் கைது செய்யப்பட்டு வழக்கு தொடரப்படுகிறது..

இதற்கிடையில் இந்த விடயம் இலங்கை அரசுக்கு தெரியவரவே பிரபாகரனையும் உமாமகேஸ்வரனை தந்தால் 10 லட்ச ரூபாய் சன்மானமாக தருவதாக இலங்கை அரசு அறிவித்தது… தமிழக தமிழர்கள் அதை எப்படியும் விடமாட்டார்கள் என்பது பிரபாகரனுக்கு நங்கு தெரியும்…

அந்த நேரத்தில் எம்.ஜி,ஆர் ஆட்சி நடந்து கொண்டிருந்தது….தமிழ் இளைஞர்கள் கைதானது அவருக்கு மன வருத்தத்தை அளிக்கிறது..உடனே போலீஸ் தலைமை அதிகாரியை அழைத்து “பையன்கள் விசயம்.கொஞ்சம் பார்த்து நடந்து கொள்ளுங்கள்” என தயவாக வேண்டுகிறார்.. இது ஒரு புறம் இருக்க இலங்கையில் இருந்து வந்த வழக்கறிஞர் சந்திரஹாசன்(செல்வநாயகத்தின் மகன்) கலைஞர் கருணாநிதியை சந்திக்கிறார்,. கருணாநிதி ஆட்சியில் இல்லாவிட்டாலும் இந்திரா காந்தியுடன் நல்ல நட்பையும் கூட்டணியையும் கொண்டிருந்ததால் கருணாந்தி மூலம் பிரபாகரனின் விடுதலைக்கு வேண்டுகிறார் சந்திரஹாசன்… கருணாநிதியும் இந்திராகாந்தி அம்மையாருடன் பேசுவதாக வாக்குறுதி கொடுக்கிறார்,
\
தமிழக இளைஞர்களும் அரசியல் தலைவர்களும் ஐயா பழநெடுமாறனும் பலமாக குரல் கொடுக்கிறார்கள்..இறுதியில் இந்திரா காந்தி இருவரையும் விடுதலை செய்கிறார்,.. காரணம் அந்த நேரத்தில் இலங்கை சிங்கள அரசு அமேரிக்காவுக்கும் சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் ஆதரவாக செயற்பட்டபடியால் சிங்கள அரசின் கோரிக்கையை இந்திரா காந்தி ஏற்கவில்லை…. இறுதியில் இருவரும் விடுதலை செய்யப்படுகிறார்கள்

விடுதலையின் பின்னர் உமாமகேஸ்வரன் பெரும்சித்தனார் வீட்டில் சென்னையிலும் தலைவர் பிரபாகரன் மதுரையின் ஐயா பழநெடுமாறன் வீட்டிலும் தங்குகின்றனர். பிரபாகரனுக்கு ஐயா பழநெடுமாறன் குடும்பமும் பழநெடுமாறனும் சொந்த சகோதரர்கள் போல ஆகினர். தொடந்து 7 மாதங்கள் அங்கேயே தங்கி இருந்தார் பிரபாகரன்………………………..

விடுதலைப்புலிகளின் முதலாவது தாக்குதல் நாளை………………………………