பிரபாகரனியம் பகுதி 11

பாண்டி பஜார் சண்டையைத்தொடர்ந்து பிரபாகரனும் உமாமகேஸ்வரனும் விடுதலைசெய்யப்பட்டாலும் தமிழர்களுக்கான போராட்ட செயற்பாடுகள் தமிழகத்திலும் இந்தியாவிலும் சற்று மட்டுப்படுத்தப்பட்டே இருந்தது. வெளிப்படையாக இயங்க முடியாமல் இருந்தது.

இதற்கிடையில் புலிகள் அடுத்த கட்டத்திற்கு தயாராகினர்.. ஆயுதங்கள் போராட்டத்திற்கு தேவை. ஆயுதங்களை பெற பணம் போதுமானதாக இல்லை. என்ன செய்யலாம்??
ஏன் பணம் ????

ஏதிரியை அடிக்க எதிரியிடம் இருந்தே ஆயுதங்களை எடுத்துக்கொள்லலாம்…. புலிகள் பெரிய தாக்குதலுக்கு தயாராகினர்.. இலங்கை சிங்கள போலீஸ்/இராணுவத்திற்கு எதிராக நடந்த முதல் தாக்குதல் இதுதான்,

அதன்படி 1982 அக்டோபர் 27 இல் சாவகச்சேரியில் அமைந்திருந்த போலீஸ் நிலையத்தை தாக்க திட்டமிட்டார்கள் புலிகள். அதன்படி 8 உறுப்பினர்கள் கொண்ட குழு தாக்குதலுக்கு தயாரானது. சகலரும் சார்ள்ஸ் அன்ரனி எனப்படும் சீலன்தான் தாக்குதலுக்கு தலைமை தாங்கினார். மற்றும் ரகு,மாத்தையா,புலேந்திரன்,சந்தோசம்,சங்கர் ஆகியோர்தான் தாக்குதலுக்கு சென்றவர்கள்.. இரண்டு மாடிக்கட்டிடத்தில்தான் அந்த போலீஸ் நிலையம் அமைந்திருந்தது. தாக்குதலுக்கு நேரம் குறிக்கப்பட்டது,

ஆனால் கையில் பெரிய நவீன ஆயுதங்கள் எல்லாம் இல்லை. வெறும் நாட்டுத்துப்பாக்கிகள்தான்.. தமிழர் புலிப்படை அந்த ஆயுதங்களுடன் ஒரு மினி பஸ்சில் (Mini Bus) போலீஸ் நிலையத்தை அடைகிறது.. ஆவேசமாக போலீஸ் நிலையத்தை தாக்கி அழிக்கிறார்கள். வேறும் 15 நிமிடம்தான்.. சண்டை ,முடிகிறது… பல இயந்திரத்துப்பாக்கி,கைக்குண்டுகள் என பல ஆயுதங்கள் கைப்பற்றப்படுகின்றன,.. வந்த பஸ்சிலேயே மின்னல் வேகத்தில் சென்று மறைகிறது.

ஆனால் போலீஸ் சுட்டதில் புலேந்திரன்,ரகு,மற்றும் சீலன் ஆகியோர் காயமடைந்தனர், அதிலும் சீலனுக்கு பலத்த காயம், முழங்காலில் துப்பாக்கித்தோட்டா பாய்ந்தது.. காலின் சவ்வு கிழிந்ததால் அவரால் நடக்கவோ ஓடவோ முடியவில்லை.

போலீஸ் தாக்குதலுக்கு காரணமானவர்களை தேடியதால் யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளரான நித்தியானந்தன்-நிர்மலா தம்பதிகள் வீட்டில் சீலன் தங்கி இருந்தார். அது பாதுகாப்பான இடம் என்பதால் அங்கு மறைந்து இருந்தார்,2 வாரம் தங்கியிருந்த பின்னர் மேலதிக சிகிச்சைக்காக தமிழகத்திற்கு படகின் மூலம் செல்ல ஆயத்தமானார். காயம் பட்ட ஒருவன் எப்படி தனியாக செல்ல இயலும்.. சரி சங்கரும் கூடவே செல்லலாம் என முடிவெடுத்து தமிழகம் கொண்டு வந்து சீலனை இறக்கிவிட்ட பின்னர் இலங்கை திரும்புகிறான்.

இலங்கை திரும்பிய பின்னர் அடைக்கலம் தந்தமைக்காகவும் சீலன் நலமாக உள்ளான் என்னும் செய்தியை சொல்லவும் நித்தியானன் வீட்டிற்கு செல்கிறார். சென்று செய்தியை கூறி முடிக்கும் முன்பே சிங்கள இராணுவம் அந்த வீட்டை சுற்றி வளைக்கிறது. சுற்றி வளைக்கப்பட்டதை உணர்ந்த சங்கர் வீட்டை விட்டு தப்பி ஓட முயற்சிக்கும் போது சிங்கள இராணுவத்தால் சுடப்படுகிறான்.

2 குண்டுகள் வயிற்றை துளைத்து இரத்தம் வெள்யேறுகிறது.. வயிற்றில் கையை பொத்திப்பிடித்த படி 3 கிலோ மீற்றர் வரை ஓடுகிறான்.. கையில் இருந்த கைத்துப்பாக்கியை நண்பர்களிடம் ஒப்படைத்த பின்னர் மயங்கி விழுகிறார், அருகில் இருந்த தோழர்கள் உடனடியாக வயிற்றை ஒரு துணியால் கட்டி படகில் ஏற்றி தமிழகம் அனுப்புகிறார்கள்…

குற்றுயிராய் வந்த சங்கர் கோடியக்கரையில் இறக்கப்பட்டு ஒரு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுகிறார். சங்கரின் வயது 22. தீவிரமாக சிகிச்சை அளிக்கபடுகிறது.. விடயத்தை கேள்விப்பட்ட பிரபாகரன் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு விரைகிறார். ஆனாலும் சங்கரின் உயிர் ஒத்துழைக்கவில்லை.. பிரபாகரன் அறையில் நுழைந்த சில விநாடிகளிலேயே சங்கரின் உயிர் பிரிகிறது. பிரபாகரனின் கண்முன்னே சங்கரின் உயிர் பிரிகிறது,.. சங்கர்தான் புலிகள் அமைப்பில் முதன் முதல் இறந்த மாவீரன்..

ஆனாலும் பிரபாகரன் சங்கரின் இறப்பை பெரிது படுத்தவில்லை. காரணம் வெறும் 30 பேர் கொண்ட குழுவில் ஒருவன் இறந்து விட்டான் என்று தெரிந்தால் மற்ற இளைஞர்கள் மன சோர்ந்து விடுவார்கள். ஆகவே அவன் இறப்பை பெரிதுன் படுத்தவில்லை.. அந்த சம்பவம் நடந்து 7 வருடங்கள் கழித்து தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க சங்கர் இறந்த நாளான நவம்பர் 27 ஐ மாவீரர் நாளாக அறிவித்தது..

அன்றிலிருந்து வருடா வருடம் நவம்பர் 27 தமிழீழ மாவீரர் நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

சங்கரின் இழப்பு பிரபாகரனுக்கு பெரும் மனத்தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
ஆனால் விதி விட்டுவைக்கவில்லை,, பிரபாகரனின் தலையில் அடுத்த இடி விழுகிறது. பிரபாகரனால் இறுதி வரை மறக்க முடியாத அந்த சோகமான சம்பவம் ஈழத்தையே சோகத்தில் ஆழ்த்தியது..
சாவகச்சேரி போலீஸ் நிலையத்தை தாக்கி அழிக்கும் போது காலில் காயமடைந்த சீலன் தமிழகத்தில் சிகிச்சை முடிய ஈழம் திரும்புகிறார். ஆனாலும் கால் முழுமையாக குணம் அடையவில்லை..

ஆயுதங்களும் வெடிமருந்தும் அதிகம் தேவை என்பது சீலனின் குறிக்கோள். அதற்காக மின்சாரத்தில் வெடிக்கும் எக்ஸ்ப்ளோடரை கைப்பற்ற ஒரு திட்டம் போடுகிறார், வடக்கே காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் அந்த பொருள் இருப்பதாக கேள்விப்பட்ட்தும் இராணுவத்தை போல வேடமணிந்து ஒரு ஜீப் வண்டியில் செல்கிறார்கள் விடுதலைப்புலிகள். இராணுவத்தை போலவே சிங்களத்தில் சரளமாக பேசத்தெரிந்தவர் சீலன்… தான் இராணுவ அதிகாரி எனக்கூறி சீமெந்து ஆலைக்குள் நுழைந்து 5 எக்ஸ்ப்ளோடரகளை எடுத்துக்கொண்டு தலைமறைவாகிறார்கள் சீலன் தலைமையிலான புலிகளின் குழுவினர்,

இந்தச் சூழ்நிலையில் புலிகள் இருக்கும் இடம் பற்றி ராணுவ அதிகாரி மேஜர்சரத் முனசிங்கேவுக்கு, உளவாளிகள் மூலம் தகவல் கிடைத்தது. ஒரு பஸ்ஸில் பொதுமக்கள் போல சிங்கள இராணுவத்தினர் செல்கிறார்கள்… சீலன் இருக்கும் இடத்தைன் அடையும் முன்பே றோட்டில் இரண்டு சைக்கிளில் 3 தமிழ் இளைஞர்கள் செல்வதை கவனித்த இராணுவ அதிகாரி அதில் சீலனும் இருப்பதையும் அவன் கையில் இயந்திரத்துப்பாக்கி இருப்பதையும் கண்டுவிடுகிறார்,

உடனே பஸ்ஸை சைக்கிளின் குறுக்காக நிறுத்தி ப்ரேக் அடிக்கிறான் அந்த சிங்கள இராணுவ அதிகாரி,, சீலனுக்கு புரிந்து விட்டது. பொதுமக்கள் போல பஸ்ஸில் வந்தது சிங்கள இராணுவம் என்று…

உடனேயே சைக்கிளை கீழே போட்டு விட்டு ஓடுகிறார்கள். 100 மீற்றர் தாண்டும் முன்னரே ஆனந்தன் என்னும் போராளி துப்பாக்கிச்சூடு பட்டு விழுகிறார்.

சீலனால் ஓடமுடியவில்லை,, ஏற்கனவே கால் சவ்வு கிழிந்து தமிழகத்தில் சிகிச்சை பெற்றவர். வேகமாக ஓடியதால் கால் சவ்வு மேலும் கிழிந்தது. ஓடவே முடியாது என்பதை உணர்கிறார், ஆனால் சிங்களவனிடம் பிடிபட்டால் ஆயுதமும் பறிபோய்விடும்.. புலிகளின் இரகசியங்களும் வெளிப்பட்டுவிடும்.

முடிந்தவரை அவரை அருணா என்னும் மூன்றாவது போராளி இழுத்துக்கொண்டு ஓடமுயன்றும். முடியவில்லை. அவர்களை ராணுவத்தினர் நெருங்கிக்கொண்டிருந்தனர். தன்னால் தப்பிக்க முடியாது ன்பதை உணர்ந்த சீலன், ஒரு பயங்கர சோகமான முடிவை எடுத்தார்.. வலியால் துடித்த சீலன் பின்வருமாறு கூறினார்
“என்னைச் சுட்டுக் கொன்றுவிட்டு நீ ஆயுதத்தை எடுத்துக்கொண்டு ஓடிவிடு” என்று கத்தினார். அருணாவால் அதை செய்ய முடியவில்லை. இல்லை நான் ஆயுதத்தையும் உன்னையும் காப்பாற்றுவேன் என விடாப்பிடியாக சீலனை காப்பாற்ற முயற்சித்தார்.

ஆனால் சீலனுக்கு தெரியும் சிங்களவன் பிடித்து சித்திரவதை செய்து இயக்க இரகசியங்களை வாங்கிவிடுவான் என்று..
மீண்டும் மிக அதட்டலாகவும் சத்தமாகவும் அருணாவைப்பார்த்து கத்துகிறார். கண் முழுவதும் கண்ணீர்.
“நான் சொல்வதைச்செய். என்னைச்சுடு” என்று உத்தரவிட்டார்.

அருணாவுக்கு வேறு வழி தெரியவில்லை. எதிரிகள் நெருங்கிவந்துவிட்டனர். சிந்திப்பதற்கு நேரம் இல்லை. ஒரு துப்பாக்கிக்குண்டு மின்னல் வேகத்தில் வெளிப்படுகிறதுல், சீலனின் தலையைத் துளைத்து மூளையை சிதறடித்தது.. அடுத்த கணம் சீலன் ஈழத்தை விட்டு தான் நேசித்த ஈழமண்ணை விட்டு ஒரேஅடியாக பிரிகிறார், சீலன் உடலைஅங்கேயே போட்டுவிட்டு, இயந்திரத் துப்பாக்கியுடன் அருணா ஓடினார். அவரை நோக்கி ராணுவத்தினர் சுட்டனர். அவர் கையில் குண்டு பாய்ந்தது. அந்தக் காயத்துடன் தப்பிய அருணா, ஒரு காரை நிறுத்தி அதில்ஏறிக்கொண்டு, தப்பி விட்டார்.

பிரபாகரனால் அதை தாங்கிக்கொள்ளவே முடியவில்லை…. கண்கள் முழுவதும் கண்ணீர். சத்தமாக அழுகிறார், பிரபாகரனால் சீலனை மறக்கவே முடியவில்லை. கிட்டத்தட்ட பிரபாகரனின் வலது கரமாக செயற்பட்டவர்..

இலங்கை சுதந்திர தினத்தில் திருகோணமலை இந்துக்கல்லூரியில் ஏற்றாப்பட்ட இலங்கைக்கொடியை பொஸ்பரஸ் என்னும் இரசாயனம் மூலம் கொடி பாதி ஏறிக்கொண்டு இருக்கும் போது எரித்துவிட்டு புலிகள் இயக்கத்தில் இணைந்தவர்.. அவரின் மற்றொரு பெயர்தான் சார்ள்ஸ் அன்ரனி
சீலன் என்கிற சார்லஸ் அந்தோணியின்தியாகம் விடுதலைப் புலிகளின் நெஞ்சை நெகிழச் செய்தது.
(அவரது நினைவாக தன் மகனுக்கு சார்லஸ் அந்தோணி என்ற பெயரைபிரபாகரன் சூட்டினார்)

குறுகிய காலத்திற்கும் சங்கர்,,ஆனந்தன் ,சங்கர்,,சீலன் என்ற மூவரை இழந்து விட்டோம் என்பது பிரபாக்ரனுக்கு பெரும் வருத்தமாக இருந்தது. அதற்கு பழிவாங்க பிரபாகரனே களத்தில் இறங்குகிறார்,

1983ம் ஆண்டு ஜுலை 23ந்தேதி, ராணுவ ரோந்து வண்டியை கண்ணி வெடி வைத்து தகர்ப்பது என்று முடிவுசெய்யப்பட்டது.

திட்டத்தின் படி பிரபாகரன் செல்லக்கிளி உட்பட 14 புலிகள் திருநெல்வேலி சந்தியில் காந்திருந்தனர். சிங்கள இராணுவ வாகனம் அந்த வழியே வரும் எனபது எல்லாருக்கும் பிரபாக்ரனுக்கு தெரியும். சிங்கள இராணுவம் வரும் பாதையில் கண்ணிவெடிகளை புதைத்து வைத்தனர்….

புதைத்துவிட்டு சிங்களவனின் இராணுவ லாரியின் வருகைக்காக காத்திருக்கிறார்கள்,,,

அதோ வருகிறது எதிரியின் வாகனம் . இரண்டு வாகனம், ஒன்று போலீஸ் ஜீப். பின்னால் இராணுவ லாரி… லாரியும் ஜீப்பும் கன்னிவெடிக்கு அருகே நெருங்கியதும் செல்லக்கிளி சுவிச்சை அழுத்துகிறார்..

கிராமமே அதிர்கிறது.. போலீஸ் ஜீப் வெடித்துச்சிதறுகிறது… அதிஷ்டவசமாக இராணுவ லாரி தப்பித்துவிடுகிறது கண்ணிவெடியிலிருந்து……………………

ஆனால் பிரபாகரன் விடவில்லை.
சாலையில் பதுங்கி இருந்த விடுதலைப்புலிகள், ராணுவத்தினரை நோக்கிசரமாரியாகச் சுட்டனர். இந்த சம்பவத்தில் 13 சிங்கள ராணுவத்தினர்பலியானார்கள். வெற்றிக்களிப்புடன் வந்த விடுதலைப்புலிகள், செல்லக்கிளியைக் காணாமல் திடுக்கிட்டனர். அவர் துப்பாக்கி சண்டைபோடவில்லை. அருகில் உள்ள கட்டிடத்தில் இருந்து எக்ஸ்ப்ளோடரைஇயக்கினார். அங்கே போய்ப் பார்த்தபோது, மார்பில் குண்டு பாய்ந்துசெல்லக்கிளி இறந்து கிடந்தார். நாலாவது புலிவீரனும் குறிப்பிட்ட சில நாட்களுக்குள் மரணமடைகிறான்.. ஆனால் ஈழம் முழுவதும் போராட்டம் சூடு பிடிக்கிறது………………….

தொடரும்