கறுப்பு ஜீலை என்று சொல்லப்படும் ஜீலைக்கலவரம்

சங்கர்,சீலன் என்னும் போராளிகளுகளின் சாவுக்கு பதிலடி கொடுப்பதற்காக நெல்லியடியில் நடாத்தப்பட்ட தாக்குதலில் 13 இராணுவத்தினர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். (விரிவாக பகுதி 11 இல் எழுதியுள்ளோம்)

நெல்லியடித்தாக்குதல் சிங்கள அரசை நிலைகுலையச்செய்தது. சிங்கள இனவெறி அரசு அந்த இறப்பை வைத்து அரசியல் ஆக்க திட்டம் தீட்டுகிறார்கள், சிங்கள மக்கள் மத்தியில் உணர்ச்சியை தூண்டி அதில் குளிர்காய நினைக்கிறது சிங்கள அரசு. இறந்த 13 சிங்கள இராணுவ வீரர்களின் உடலையும் இரத்தக்கறையுடனும் பழைய பொலீத்தீன் பைகளிலும் சுற்றி கொழும்புக்கு எடுத்து வந்து மக்கள் பார்வைக்கு வைக்கிறது. சிங்கள மக்கள் கொதித்தெழுகிறார்கள், தங்கள் இராணுவ வீரர்களை கொன்ற தமிழர்களை பழி தீர்க்க வேண்டும் என நெருப்பாய் கொதிக்கிறார்கள்… சிங்கள அரசின் திட்டம் நிறைவேறுகிறது

அடுத்த சில மணித்துளிகளில் நாடு முழுவதும் தமிழர்களுக்கு எதிரான கலவரம் கட்டவிழ்த்து விடப்படுகிறது.,.,. கொழும்பு நகர் முழுவதும் வன்முறை தலைவிரித்தாடியது.. சிங்கள போலீஸின் உதவியுடன் தமிழ்க்கடைகள்,வாகனங்கள் வீடுகள் என எல்லா சொத்துக்களையும் சேதமாக்கி அழித்தான் சிங்களவன்,,,.

தேர்தல் அட்டையை வைத்து தமிழர்கள் வாழும் பிரதேசங்களையும் வீடுகளையும் முகவரியையும் கண்டறிந்து தமிழர்களை வெட்டி எறிந்தான் சிங்களவன்.. பெண்கள் குழந்தைகள் முதியவர்கள் என எவரையுமே விட்டு வைக்கவில்லை,, கொழும்பு நகர் முழுவதும் ஒரே புகை மண்டலம், இரத்த கறைகள்.

இந்தக் கலவரம் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பதுளை, வெள்ளவத்தை, தெகிவளை, பம்பலப்பிட்டி, கொள்ளுப்பிட்டி போன்ற பகுதிகளிலும் பரவியது. இந்தக் கலவரத்தில்ஏராளமான தமிழர்கள் கொல்லப்பட்டனர். கொழும்பு நகரில் மட்டும் 2 ஆயிரம்தமிழர்கள் பலியானார்கள். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து, அகதிகள் ஆனார்கள்.

கலவரம் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க சிங்கள இனவெறி அரசு அடுத்த திட்டத்தை தீட்டுகிறது,. தமிழ் கிளர்ச்சியாளர்களை தீர்த்துக்கட்டுவதுதான் அந்த திட்டம், ஏற்கனவே கைது செய்யப்பட்டு வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டு இருந்த குட்டிமணி தங்கதுரை,ஜெகன் ஆகிய போராளிகளை கொல்ல திட்டம் தீட்டுகிறது சிங்கள அரசு. .

ஜுலை 25 ந்தேதி பிற்பகல் 2.30 மணிக்கு உயர் அதிகாரிகள் ஏற்கனவே திட்டமிட்டபடிமதிய உணவுக்கு தங்களின் வீடுகளுக்குச் சென்றனர். அவர்கள் சென்றவுடன், குடிபோதையில் இருந்த சிங்கள கைதிகள் கடப்பாரை, கத்தி, அரிவாள், கோடாரி எனப்பயங்கர ஆயுதங்களால், சிறையில் இருந்த தமிழ்க் கைதிகளை வெறி கொண்டுதாக்கினார்கள். அதே சமயம், சிறைக்கு வெளியே இருந்தும் சிங்கள குண்டர்கள்பயங்கர ஆயுதங்களுடன் உள்ளே புகுந்தனர்.

தங்கதுரை, ஜெகன் உள்ளிட்ட தமிழ்க் கைதிகளை தர தரவென இழுத்து வந்து அடித்தே கொன்றனர். குட்டிமணி, ஜெகன் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நேரத்தில், அவர்கள் இருவரும் தங்கள் கண்களை, பார்வையற்ற தமிழர்களுக்கு வழங்கும்படியும், அதன் மூலம் தமிழ்ஈழத்தைப் பார்க்க முடியும் என்றும் உருக்கமான வேண்டுகோளை விடுத்திருந்தனர்.

குட்டிமணியின் உடலில் உயிர் ஒட்டிக்கொண்டிருந்தது. சிங்கள வெறியர்கள் அவரைவெளியே இழுத்து வந்தனர். அவரது நாக்கை ஒருவன் அறுத்தான். பீறிட்டு வந்தகுட்டிமணியின் ரத்தத்தை இன்னொருவன் குடித்துவிட்டு, “புலியின் ரத்தத்தை ருசித்துவிட்டேன்” என்று உற்சாகத்தில் உரக்கக் கத்தினான். ரத்தத்தை உடலில் பூசிக்கொண்டுகும்மாளம் அடித்தனர். அப்போது குட்டிமணியின் உடலில் அசைவு இருந்தது.

குட்டிமணியின் கண்கள் இரண்டையும், கூரிய கத்தியைக்கொண்டு தோண்டிஎடுத்தனர். “இந்தக் கண்கள் தானே, தமிழ் ஈழத்தைக் காண விரும்பிய கண்கள்” என்றுகூறியபடி, அந்தக் கண்களை கீழே எறிந்து, பூட்ஸ் காலால் மிதித்தனர். ஜெகனின்கண்களும் தோண்டப்பட்டன.

அப்போது சிறையின் ஒரு மூலையில் 14 வயது சிறுவன் மயில்வாகனன் பதுங்கி நின்றான். இதைக் கவனித்த சிறை அதிகாரி முடியைப் பிடித்துஇழுத்து வந்து அவனை அடித்துக்கொன்றார்.

புத்தர் சிலை அருகே 37 உடல்களையும் கொண்டு போய் குவித்து வைத்தனர். அப்போதுஒருவன், “புத்தரே பாரும்! உம்மையும், உம் மதத்தையும் ஏற்காதவர்களுக்கு நேர்ந்தகதியைப் பாரும்” என்று கத்தினான்.

கொடூரமாகக் கொல்லப்பட்ட 37 கைதிகளின் உடல்களை அவர்களது குடும்பத்தினரிடம்ஒப்படைக்காமல், மிகப் பெரிய குழி தோண்டி அதற்குள் வீசினார்கள். பின்னர்பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொளுத்தினார்கள். இதுவும் சிங்களக் கைதிகளைகொண்டு செய்யப்பட்டது.

25ம் திகதி நடைபெற்ற இந்த கோரச்சம்பவம் முடிவடைந்தபாடில்லை.. 27ம் திகதியும் வெலிக்கடைச்ச்சிறையினுள் அட்டகாசம் தொடங்குகிறது.. 25 இல் 37 தமிழ்க்கைதிகளும் 27ம் திகதி 17 தமிழ்க்கைதிகளும் வெறித்தனமாக சிங்கள அரசினால் கொல்லப்படுகிறன்றனர். நாடு முழுவதும் தமிழர்கள் பயத்தினால் ஓடி ஒழிந்து மறைந்து கொள்கிறார்கள்..

கொழும்பில் மட்டுமே நடைபெறு வந்த வன்முறை கண்டிடையும் அடைகிறது . கண்டியில் வீடுவீடாக சென்று 500 க்கும் மேற்பட்ட தமிழர்கள் வெட்டியும் அடித்தும் கொல்லப்படுகின்றனர், இரயில் வண்டி படகுகள் என ஒன்றையுமே மிச்சம் வைத்த பாடில்லை. எங்கெல்லாம் தமிழர்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் ஆயுதம் தாங்கிய சிங்களக்குழு நுழைந்து நாசம் செய்கிறது…

இலங்கை முழுவதுமே தமிழர்கள் அழிக்கப்பட்டுக்கொண்டு இருந்தார்கள்… இலங்கைத்தமிழர்கள் அழிக்கப்படுகிறார்கள்..ஆனால் இந்திய அரசு அதை பொருட்படுத்தவில்லை. அதை தடுக்கவும் இல்லை என அப்போதையை தமிழக முதல்வர் வெளிப்படையாக அறிவித்தது மட்டுமல்லாமல் தனது எம்.எல்.ஏ பதவியையும் இராஜினாமா செய்கிறார். இராஜினாமா செய்தது மட்டுமல்லாமல் அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் அறிக்கை ஒன்றையும் வெளியிடுகிறார்.

அந்த அறிக்கை பின்வருமஆறு இருந்தது

1) இலங்கையில் வரலாறு காணாத அளவிற்கு அண்மையில் நடைபெற்றுள்ள தமிழ்இனப் படுகொலை குறித்து, இதுவரையில் இந்திய பேரரசின் தலைமை அமைச்சரோஅல்லது இந்திரா காங்கிரஸ் கட்சியினர் பெரும்பான்மையுள்ள நாடாளுமன்றமோ ஒருகண்டனத்தைக்கூட அறிவிக்கவில்லை.

(2) இலங்கை தமிழர்களை படுகொலையில் இருந்து பாதுகாக்கவும், அவர்களுக்கு ஒருநிரந்தரமான நிம்மதியான வாழ்வளித்திடவும் உடனடியாக முடிவுகளை மேற்கொண்டுஇந்திய ராணுவத்தை அனுப்ப தவறியது மட்டுமல்லாமல், எத்தனையோவெளிநாடுகளுடைய பிரச்சினைகளை ஐக்கிய நாடுகள் சபைக்கு கொண்டு சென்றுஅதன் கவனத்தை ஈர்த்த இந்திய அரசு, இலங்கைத் தமிழர் பிரச்சினையில் அந்தமுறையை எவ்வளவோ கோரிக்கைகளுக்கு பிறகும் ஏற்க மறுத்துவிட்டது.

(3) ஐ.நா. மன்றத்தின் (செக்ïரிட்டி கவுன்சில்) பாதுகாப்பு சபையை வலியுறுத்தி, உடனடியாக பாதுகாப்பு சபையின் சார்பில் அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பி, தொடர்ந்து நடைபெறும் படுகொலைகளை தடுத்து நிறுத்த இந்திய அரசு தனதுஅக்கறையற்ற தன்மையின் காரணமாக தவறி விட்டது.

(4) இந்திய வெளியுறவு அமைச்சர் நரசிம்மராவ் இலங்கைக்கு சென்றபோது, தமிழர்தலைவர்களை சந்திக்க இயலாத ஒரு நிலை ஏற்பட்டதோடு, தமிழ் அகதிகள்லட்சக்கணக்கில் அடைபட்டு அவதியுறும் அகதிகள் முகாமிற்கே செல்ல முடியாமல்திரும்பக்கூடிய நிலை ஏற்பட்டது. அதே நேரத்தில் இலங்கை அதிபர்ஜெயவர்த்தனேயின் சகோதரர் இந்தியாவிற்கு வருகை தந்து இந்திய அரசிடம்இலங்கையின் நிலைமைகளை சிங்களவர் சார்பாக விளக்கக்கூடிய நிலைமைஏற்பட்டுள்ளது. ஆனால், இலங்கையில் உள்ள தமிழர்களின் தலைவர்கள்இந்தியாவிற்கு அழைக்கப்பட்டோ அல்லது இந்திய அரசு வலியுறுத்தி அந்த தமிழர்தலைவர்கள் இந்தியாவிற்கு வந்து இலங்கையின் நிலவரங்களை விவரிக்கின்றசூழ்நிலையை உருவாக்குவதின் மூலம் உண்மை நிலைமைகளை அறிய இந்திய அரசுமுயற்சி மேற்கொள்ளாததாலும், அப்படி ஒரு முயற்சியை இந்திய அரசு மேற்கொள்ளவேண்டுமென்று நமது தமிழக அரசு இந்திய அரசை வலியுறுத்தாததும் பெரும்குறையாகும்.

(5) இலங்கையில் அகதிகளாக உள்ள லட்சக்கணக்கான தமிழ் மக்கள் முறையானகவனிப்பின்றி மேலும் மேலும் துன்பத்திற்கும் வேதனைக்கும் ஆளாகின்றநிலைமையும் அவர்களுக்கென அனுப்பப்படுகிற உணவு வகைகளோ, ஏனைய மருந்துபோன்ற பொருட்களோ அவர்களுக்கு போய்ச்சேராமல் சிங்கள ராணுவத்திற்கு போய்ச்சேருகிறது என்ற கொடுமையை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமும் மற்ற சமுதாயஅமைப்புகளும் சுட்டிக்காட்டியும் அந்த பொருட்களும், நிதியும் தமிழர்களுக்குபோய்ச்சேர மத்திய – மாநில அரசுகள் முயற்சி எடுக்கவில்லை.

(6) இலங்கை பிரச்சினை குறித்து பாராளுமன்றத்தில் தமிழர்களை காப்பாற்றக்கூடியகண்டனத் தீர்மானம் ஒன்று கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்றுவலியுறுத்தி பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் எல்.கணேசன், வை.கோபால்சாமி இருவரும் மேற்கொண்ட உண்ணா நோன்பின் உணர்வை புரிந்துகொள்ளாமல், இதுவரையில் இந்திய அரசு அப்படி ஒரு தீர்மானத்தைபாராளுமன்றத்தில் இதுவரை தெரிவிக்காதது வருத்தத்திற்குரியது.

(7) தமிழ்நாடு காமராஜ் காங்கிரஸ் தலைவர் நண்பர் நெடுமாறன் அவர்கள்தலைமையில் நடைபெறுகின்ற தியாக பயணத்தில் செல்பவர்களை இந்திய அரசுஇடையிலேயே தடுத்துவிடும் என்ற செய்தியை இலங்கை அதிபர் ஜெயவர்த்தனாவெளியிடுகிற அளவிற்கு இங்குள்ள மாநில அரசு காவல் துறையும், மத்திய அரசுகாவல் துறையும் இலங்கையோடு தங்களுக்குள்ள நேசத்தை வெளிக்காட்டியிருப்பதுபெரும் வேதனைக்குரியது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. ராஜினாமாகடிதத்தை சபாநாயகர் ராசாராமுக்கு அனுப்பிவி தெரிவித்தார்.

பகுதி 13 இல் ஈழத்திற்கு படகில் புறப்பட்ட பழநெடுமாறன் ஐயா மற்றும் காசி ஆனந்தன் பற்றி எழுதப்படும்