பிரபாகரனியம் – பகுதி 13
பகுதி 13 சிறு பகுதியாக தேசியத்தலைவரின் திருமணம் பற்றி மட்டுமே எழுதப்பட்டது…
ஜீலைக்கலவரம் ஒருவாறாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. தமிழகம் மூழ்வதும் போராட்டமாக இருந்தது.. ஐயா பழநெடுமாறன்,, எம்.ஜி.ஆர், கருணாநிதி ஆகியோர் வெவ்வேறு வழிகளில் எதிர்ப்பு தெரிவித்த வண்னம் இருந்தனர், கறுப்ப்புச்சட்டை போராட்டம் ,படகில் ஏறி இலங்கை நோக்கிப்பயணம் என அனைத்து முயற்சிகளையும் தமிழக தலைவர்கள் மேற்கொண்டார்கள்..
சும்மா எதிர்ப்பு மட்டுமே தெரிவித்தால் பயனில்லை… சிங்களவனால் கொலை செய்யப்பட்ட தமிழ்ப்போராளிகளின் குடும்பத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என எம்.ஜி.ஆர் விரும்பினார். இதன்படி குட்டிமணியின் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு நந்தனம் வீட்டுத்திடத்தில் வீடு ஒன்றையும் மாதம் 1000 இந்திய ரூபாய் பனமும் இன்னும் சில வசதிகளையும் எம்.ஜி.ஆர் செய்து கொடுத்தார், அதேபோலவே தங்கதுரையின் மனைவி மற்றும் சகோதரனுக்கு “வீட்டுவசதி வாரியக்குடியிருப்பில் வீடு ஒன்றையும் மாதப்பணத்தையும் வழங்கினார் எம்.ஜி.ஆர்.
இதற்கிடையில் சிங்கள போலீஸ் மீதும் இராணுவத்தின் மீதும் உச்சகட்ட கோபத்தில் இருந்த தமிழ் போராட்ட அமைப்புகளான விடுதலைப்புலிகள் அமைப்பும் ஈ.பி.எல்.ஆர்.எஃப் அமைப்பும் மட்டக்களப்பு சிறையை வீர ஆவேசத்துடன் உடைத்து நொற்க்க்கியது. உள்ளே இருந்த நிர்மலா என்னும் பெண்ணும் (புலிகளுக்கு புகலிடம் அளித்த பெண்) இன்னும் பல தமிழ் அரசியல் கைதிகளும் காப்பாற்றப்பட்டனர். சிங்களவன் கோட்டைக்கே சென்று தமிழ் இளைஞர்களை மீட்டு வந்ததால் புலிகள் காப்பாளர்க்ளாக அடையாளம் காணப்பட்டனர்,. அதன் பின்னரும் பல போலீஸ் மீதான தாக்குதல்களும் கொலைகளையையும் விடுதலைப்புலிகள் நடாத்தி வந்தனர்.
இதற்கிடையில் 1984 ஆம் ஆண்டு ஜனவரி 5 ஆம் நாள் யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தையே இழுத்து மூடியது சிங்கள அரசு.. இது புலிகளையும் மாணவர்களையும் உச்சக்கட்ட கோபத்திற்கு ஆளாக்கியது.. அதன்படி 1984 ஜனவரி 9ம் திகதி 4 மாணவிகள் யாழ்ப்பாண பல்கலைக்கழக வாசலில் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.. நாட்கள் ஒன்ற,இரண்டு மூன்று என செல்கிறது.. மாணவிகள் உறுதியாக கொள்கையில் இருந்து விலகாமல் இருக்கிறார்கள்… சிங்கள அரசின் தரப்பில் எந்த வித மாற்றமும் இல்லை.. எல்லாவற்றிற்கும் மேலாக இலங்கை சிங்கள அமைச்சர் லலித் அத்துல முதலி என்பவன் “அவர்கள் செத்தாலும் பரவாயில்லை என்னும் தொணியில் பேசினார்.. ஆனாலும் அந்த நான்கு மாணவிகளும் கொண்ட கொள்கையில் விலகவில்லை…
உண்ணாவிரதம் தொடர்கிறது… ஜனவரி 16ம் திகதி அதாவது உண்ணாவிரதம் இருந்து 7ம் நாள் பிரபாகரன் தன் தோழர்களை அழைக்கிறார். பெண்கள் பாவம். அநியாயமாக அவர்கள் உயிர் போகக்கூடாது. அவர்களை அழைத்து வாருங்கள் என உத்தரவிடுகிறார். அதன் படி அன்று மாலையே ஒரு வெள்ளை நிறவண்டி மின்னல் வேகத்தில் உண்ணாவிரதம் இருந்த இடம் நோக்கி வருகிறது.. வலுக்கட்டாயமாக உண்ணாவிரதம் இருந்த மாணவிகள் வாகனத்தில் ஏற்றப்படுகிறார்கள்… நான்கு மாணவிகளுக்கும் ஒரே கோபம்.. தங்களை வலுக்கட்டாயமாக அழைத்துச்செல்வது அவர்களுக்கு விருப்ப்மில்லை…
வாகனம் அச்சுவேலியை நோக்கி செல்கிறது. புலிகளின் இரகசியமான ஒரு இடத்திற்கு அழைத்துச்செல்லப்படுகிறார்கள் அந்த நான்கு மாணவிகளும்…. வீட்டிற்குள் அழைத்து வரப்பட்டதுமே பிஸ்கட்டும் பழச்சாறும் கொடுக்கப்படுகிறது.. ஆனாலும் மாணவிகளுக்கு மிகுந்த எரிச்சலை ஏற்படுத்துகிறது அந்த செயல்….அவர்களை வெள்ளை வாகனத்தில் கடத்தப்படும் போது சிங்கள இராணுவம்தான் தங்களை கடத்துகிறது எனவும் இறுதி வரை முடிந்த அளவு போராடி இறக்க வேண்டும் என எண்ணி இருந்தார்கள். ஆனால் தங்களை கடத்தியது தமிழர்கள். அதுகும் உரிமைக்காக போராடும் புலிகள்… ஒரே கோபம், அறை முழுவதும் அமைதி
நான்கு பெண்களின் முன்பும் ஒரு மனிதர் இருந்து அறிவுறை கூறுகிறார்.. பெண்கள் இப்போது போராடி அநியாயமாக உயிரை எல்லாம் இழக்க வேண்டாம் என பலவாறு அறிவுறை கூறுகிறார். பெண்களுக்கு ஒரே எரிச்சல். யார் இந்த மனிதன் என கடிந்து கொள்கிறார்கள்.. இறுதியில் அந்த மனிதன் தன் பெயரைச்சொல்கிறார்.
ம்ம்ம்ம்ம் நான்தான் பிரபாகரன் ……………………………………………………………………………………….
4 பெண்களுக்கும் தூக்கிவாரிப்போட்டது.. அடச்சீ…. இவரா பிரபாகரன். தமிழ் இனத்துக்காக ஆவேசமாக போராடும் புலிகளின் தலைவர் இவரா???. குட்டையான உருவம்,மெலிவான இளைஞன், சின்ன மீசை,, மெல்லிய மென்மையான குரல்…
4 பெண்களாலும் நம்பவே முடியவில்லை.. அவர்கள் புலிகளை தலைவர் எப்படி இருப்பார் என மனதுக்கு ஒரு உருவத்தை நினைத்து வைத்திருந்தனர். உயரமான கம்பீரமான குரலுடன் கறுத்த ஒரு உருவம்தான் அவர்கள் கற்பனை செய்து வைத்திருந்தார்கள்.
4 பெண்களின் முகத்திலும் ஈயாடவில்லை.. நால்வரின் பெயரையும் பிரபாகரன் விசாரிக்கிறார். அந்த நால்வரில் ஒருவர்தான் அண்ணி மதிவதனி. வினோஜா,லலிதா ஜெயா என்னும் மூன்று பெண்களும்தான் அண்ணியுடன் உடன் உண்ணாவிரதம் இருந்த நால்வர்.
பிரபாகரனுக்கு அவர்களின் மனநிலை புரிந்துவிட்டது.. பலமாக சிரித்த வண்ணம் பேச்சை தொடர்கிறார், சரி சும்மா வீணாக உயிரை விட வேண்டாம். நாட்டுக்கும் இனத்துகும் பிரயோசனமாக ஏதும் செய்ய வேண்டும் என நினைத்தால் தமிழகம் செல்லுங்கள். அங்கு சென்று படியுங்கள் என கட்டளையிடுகிறார். அந்த இளைஞனின் குரலை எதிர்த்து அந்த நான்கு பெண்காளாலும் பேச முடியவில்லை… தலையை பலமாக ஆட்டுகிறார்கள். சம்மதம் தெரிவிக்கிறார்கள்
அதன்படி ஒரு தோணியின் மூலம் அந்த நான்கு பெண்களையும் தமிழகம் அனுப்புகிறார் பிரபாகரன்.. நான்கு பெண்களும் சென்னையை அடைகிறார்கள்.. அங்கு சென்னையில்தான் அன்ரன் பாலசிங்கம் மற்றும் வெள்ளைக்காரியான அடேல் பாலசிங்கம் ஆகியோர் தங்கி இருந்தனர். அடேல் பாலசிங்கத்திற்கு அந்த 4 பெண்களையும் பாதுகாக்கும் பொறுப்பு அளிக்கப்பட்டு இருந்தது .
வெள்ளைக்காரியான அடேல் பாலசிங்கம் ஆஸ்திரேலியாவை சார்ந்தவர்,. ஆக தமிழ்ப்பெண்களின் கலாச்சாரம் அவருக்கு தெரியாது.ஆகவே அண்டன் பாலசிங்கம் பல மணிநேரம் அடேல் பாலசிங்கத்திற்கு வகுப்பு எடுத்தார். தமிழ்ப்பெண்களின் கலாச்சாரத்தை பற்றி சொல்லி நான்கு பெண்களையும் கவனமாக பார்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்,
இதனிடையே பிரபாகரனும் தமிழகம் வந்து சேர்ந்தார்.. தமிழகத்தில் பல இடங்களில் பயிற்சி முகாம் அமைத்து பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தார்கள் விடுதலைப்புலிகள்… அன்று ஹோலிப்பண்டிகை… எல்லா பெண்களிடமும் குறும்பு செய்து நிறப்பூச்சு கலந்த நீரை அவர்கள் மீது ஊற்றி விளையாடிக்கொண்டிருந்தார் அண்ணி மதிவதனி.. பிரபாகரன் வரவே அவரையும் விட்டு வைக்கவில்லை அண்ணி மதிவதனி. கையில் இருந்த சொம்பில் நிறப்பூச்சை பிரபாகரன் மீது முழுவதும் ஊற்றி விட்டார்..
பிரபாகரனுக்கு உச்சகட்டமாக கோபம் வந்து விட்டது.. பலமான குரலுடன் அதட்டி திட்டிவிட்டார்… திட்டியபின்னரும் நிற்காமல் “உந்த சேட்டை எல்லாம் வைச்சுக்கொள்ளாம படிக்கிற வழியை பாரும்” என ஈழத்தமிழில் அதட்டிவிட்டார், அண்ணி மதிவதனிக்கு முகம் சிவத்துவிட்டது.. கோபம் ஒரு புறம், அழுகை ஒருபுறம். அழுதுகொண்டே போய் ஒரு மூலையில் இருந்துவிட்டார்….. மென்மையான பிரபாகரன் அப்படி பேசியது அண்ணியாருக்கு மிகுந்த கோபத்தையும் அழுகையையும் ஏற்படுத்தியது. தோழிகள் முன்பு திட்டிவிட்டாரே என வருத்தம் வேறு…அடேல் பாலசிங்கம் சமாதானம் செய்து வைத்தார்,
அடுத்த நாள் வீடு திரும்பிய பிரபாகரன் பலத்த சிரிப்புடன் அண்ணி மதிவதனியிடம் சென்று குறும்பாக சிரித்து நக்கல் செய்கிறார்.. அண்ணியாருக்கு ஒரே கோபம். நேற்று பேசியது மட்டுமல்லாமல் இன்று நக்கல் வேறு என நினைத்து கடிந்துகொள்கிறார், அவ்வாறே இருவருக்குமான உறவு நட்பாகி நாளடவையில் காதலாக மலர்கிறது..
சில மாதங்கள் கழிய அடேல் பாலசிங்கத்திடம் பேசிக்கொண்டு இருக்கும் போது ஒரு குண்டைத்தூக்கி போடுகிறார் தலைவர் பிரபாகரன்.. தான் மதிவதனியை காதலிப்பதாகவும் அவரை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவரும் தெரிவிக்கிறார். எல்லோருக்கும் தூக்கிவாரிப்போட்டது…
புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களே முரண்பட்டுக்கொண்டார்கள்… இறுதியில் ஒருவாறாக சம்மதம் சொல்கிறர்கள்… சில போராளிகள் உமாமகேஸ்வரன்-ஊர்மிளாவுக்கு ஒரு சட்டம் பிரபாகரன் மதிவதனிக்கு ஒரு சட்டமா என கேள்வியும் எழுப்புகிறார்கள். ஆனால் உமாகேஸ்வரன் கதை வேறு.. ஊர்மிளா ஏற்கனவே திருமணமாகி கணவனை இழந்தவள்.. உமாமகேஸ்வரன் ஊர்மிளா மீது காத்ல் கொள்ளவில்லை. மாறாக தவறான உறவை கொண்டிருந்ததால் அவரை இயக்கத்தை விட்டு ஒதுக்கி வைத்ததாக சொன்னார் அன்ரன் பாலசிங்கம்…..
இறுதியாக திருமணத்திற்கு பச்சை கொடியை பெரும்பாலானவர்கள் காட்டுகிறார்கள். ஆனாலும் அண்டன் பாலசிங்கம் ஒரு விடயத்தில் கடும் உறுதியாக இருந்தார். மதிவதனியின் பெற்றோரின் சம்மதம் இல்லாமல் இந்த திருமணம் நடக்க கூடாது என கூறினார் அண்டன் பாலசிங்கம்.. அதனபடி அண்ணி மதிவதனியின் தாயும் தந்தையும் தமிழகம் அழைத்து வரப்படுகிறார்கள்.
அவர்கள் மதிவதனியிடம் பிரபாகரன் ஒரு குற்றவாளி எனவும் சிங்கள அரசால் தேடப்பட்டு வரும் குற்றவாளி எனவும் அவரை திருமணம் செய்தால் வாழ்க்கை நிரந்தரமல்ல எனவும் மகள் மதிவதனிக்கு அறிவுரை கூறுகிறார்கள்.. ஆனாலும் மதிவதனி அதை கேடபதாக இல்லை… பிரபாகரனை திருமணம் செய்தே ஆக வேண்டும் என உறுதியாக இருக்கிறார்..
இறுதியில் அவர்களும் பிரபாகனின் திருமணத்திர்கு சம்மதம் தெரிவிக்கிறார்கள்….
திருமண ஏற்பாடுகள் ஆடம்பரம் இல்லாமல் நடக்கிறது.. தாலி செய்யும் பொறுப்பு யாழ்ப்பாணத்தில் இருந்த அவரின் மாமாவுக்கு வழங்கக்கபடுகிறது.. அது அவ்ர்களின் குடும்ப வழக்கம்.. மாமனார் அதை பெரிய கவுரமாக நினைத்து பிள்ளையார் படம் பொறித்த தாலியை செய்து தமிழகத்திற்கு கொடுத்தனுப்புகிறார்.
அதனபடி 1984 அக்டோபர் 1ம் திகதி தமிழ்வாடு திருப்போரூர் முருகன் கோவில் தலைவரின் திருமணம் நடைபெற்றது…
தொடரும்……………………………