பிரபாகரனியம் – பகுதி 14

ஈழப்போராட்டம் என்பது பூவும் பஞ்சும் நிறைந்த இலகுவான பாதையல்ல. முள்ளும் நெருப்பும் நிறைந்த சிக்கலான வழிப்பாதை.. அந்த சிக்கல்களுக்கு மத்தியில் புலிகள் வீர ஆவேசத்துடன் போராட தமிழகம் செய்த உதவிகள் காலத்தால் அழியாதவை.

1984 ஆம் ஆண்டு.. தமிழகத்தில் தலைவர் பிரபாகரனும் மற்றும் மூத்த தளபதிகளும் பயிற்சி மேற்கொண்டவண்ணம் இருந்தனர்… அந்த சமயம்தான் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் ஆயுதப்போராட்டம் உச்சம் பெற்று இருந்தது… புலிகளுக்கு ஆயுதம் பற்றாக்குறையாக இருந்தது… தமிழ் மக்களிடம் இருந்து பெறப்பட்ட சிரு சிறு உதவிகளைக்கொண்டு போராட்டத்தை நடாத்தினாலும் நவீன ஆயுதங்களை வாங்க அவர்களால் முடியவில்லை.

அந்தசமயத்தில்தான் அப்போதைய புலனாய்வுப்பிரிவைச்சார்ந்த DIG அலெக்ஸசாண்டர் என்பவரிடம் இருந்து ஒரு அழைப்பு அண்டன் பாலசிங்கத்துக்கு வருகிறது..அந்த அழைப்பில் தமிழீழவிடுதலைப்புலிகள் அமைப்பை தமிழக முதலமைச்சர் சந்திக்க விரும்புவதாகவும் பிரபாகரனுடன் பேசவிரும்புவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.. அன்ரன் பாலசிங்கத்தால் அதனை உடனடியாக ஏற்க முடியவில்லை.. தலைவரிடம் அதைப்பற்றி கலந்துரையாட வேண்டும் என நினைக்கிறார், சரி நான் எங்கள் தலைவருடன் கலந்துரையாடிவிட்டு உங்களுக்கு பதில் சொல்கிறேன் என சொல்லி முடிக்கிறார்

உடனே பிரபாகரனுக்கும் அந்த விசயம் தெரிவிக்கப்படுகிறது.. பிரபாகரனின் பதில் பின்வருமஆறு அமைகிறது.

நல்ல சந்தர்ப்பம். எம்.ஜி.ஆர் உடன் நடக்கவிருக்கும் சந்திப்பில் புலிகள் இயக்கத்தை பற்றி ஒழுங்காக விளக்க வேண்டும்.. எங்கள் இலட்சியம் பற்றி விளக்க வேண்டும்… நீங்களும் பேபி அண்ணேயும் நித்தியானந்தனும் ,சங்கரும் செல்லுங்கள் என்றும் தான் இந்தச்சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை எனவும் அடுத்தடுத்த சந்திப்புகளில் பார்க்கலாம் எனவும் சொல்லி முடிக்கிறார்.

அதன்படி அன்று மாலையே புலிகளின் குழு அண்டன் பாலசிங்கம் தலைமையில் எம்.ஜி.ஆரை சந்திக்க செல்கிறது. . எம்.ஜி.ஆர் முகம் முழுக்க புன்னகையுடன் புலிகளின் குழ்வை வரவேற்கிறார்,. எல்லோரும் தங்களை எம்.ஜி.ஆரிடம் அறிமுகம் செய்து வைத்துக்கொள்கிறார்கள்.

அது எல்லாம் சரிங்க. எங்க உங்க தலைவர் பிரபாகரன்?.. நா அவர்கூடப்பேசனுமே என்று சிரித்தவாறு சொல்கிறா MGR . சென்னைக்கு வெளியே பயிற்சி இருப்பதாகவும் அது விசயமாக வெளியூர் சென்று இருப்பதாகவும் பாலசிங்கம் பதில் சொல்கிறார்,

எம்.ஜி.ஆரும் விடுவதாக இல்லை, அடுத்த தடவை பிரபாகரனை அழைத்து வாருங்கள்.. அவருடன் நான் பேசவேண்டும் என சொல்கிறார். உரையாடல் தொடர்கிறது

எம்.ஜி.ஆரிடம் இருந்து திடீரென ஒரு கேள்வி எழுகிறது.. புலிகளின் கொள்கை என்ன? புலிகளும் கம்யூனிசவாதிகளா என கேட்கிறார்,.. அமைதியாக சில வினாடிகளின் பின்னர் அண்டன் பின்வறுமாறு விளக்குகிறார்.

“இல்லை.. நிச்சயமாக இல்லை..நாங்கள் கம்யூனிசவாதிகள் என சொல்லிக்கொள்ள விரும்பவில்லை. நாங்கள் புரட்சியாளர்கள். எங்கள் ஈழநாட்டிற்காக போராடுகிறோம். பெண்ணடிமைத்தனம்,சாதியக்கொடுமை மற்றும் சமூக முரண்பாடுகளை அகற்றி தமிழர்களாக எமது பூர்வீக நிலத்திற்காக போராடுகிறோம்…. நீங்கள் சினிமாவில் புரட்சிநாயகனாக எல்லோர் மனதிலும் புரட்சிகர கருத்துகளை விதைத்து தமிழக மக்களின் மனதில் உணர்சிகளை தட்டியெழுப்பவில்லையா?/ அதே போல நாங்கள் நிஜத்தில் மக்கள் மனதில் புரட்சியை உண்டு பண்ணி எங்கள் உரிமையை மீட்டெடுக்கப்போகிறோம் என சொல்லி முடிக்கிறார், ..

எம்.ஜி.ஆருக்கு பாலசிங்கம் சொன்ன விளக்கம் முழுதாகவே பிடித்துவிட்டது.. மிகுந்த ஆர்வத்துடன் ஈழமக்களின் நிலை பற்றியும் எப்படியாக போராட்டத்தை கொண்டு செல்லப்போகிறீர்காள் எனவும் விசாரிக்கிறார்..பாலசிங்கமும் பேபி சுப்பிரமணியமும் ஈழத்தின் நிலைமை பற்றி தெளிவாக விளக்குகிறார்கள்,,

எம்.ஜீ.ஆரும் பொறுமையாக எல்லாவற்றையும் பலமாக தலையை அசைத்துக்கேட்டுக்கொண்டு இருக்கிறார், சரி இந்திய அரசு உங்களுக்க்கு இரகசியகமாக ஆயுதப்பயிற்சி அளிப்பதாக ஒரு தகவல் வருகிறதே உண்மைதான என சந்தேகத்துடன் கேட்கிறார், ஆம் வருகிறதுதான்.. ஆனால் மிக மிக குறைவு…. வெறும் 200 பேருக்கு துருப்பிடித்த ஆயுதங்களுடன் பயிற்சி கொடுக்கிறார்கள்.. அது எங்களை வளர்த்து விட அல்ல. பிராந்தியத்தில் இந்தியாவின் கட்டுப்பாட்டினுள் இலங்கை இருக்க வேண்டும்..ஆக புலிகள் மீது இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க நினைக்கிறார்கள் என சொல்லி முடித்து அடுத்த வசனமாக இந்திய அரசு மற்றைய இயக்கங்களுக்கு பண உதவி கூட செய்கிறது.. ஆனால் எங்களுக்கு என இழுக்கிறார் அண்டன் பாலசிங்கம் ….

எம்.ஜி.ஆருக்கு புரிந்துவிட்டது.சரி அது போகட்டும் நான் தமிழீழமக்களுக்கின் போராட்டத்திற்கு ஏதேனும் உதவியை செய்ய விரும்ப்புகிறேன். என்ன உதவியை என்னிடம் இருந்து எதிர்பார்க்கிறீர்கள் என கேட்கிறார எம் ஜி ஆர்,

பாலசிங்கம் தயக்கத்துடன் சொல்கிறார்..போராட்டத்திற்கு ஆயுதம் தேவைப்படுகிறது.. ஆயுதம் வாங்க பண உதவி தேவை என இழுக்கிறார்.

அடுத்த செக்கனே எம்.ஜி.ஆர் சிறிதும் யோசிக்காமல் சரி எவ்வளவு தேவை என கேட்கிறார். அன்ரன் பாலசிங்கத்தால் கேட்க முடியவில்லை.. பணத்தை நேரடியாக கேட்க முடியவில்லை… சங்கடத்துடன் தலையை குனிந்து கொண்டு இருக்கிறார், திடீரென ஒரு குரல்.. சங்கருடைய குர்ல.. அண்ணா எங்களுக்கு சுமார் 2 கோடி தேவைப்படுகிறது.. ஆயுதம் வாங்க மருத்துவ செலவு மற்ரும் பயிற்சி என எல்லாமாக 2 கோடி தேவை என சொல்கிறார்

எம்.ஜி.ஆர் ஒரு நிமிடம் கூட சிந்திக்கவில்லை.. இதைக்கேட்கவா இவ்வளவு கூச்சம் என பலமாக சிரிக்கிறார்.. சரி நான் ஏற்பாடு பண்ணிவிடுகிறென் . நாளை வந்து பெற்றுக்கொள்ளுங்கள் என சொல்கிறார்., பாலசிங்கமும் நாளை தலைவருடனே வருகிறோம் என சொல்லிவிட்டு விடைபேறுகிறார்.

சொன்னது போலவே அடுத்த நாள் புலிகளின் குழு எம்.ஜி.ஆரை சந்திக்க செல்கிறது. அங்கே 11 பணப்பெட்டிகளின் 2 கோடி ரூபா பணம் தயாராக இருக்கிறது. புலிகளின் வாகனம் சென்றதுமே எம்.ஜி.ஆரின் காவலாளிகள் பணத்தை புலிகள் சென்ற வண்டியில் அடுக்குகிறார்கள்.. ஆனாலும் புலிகளுக்கு சிறு பயம்… இவ்வளவு பெரிய பணத்தை பத்திரமாக திருவான்மியூர் வரிய கொண்டு செல்வது குறித்து புலிகளுக்கு ஒரு பயம் இருந்தது..

அதை அண்டன் பால்சிங்கம்எம்.ஜி.ஆரிடம் கூறினார், இறுதியாக 2 போலீஸ் வண்டிகளின் பாதுகாப்புடன் பணவண்டி திருவான்மியூரை அடைந்தது….

இந்த சம்பவத்தின் பின்பு எம்.ஜி.ஆர் பிரபாகரனுக்கு இடியப்பட்ட உறவு வளர்ந்து கொண்டே இருந்தது…

அது ஒரு புறம் இருக்க எம்.ஜி.ஆரிடம் வாங்கிய இரண்டு கோடிப்பணத்தை வைத்து ஆயுதங்களை வாங்குகிறது புலிகள் அமைப்பு. சர்வதேச தரகர்கள் மூலம் ஆயுதங்கள் யாவும் பரிமாறப்படுகிறது.. வாங்கப்பட்ட ஆயுதங்கள் இந்திய தமிழக எல்லைக்கு அருகில் வந்தடைகிறது… அடுத்த பிரச்சனை ஆரம்பமாகிறது… கொண்டு வரப்பட்ட ஆயுதங்களை வெள்யில் எடுக்க புலிகளால் முடியவில்லை. எவ்வளவு முயற்சித்தும் அவர்களால் அதை செய்ய முடியவில்லை.

இறுதில் வேறு வழி இல்லை என உணர்ந்த பிரபாகரன் எம்.ஜி.ஆருக்கு விசயத்தை தெரிவிக்கிறார்,..எம்.ஜி.ஆர் பதில் எதுகுமே கூறவில்லை,,இரண்டு சீருடை தரித்த போலீஸை அழைக்கிறார்…விசய்ததை அவர்காளிடன் கூறி விட்டு உங்கள் ஆயுதம் வந்து விடும் நீங்கள் நிம்மதியாக சென்று வாருங்கள் என அனுப்பி வைக்கிறார்…. என்ன ஆச்சரியம் சொல்லி ஒரு வாரத்துக்கு புலிகளின் கைக்கு ஆயுதங்கள் வந்தடைகிறது..

பிரபாகரனுகு சொல்ல முடியாத ஆனந்தம். வந்த ஆயுதங்களில்ம் ஒரு துப்பாக்கியை எடுத்துக்கொண்டு எம்.ஜி.ஆரை பார்க்க செல்கிறார், நேரில் சென்று நன்றி தெரிவித்தது மட்டுமல்லாமல் அந்த துப்பாக்கியை தன் நினைவுப்பரிசாகவும் வழங்குகிறார்,….. பின் நாட்களின் உடல் நிலை குன்றிய நிலையில் கூட எம்.ஜி,ஆர் அந்த துப்பாக்கியை தலையணைக்கு கீழே வைத்திருந்தார் என தனது விடுதலை என்னும் புத்தகதிதில் குறிப்பிட்டுள்ளார்,

இது ஒரு புறமிருக்க இலங்கை இராணுவமும் போலீசும் இலங்கையில் தமிழர்களை கொலை செய்வதில் மும்முரமாக இருந்தது.. அம்பாறை கொழும்பு,கொட்டியாரக்குடா,,கொக்குவவில்.,வண்ணார்ப்பண்ணை என தொடர்ச்சியாக பல கொலைகளை அரங்கேற்றிக்கொண்டு இருந்தது,, புலிகள் பொறுமை இழந்தனர், பதிலுக்கு தாக்குதல் நடத்த ஆரம்பத்தனர், 1985 மார்ச் 25 பவுர்ணமி தினம் ஒன்றில் சிங்கள இராணுவத்தின் மீது நடந்த்திய உக்கிரமான தாக்குதலி 148 இராணுவத்தினர் சம்பவ இடதிலேயே பலியாகினர், பழிக்கு பழியாக கொலைகள் தொடருகின்றது….

அது அவ்வாறு இருக்க புலிகளுகு தாக்குதலுக்கு ஆயுதங்கள் போதவில்லை,, மீண்டும் பணம் தேவைப்படுகிறது. ஆனால் இம்முறை பணத்தொகை சற்று அதிகம்.. ஐந்து கோடி வரை தேவைப்படுகிறது.. எவ்வளவு முயன்றும் புலிகளால் அந்த பணத்தை திரட்டமுடியவில்லை.. இறுதியில் எம்ஜிஆரிடமே கேட்கலாம் என முடிவெடுக்கிறார் பிரபாகரன்…. அதன்படி அன்ரன் பாலசிங்கத்தை மீண்டும் எம்.ஜி.ஆரிடம் அனுப்பி அந்த பணத்தை தரும்படி கேட்கிறார் பிரபாகரன்

எம்.ஜி.ஆர் உடனிருந்த மூத்த அமைச்சர் ஒருவரை அழைக்கிறார், விசயத்தை அவரிடம் சொல்லி “மாநில அரசு மூலம் ஏதேனும் செய்யலாமா என வினவுகிறார். அமைச்சரும் சற்று யோசனை செய்து விட்டு ஆம் முடியும்,.. ஈழத்தமிழருக்காக போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என கிடைத்த நிவாரண நிதியை அவர்களுக்கு கொடுப்பதில் எந்த சிக்கல்களும் இல்லை.. என்கிறார்….

ஆனாலும் அதில் ஒரு சின்ன சட்டபூர்வமான நடவடிக்கை தேவை என்று இழுக்கிறார். எம்.ஜி.ஆர் சற்று அதிகாரக்குரலுடன் முடியுமென்றால் கொடுத்துவிடுங்கள் என்ன சட்ட நடவடிக்கை என்றாலும் பார்த்து சரி செய்து விடுங்கள் என உத்தரவிடுகிறார்

பால்சிங்கத்துக்கு மட்டட்ட மகிழ்ச்சி. ஆனால் அரச பணத்தை தருவது என்றால் சட்டபூர்வமாக ஒரு திட்டம்தேவை.. ஆகவே ஈழத்தமிழர் கழகத்தினூடாக ஒரு மாதிரித்திட்டட்டை தயாரியுங்கள். அதில் 4 கோடிக்கு ஏற்றாவாறு செலவை காட்டுங்கள் என சொல்கிறார்,,,, அதனபடி ஒரு மருத்துவமனை அமைக்கப்ப போவதாக திட்டம் தீட்டி அந்த வரைவை தமிழர் வாழ்வுக்கழகம் சார்பாக சமர்ப்பிக்கின்றனர்… எல்லாம் சரியான முறையில் முடிந்து 4 கோடிக்கான காசோலையை த்லைமை செயலகத்தில் வைத்து அன்ரன் பாலசிங்கத்திடம் கொடுக்கப்படுகிறது..

ஆனால் இந்த விசயம் எப்படியோ ஊடகங்களுக்கு கசிந்து விடுகிறது.. இலங்கை அரசு வரை விடயம் போய் விடுகிறது…. அரசியல் களம் முழ்வதும் இதுதான் பேச்சு… இலங்கை அதிபர் ஜே.ஆர் ஜெயவர்த்தன உச்சகட்ட கோபத்திற்கு ஆளாகிறார், உடனடியாக ராஜீவ் காந்தியை தொடர்பு கொண்டு தனது எதிர்ப்பை தெரிவிக்கிறார்………………………………………………………

தொடரும்