பிரபாகரனியம் பகுதி 5…..

பகுதி 6 இலிருந்து தமிழனின் உக்கிரமான போரையும் தலைவரின் நடவடிக்கைகள் பற்றியும் பார்க்கலாம்.

ஜேவிபி கலவரத்தை தொடர்ந்து கைது செய்யப்பட்ட ஜேவிபினரிடம் இருந்து சில வடகொரிய சார்ந்த ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அதன் மூலம் ஆயுதங்களை வடகொரிய அனுப்பியதாகவும் அவர்கள்தான் இந்த கிளர்ச்சிக்கு பின் உள்ளதாகவும் சந்தேகித்த இலங்கை அரசு வடகொரியா உடனான அனைத்து தொடர்புகளையும் துண்டித்தது..

ஆனால் இந்த சிங்கள ஜேவிபியினரின் கிளர்ச்சி பிரபாகரன் குட்டிமணி தங்கதுரை இடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.. ஒழுங்கான திட்டமிடல் இல்லாத காரணத்தாலாயே அவர்கள் தோற்றார்கள்…ஆனால் சிங்கள அரசை ஆட்டம் காண வைத்து விட்டார்கள்..ஆகவே ஒழுங்கான திட்டமிடலுன் நாம் போரிட்டால் சிங்கள அரசை இலகுவில் வீழ்த்திவிடலாம் என பிரபாகரன் திட்டம் கூறினார். தமிழர்களிடையே போராட வேண்டும் என கொள்கை வலுப்பெற்றது..

அது ஒரு புறம் நடக்க தாக்குதலுக்கு தேவையான துப்பாக்கிகளை ஓரளவு தயாரிக்கத் தொடங்கிய பிரபாகரன் குண்டுகளையும் சிறிது சிறிதாக தயாரிக்க தொடங்கினார். அப்படித்தான் ஒருநாள் பனந்தோப்பில் இருந்து குண்டுகளை தயாரிக்க வெடிமருந்துகளை பரிசோதித்துக்கொண்டிருந்தார். தங்கதுரையும் சின்னஜோதியும் உடன் இருக்கிறார்கள்…. பரிசோதனை செய்து கொண்டிருக்கும் போது திடீரென ஒரு குண்டு வெடித்து விடுகிறது. அம்மா என ஒரு சத்தம்தான்.. பிரபாகரனின் காலில் ஒரு பகுதி கருகி விடுகிறது.. கொஞ்ச நேரம் வலியால் துடிக்கிறார். உறவினரான சின்னஜோதிக்கு பயம் தலைக்கு ஏறிவிட்டது பிரபாகரனுக்கு என்ன நடந்தது என பதைபதைக்கிறார். .ஆனால் பிரபாகரன் கொஞ்ச நேரத்தில் துள்ளிக்குதித்து எழுந்து எல்லோரின் முன்பு நின்று காலை உயர்த்திக்காட்டி சத்தமாக சிரித்த வண்ணம்..
“எல்லாரும் பாருங்கோ இனி எண்ட பெயர் கரிகாலன்..இனி அப்படியே என்னை கூப்பிடுங்கோ. கருமையான கால் இருக்குற படியால இனி நானும் கரிகாலன் தான் என சொல்லி சிரிக்கிறார். எல்லோர் முகத்திலும் ஒரே சிரிப்பு.. கரிகாலன் என்பது சோழமன்னன். சோழனை போல உலகை ஆள வேண்டும் எனவும் கப்பல் படையை உருவாக்க வேண்டும் எனவும் பிரபாகரனுக்கு எப்போதும் ஆர்வம் இருந்ததாக பின்நாட்களில் அவரின் ஆசிரியர் கூறியிருந்தார்.
புத்தகத்தில் ஆர்வம் கொண்ட பிரபாகரனுக்கு கரிகாலச்சோழன் மீதும் /சோழர்கள் மிகுந்த ஆர்வம் வர சாண்டில்யனின் கடல்புறா நூல்தான் காரணம் . அந்த நேரங்களில் ஸ்ரீமத் பகவத்கீதை, சிவகாமி சபதம்,பார்த்திபன் கனவு, சாண்டில்யன் எழுதிய கடற்புறா,நல்லபெருமாள் எழுதிய கல்லுக்குள் ஈரம் என்பவை அவரின் பிரியமான புத்தகங்கள்…. மகாபாரத கதையின் மீது மிகுந்த ஆர்வம் பிரபாகரன் அடிக்கடி மகாபாரதத்தில் கர்ணன் கதாபாத்திரம்தான் மிகவும் பிடிக்கும் என கூறி நட்புக்கு இலக்கணம் கூறுவாராம்…. ,
இவ்வாறு ஒரு புறம் குட்டிமணி-தங்கதுரை மற்றும் பிரபாகரன் ஆகியோர் சிறிது சிறுதாக கிளர்ச்சிக்கு தயாராகிக்கொண்டு இருக்கையில் சர்வதேசத்தில் ஒரு மாற்றம் நிகழ்கிறது.

அது வேறொன்றும் இல்லை.. இந்தியா பாகிஸ்தானிடம் இருந்து வங்காளதேசத்தை பிரித்தது.. இதை தமிழ் இளைஞர்களும் தமிழ் அரசியல் தலைவர்களும் பெரிதும் கொண்டாடினர். இந்தியா தங்களை கைவிடாது என்றும்\ வங்காளதேசைப்போலவே தமிழீழத்தையும் பிரித்து தந்துவிடுமெனவும் நம்பினர். இதற்காக இந்தியாவிற்கு ஆதரவாக சில ஊர்வலங்களையும் நடாத்தினர். இந்தியாவை தமிழ் இளைஞர்கள் பெரிதும் நம்பினர்.. காரணம் இந்தியா-பாகிஸ்தான் போரில் பாகிஸ்தானுக்கு இலங்கை அரசு மறைமுகமாக உதவியது. ஆக இந்திய அரசு இலங்கை சிங்கள அரசை எதிர்க்கும்.ஆக தமிழர்களுக்கு நல்ல பலன் என நினைத்துக்கொண்டார்கள்.

ஆனால் தமிழர்களின் தலையில் விழுந்தது அடுத்த அடி. இலங்கையின் அரசியலமைச்சட்டம் மாற்றப்படுகிறது.
சிலோன் என்னும் பெயர் ஸ்ரீலங்கா என மாற்றம் பெறுகிறது. தமிழருக்கு எதிரான பல அம்சங்களை உள்ளடக்கி இருந்தது புதிய அரசியலமைப்புச்சட்டம். தமிழரசுக்கட்சி பொறுமையை இழக்கிறது. தமிழர்கள் இனியும் பிரிந்து செயற்படக்கூடாது ஒன்றாக வேண்டும் என முடிவெடுத்து சிறு தமிழ்க்கட்சிகள் இயக்கங்களை ஒன்று சேர்த்து தமிழ் கூட்டணி ஒன்றை உருவாக்கி இலங்கை அரசின் புதிய அரசியல் அமைப்பிர்கு எதிராக குரல் கொடுக்கிறார்கள். அது மட்டுமல்ல அந்த நிகழ்ச்சியை புறக்கணித்து தங்கள் எதிர்ப்பை காட்ட முயற்சிக்கிறார்கள்.

ஆனால் அரசாங்கத்தில் இருந்த 5 தமிழர்கள் அந்த அரசியலமைப்பிற்கு ஆதரவாக வாக்களித்தனர், இது தமிழர்களை உச்சக்கட்டமாக அதிர்ச்சிக்குள்ளாக்கியது.. தமிழனே தமிழனுக்கு எதிராக வாக்களிப்பதா என கோபம் அடைகிறார்கள்.. குட்டிமணி-தங்கதுரைக்குழு களத்தில் இறங்குகிறது.. அவர்கள் ஐவரையும் காளையெடுப்புச்ச்செய்ய வேண்டும் என முடிவு செய்யப்படுகிறது

முதல் இலக்காக அருளம்பலம் நிர்ணயிக்கப்படுகிறார்கள் தங்கமணி குட்டிமணி குழு. ஆனால் அவன் கொழும்பில் இருப்பதால் கொலை செய்ய இயலாது. அதனால் இலக்கு மாற்றப்படுகிறது. அடுத்த இலக்கு குமரகுலசிங்கம்… வெற்றிகரமாக தாக்கி அந்த துரோகியை முதன் முதலாக கொலை செய்கிறது தமிழர் குழு.. இது சிங்களவன் கோபத்தை இன்னமும் அதிகரித்தது…. நூற்றுக்கணக்கான போலீஸை முடுக்கி விடுகிறது சிங்கள அரசு.. தமிழர் மீது தாக்குதலும் கைதுகளும் பரவலாக நட்ககிறது. ஆனால் இதனால் வெகுண்ட தமிழ் இளைஞர்கள் இன்னமும் கொடூரமாக புரட்சியில் இறங்கினர்,

ஒரே பரபரப்பு. ஆங்காங்கே சில ஆயுதக்குழுக்கள் ஆரம்பிக்கப்படுகிறது.. அதில் ஒன்றுதான் பிரபாகரனால் 1972 இல் ஆரம்பிக்கப்பட்ட புதிய தமிழ்ப்புலிகள் என்னும் அமைப்பு. சில இளைஞர்களை ஒன்று சேர்த்து அந்த அமைப்பை உருவாக்கினார் 17 வயதுப்பிரபாகரன்.
பயிற்சி உக்கிரமாக நடக்கிறது.. ஆயுதங்களும் குண்டுகளும் தயாரித்து வைத்துக்கொள்கிறார் பிரபாகரன். பிரபாகரன் தயாராகுறார். 1972 செப் 17 இல் யாழ்ப்பாணம் விளையாட்டு அரங்கில் நடந்த விழாவின் போது பிரபாகரன் சக்தி வாய்ந்த குண்டு ஒன்றை போலீசாரின் மீது வீசுகிறார். உயிர்ச்சேதம் ஒன்றும் இல்லை.. தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்படுவதற்கு எதிராக தன் எதிர்ப்பைக்காட்ட குண்டு வீசி முடிக்கிறார். ஆனால் இதை வீசியது பிரபாகரன் என்பது அவரின் நண்பர்களுக்கு கூட தெரியாது. தமிழர்கள் முழுவதுமாக போராட்டத்தில் இறங்கி விட்டதௌ உணர்ந்த ஸ்ரீமாவோ போலீசை முழுவதுமாக ஏவி தமிழர்களை அடக்க முயற்சிக்கிறார். தமிழர்களும் வன்முறைய அதிகப்படுத்துகிறார்கள்..

1973 மார்ச் 5ம் திகதி பிரபாகரன் என்னும் சிறுவன் புதிய தமிழ்ப்புலிகள் என்ற பெயரில் அரசுக்கு எதிராக செயற்படுவது போலீஸ்க்கு தெரியவருகிறது. அப்போது அவனுக்கு வயதுப் 18. நள்ளிரவு நேரம் வேலுப்பிள்ளையின் வீட்டுக்கதவை தட்டுக்கிறார் போலீஸ் இன்ஸ்பெக்டரான பாஸ்தியம் பிள்ளை. பலமாக தட்டும் சத்தம் கேட்டதும் பிரபாகரனுக்கு புரிந்துவிட்டது வந்திருப்பது போலீஸ்தான் என . உடனே “வீட்டின் பின்புறமாக வேலியை பிய்த்துக்கொண்டு ஓடுகிறார். முள்ளுக்கம்பி கிழிந்து சட்டை முழுவது இரத்தம். பக்கத்தில் இருந்த மாமா வீட்டில் மாற்றுச்சட்டையை எடுத்து அணிந்து கொண்டு தலைமறைவாகிறார்.,

பிரபாகரனின் தந்தை கதவை திறக்கிறார், போலீசார் சரமாரியாக பிரபாகரனை பற்றி பேசுகிறார்கள்… அவனை சுட்டுத்தள்ளுவோமென எச்சரிக்கை செய்கிறார்கள். வேலுப்பிள்ளைக்கும் பார்வதி அம்மாவுக்கும் மற்றும் பிரபாகரனின் அக்காமாருக்கும் பிரபாகரனின் செயல் அப்போதுதான் தெரியவருகிறது.. பார்வதி அம்மாவின் கண்கள் கண்ணீரால் நிறைகிறது.. அக்காமார் இருவரும் சமாதானம் செய்ய முயற்சிக்கிறார்கள்… போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்தியம் பிள்ளை பிரபாகரனின் அக்காவான ஜெகதீஸ்வரியை பார்த்து “உன்ர காவாலித்தம்பி ( ரவுடி) சீக்கிரம் என்னெட்ட மாட்டுவார், அப்ப தெரியும் அவருக்கு போலீச பற்றி என்றும் சொல்லிவிட்டு வெளியேறுகிறார் . பிரபாகரன் குடும்பத்திற்கும் ஒரே அதிர்ச்சி. . அக்கா இருவரும் அம்மாவும்அதிர்ச்சியில் உறைகிறார்கள்.. ஆனால் மகனைப்பற்றி நன்றாக அறிந்து வைத்திருந்த அப்பா வேலுப்பிள்ளை சகஜமாக அம்மா பார்வதியை சமாதானப்படுத்துகிறார்

வீட்டை விட்டு வெளியேறிய சிறுவன் பிரபாகரன் அந்த சிறு வயதில் தலைமறைவு வாழ்க்கையை தொடங்குகிறான்.. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடமாக மாறி மாறி ஓட்டம் பிடிக்கிறான்.. ஒவ்வொரு இடங்களிலும் பயிற்சி எடுக்கிறார்.

இறுதியில் ஒரு வழியாக ஒரு நண்பனின் உதவியால் பிரபாகரனை கண்டு பிடிக்கிறார் தந்தை வேலுப்பிள்ளை,.. நேருக்கு நேர் தந்தையும் மகனும் சந்திக்கிறார்கள்…….. தந்தை வேலுப்பிள்ளை மகன் பிரபாகரனிடம் ஒன்றுமே கேட்கவில்லை.. நீ என்ன தவறும் செய்து இருக்கலாம்.. ஆனால் அப்பா அம்மா அக்கா அண்ணாவை விட்டு இருப்பது முறையல்ல. வா வீட்டிற்கு என அழைக்கிறார்…. ஒரு நிமிட ஆழ்ந்த அமைதியின் பின்பு பிரபாகரன் பின்வருமாறு கூறுகிறார்.

“அப்பா இனி என்னால உங்களுக்கு எந்த பிரயோசனமும் இல்லை. என்னைய என்ர போக்குல விட்டிடுங்கோ. எனக்கு அலுவல் (கடமை) நிறைய இருக்கு.. நீங்க இனி என்னெட்ட இருந்து ஒண்டையும் எதிர்பார்க்க வேண்டாம்” என சொல்லவிட்டு தந்தையிடம் இருந்து விடை பெறுகிறார், அதன் பின்னர் பலகாலம் தந்தை மகனும் சந்திக்கவே இல்லை.

அதன்பின்னர் போலீஸ் மிகவும் உக்கிரமாக தேட ஆரம்பிக்கிறார்கள்.. பிரபாகரனால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. சரி இப்போதைக்கு இந்தியா செல்லலாம்.. சிறிது காலம் கழித்து மீண்டும் ஈழம் வரலாம் என முடிவெடுத்து குட்டிமணிக்கு சொந்தமான படகொன்றில் குட்டிமணி-தங்கதுரை மற்றும் பிரபாகரன் சகலரும் படகின் மூலம் இந்தியாவின் வேதாரண்யம் வந்து சேருகிறார்கள். அங்கிருந்து சிலர் சேலம் நோக்கியும் பிரபாகரனும் பெரிய சோதியும் வேதாரண்யத்திலேயே தங்குகிறார்கள்.

சென்னைக்கு செல்லலாம் என்பது அவர்களின் ஆசை.. ஆனால் கையில் சாப்பிடவே பணம் இல்லை. எப்படி சென்னை போவது.. வேதாரண்யத்திலேயே தங்குகிறார்கள்… பசிக்கொடுமை.. கோவில்களை தேர்ந்தெடுக்கிறார் பிரபாகரன். கோவில்களில் வழங்கப்படும் தயிர்சாதம்தான் அவர் மூன்று வேளை உணவு. அதைத்தவிர ஒற்றைப்பைசா கூட கையில் இல்லை அவரிடம்..

இதற்கிடையில் வேதாராண்யத்தில் பிரபாகரனையும் குட்டிமணியையும் இறக்கிவிட்டு இலங்கை நோக்கிப்பயணித்த படகில் ஆயுதம் இருந்ததாக சொல்லி இலங்கை இராணுவம் கைது செய்கிறது.. தகவல் இந்திய அரசுக்கும் தெரிவிக்கப்படுகிறது… இந்திய அரசு விழிப்படைகிறது.. 1973 நவம்பர் 18 இல் தஞ்சாவூரில் வைத்து குட்டிமணியை கைது செய்து இலங்கை அனுப்பியது அப்போதைய கருணாநிதி தலைமையிலான திமுக அரசு…… குட்டிமணியை இலங்கை அரசு அடித்துச்சித்திரவதை படுத்தி சிறையில் அடைத்தது. .

இது இவ்வாறு நடந்துகொண்டிருக்க ஆட்டம் சூடு பிடிக்கிறது.

பிரபாகரன் சென்னை நோக்கி பயணிக்கிறார். அங்கு அப்போது பிரபலம் இல்லாத ரா.ஜனார்த்தனன் என்ற அரசியல் வாதியின் உதவியோடு கோடம்பாக்கத்தில் ஒரு சிறிய வீட்டை மாதம் 175 ரூபாய்க்கு வாடகைக்கு பிடித்தார்கள்… அங்கு சிலகாலம் தங்கியிருந்தார், இரவும் பகலும் அவர்கள்தான் சமையல். பணப்ப்பற்றாக்குறை வேறு.. சிறு சிறு வேலைகள்,கடன் என காலத்தை கழித்தார். ஆனால் பிரபாகரனுக்கு அந்த வாழ்க்கை பிடிக்கவில்லை.. இலங்கைக்கு சீக்கிரம் செல்ல வேண்டும் என முடிவெடுத்தார், அங்கு 4வது தமிழ் ஆராய்ச்சிமையம் 1974 ஜனவரி 3 முதல் 7 வரை நடக்க இருந்தது… மிகவும் விமர்சையாக நடாத்த திட்டமிடப்பட்டது… ஆனால் ஸ்ரீமாவோவின் சிங்கள அரசு தடைகளை போட்டது… தமிழகத்தில் இருந்து வரவிருந்த பல தமிழ் அறிஞர்களுக்கு விசா வழங்க தடைபோட்டது..மேலும் பல சிக்கல்களை கொடுத்தது சிங்கள அரசு… தடைகளையும் மீறி விழாவை நடாத்த முடிவு செய்யப்பட்டது..

தொடரும்……………………. பிரபாக்ரனியம் 6 ம் பகுதி ஈழத்தின் தலையெழுத்தை வேறு திசையில் மாற்றிய முக்கிய சம்பவங்கள்,