பிரபாகரனியம் பகுதி 06

சென்னையில் இருந்த தேசியத்தலைவருக்கு கோழைகள் போல மறைந்து வாழ விருப்பம் இல்லை.. இலங்கை செல்ல வேண்டும். எதிர்த்துப்போராட வேண்டும் என்ற எண்ணம் மனதை உறுத்திக்கொண்டே இருந்தது. இலங்கை புறப்பட வேண்டும்…

இதற்கிடையில் 4ம் தமிழ் ஆராய்ச்சி மாநாடு இலங்கையில் நடக்கவிருந்தது. இலங்கை சிங்கள அரசு இந்தியய் தமிழ் அறிஞர்களுக்கு விசா வழங்குவதில் நெருக்கடியைக்கொடுத்தது. ஒருவழியாக மாநாடு ஆரம்பமானது…

“வீரசிங்கம் மண்டபத்தில்” விழா சிறப்புற நடந்தது.சிறிய மண்டபம். தமிழில் தேர்ச்சிபெற்றவர்கள் மட்டுமே கலந்து கொண்ட அறிஞர்கள் மட்டுமே கலந்து கொண்டதால் அந்த மண்டபம் போதுமானதாக இருந்தது.ஆனால் விழாவின் நிறைவுநாள் நிகழ்ச்சிக்கு பொதுமக்களும் அனுமதிக்கப்பட்டனர். ஆகையால் அந்த வீரசிங்கம் மண்டபம் போதுமானதாக இல்லை

ஆகவே யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு விளையாட்டு மைதானத்தில் நடாத்த திட்டமிட்டனர் தமிழ் அறிஞர்கள்.. அதற்காக அனுமதி பெற சென்ற போது அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை போலீஸ். மேயர் துரையப்பா என்னும் தமிழன் தான் அந்த உத்தரவைப்போட்டது. சிங்கள அரசுக்கு விசுவாசமான தமிழ்த்துரோகி அவன்.. விழாவை எப்படியும் நடாத்த வேண்டும், சரி துரையப்பாவிடம் கேட்டு அனுமதி பெறலாம் என இளைஞர்கள் அவனை தேடிய போது அவன் தலைமறைவாகி விட்டான்,

தமிழனுக்கு தமிழனே எதிரியா என நினைத்த இளைஞர்கள் சரி வீரசிங்கம் மண்டபத்திலேயே நடாத்தி விடலாமென நினைத்து வெளியே பந்தல் போட்டு நடாத்துகின்றனர். இறுதி நாள் அமோகமாக நடக்கிறது..

“தமிழறிஞர் நைனா முகம்மதுவின் உரை. மக்கள் தங்களையே மறந்து பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். அமைதியாக நடந்த விழாவில் எமதர்மன் போல நுழைகிறான் சிங்கள போலீஸ் அதிகாரி “சந்திரசேகர”. நுழைந்த அடுத்த கணம் கண்ணீர் குண்டுகளை கூட்டத்துல் வீசுகிறது சிங்கள போலீஸ் படை. மேடையில் இருந்த பேராசிரியர் வைத்தியநாதன் மயக்கம் அடைகிறார், சிங்கள போலீஸ் அரக்கனைப்போல தாக்குகிறார்கள்.. வானை நோக்கி துப்பாக்கியால் சுடுகிறார்கள்.. மின்சாரக்கம்பி மீது குண்டுகள் பட்டு மின்சாரக்கம்பி அறுந்து விழுகிறது.. கூட்ட நெரிசலில் இருந்த மக்கள் மீது விழுகிறது.

விழுந்த அந்த இடத்திலேயே 7 தமிழர்கள் உயிர்விடுகின்றனர், கூட்டத்தில் மிதிபட்டு 2 தமிழர்கள் என மொத்தம் 9 இளைஞர்கள் உயிர் விடுகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் உயிர் விடுகின்றனர்.
இந்த வெறியாட்டத்திற்கு பின்னுக்கு இருந்தது வேறு யாருமல்ல. சிங்கள அரசு போட்ட எலும்புத்துண்டை கவ்விததின்னும் தமிழரான அல்பிரட் துரையப்பா, அமைச்சர் குமரசூரியன் ஆகிய நாய்கள்தான்.. முடிவில் போலீஸ்தான் முதலில் தமிழர்களை தாக்கியது என விசாரணையில் உறுதியாகியது. ஆனாலும் சிங்கள அரசுபோலீசுக்கு எதிராக நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. மாறாக அந்த சிங்கள போலீஸ் அதிகாரிக்கு பதவி உயர்வு வழங்குகிறது.

தமிழ் இளைஞர்கள் வெறிகொண்டு எழுகிறார்கள்.. கோபத்தில் உச்சத்திற்கே செல்கிறார்கள்.. வேறு வழியில்லை சிங்கள நாய்களை பழிக்குப்பழி வாங்க வேண்டும் என முடிவு கொள்கிறார்கள்.

சிவக்குமரனால் சாப்பிட தூங்க முடியவில்லை.. பைத்தியகாரனைப்போல திரிகிறார். அந்த விழாவிறாக ஓடி ஓடி உழைத்த இளைஞர் அவர்…. வெறிகொண்டு திரிகிறார், இந்த சம்பவத்திற்கு காரணமான மூவர்

1. சிங்கள போலீச் சந்திரஸ்ரீ
2. தமிழ் மேயர் அல்பிரட் துரையப்பா
3. தமிழ் அமைச்சர் குமரசூரியன்

மூன்று வெறியர்களும் கொல்லப்படவேண்டும் என முடிவெடுக்கிறார். சரி முதலில் சிங்கள போலீஸ்தான் சாக வேண்டும். திட்டம் தீட்டி களத்தில் குதிக்கிறார் சிவக்குமரன்

யாழ்ப்பாணம் கைலாசப்பிள்லையார் கோவிலைத்தாண்டித்தான் அந்த போலீஸ் காவல் நிலையத்திற்கு செல்லுவான் என்பதை அறிந்த சிவக்குமரனும் அவன் நண்பர்களும் கோவில் வீதியில் காத்திருந்து போலீசின் வாகந்த்தை வழிமறிக்கிறார்கள்.. வாகன ட்ரைவர் ஓடிவிட்டான்… வசமாக மாட்டினான் சிங்கள போலீஸ்.

கையில் இருந்த துப்பாக்கியால் சுடுகிறான்.. ஆனால் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிதானே அது. வெடிக்க வில்லை. பலமுறை சுடுகிறான்..ம்ஹூம் வெடிகவே இல்லை.. துப்பாக்கியால் சுட்டு பயனில்லை என கத்தியை எடுத்து குத்த முயல்கிறான் ஆனால் சிங்கள போலீஸ் எதிர்ப்பால் முடியவில்லை.. மக்கள் கூடவே ஓட்டம் பிடிக்கிறான்.. போகும் வழியில் பெருமாலத்தின் நடுவே அல்பிரட் துரையப்பாவின் கார். அவனையும் சுடுகிறார் துப்பாக்கி வெடிக்கவில்லை..

வேறுவழியில்லை. ஓடுகிறார்.

சிங்கள அரசுக்கு சிவக்குமரனின் வெறி புரிந்தது.. அவன் தலைக்கு 1 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கிறது.. 1974 இல் ஒரு லட்சம் என்பது இப்போதையை 10 கோடிக்கு சமன். சிவக்குமரன் தலைமறைவாக வாழுகிறான்.. முடியவில்லை.. சரி தமிழகம் தப்பி சிறிது காலம் வாழும் படி அறிவுறுத்தப்படுகிறார்.

ஆனால் கையில் ஒரு பைசா இல்லை.. தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்கள் சிலர் பணம் தருவதாக கூறி ஏமாற்றுகின்றன்றனர், கடைசியில் வேறு வழியின்றி சிங்கள அரசின் வங்கி ஒன்றை கொள்ளையடிக்க திட்டம் போடுகிறார். திட்டமிட்டபடியே வங்கிக்குள் சென்று கொள்ளையடிக்க முயற்சிக்கும் போது போலீஸ் வங்கியைச்சுற்றி வளைக்கிறது… ஒரு வழியாக தப்பி ஓடுகிறார். சிங்கள போலீசும் துரத்துகிறது.. புகையிலைத்தோட்டத்திற்கும் புகுகிறார். காலில் முற்கள் குத்திக்கிழிக்கிறது.. முடியவில்லை. ஓடவும் சக்தி இல்லை.

ஆனால் சிங்கள நாய்களிடம் பிடிபட்டு சாகுவதை விட வீரத்தமிழனாய் உயிர் துறக்க முடிவு செய்து கழுத்தில் இருந்த சயனைட் குப்பியை கடித்து தற்கொலை செய்து கொள்கிறார். இதுதான் தமிழீழ வரலாற்றில் நடந்த முதல் தற்கொலை.
யாழ்ப்பாணமே அழுகிறது. சிவக்குமரன் எல்லோர் மனதிலும் நீங்காத இடத்தை பிடிக்கிறார். போராடும் வெறியுள்ள இளைஞர்கள் மத்தியில் புது வேகத்தையும் இலட்சியத்தையும் உருவாக்கிறது சிவக்குமரன் சாவு… சயனைட் அருந்தி இனத்துக்காக இறந்த அந்த துணிகரமான இளைஞனுக்கு வயது வெறும் 17 தான்
1974 ஜீன் 6 இல் நடந்த சிவக்குமரனின் இறுதி ஊர்வலம் யாழ்ப்பாணத்தையே அதிரவைக்கிறது.. அலைகடலென மக்கள் திரண்டு அந்த 17 வயது இளைஞனின் உடலுக்கு மரியாதை செலுத்துகின்றனர்.

பிரபாகரனால் இதை ஏற்கமுடியவில்லை.. இனியும் கோழைகள் போல பதுங்கி இருந்து பிரயோசனம் இல்லை… போராடவே வேண்டும் என்ற வைராக்கியத்தில் சின்னஜோதி மற்றும் ஜனார்த்தன் தடுத்தும் கேட்காமல் இலங்கை வருகிறார்.. கூடவே செட்டி என்னும் ஒருவனையும் அழைத்து வருகிறார், இலங்கை வந்த பிரபாகரனால் பழைய படி நடமாட முடியவில்லை. மறைந்து வாழுகிறார். அந்த நேரத்தில் பிரபாகரன் ஏற்கனவே உருவாக்கிய புதிய தமிழ்ப்புலிகள் அமைப்பில் 20 இளைஞர்கள் வரை இருந்தார்கள்.. போராட எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருந்தார் பிரபாகரன்,

இதற்கிடையில் சிங்கள அரசின் ஜனாதிபதியான ஸ்ரீமாவோ பல்கலைக்கழகம் ஒன்றை திறக்க யாழ்ப்பாணம் வருவதாக செய்தி கிடைத்தது புதிய தமிழ்ப்புலிகள் அமைப்பிற்கு,…. பிரபாகரன் அதிரடியாக நடவடிக்கையை தொடங்குகிறார். தமிழ் அரசியல் தலைவருக்கு ஸ்ரீமாவோ பங்கு பெறும் நிகழ்வை புறக்கணிக்குமாறு எச்சரிக்கை விடுக்கிறார்… என்ன ஆச்சரியம். பிரபலமே இல்லாத அமைப்பான புதிய தமிழ்ப்புலிகள் அமைப்பின் 20 வயது தலைவரின் கட்டளையை அரசியல் கட்சிகள் ஏற்கிறது…

அது மட்டும் போதாது. ஸ்ரீமாவை நடுநடுங்க வைக்க வேண்டும் என முடிவெடுத்து 6 கைக்குண்டுகள் தயாரிக்கிறார். ஒன்று காங்கேசன் துறை காவல் நிலையத்திலும் இன்னொன்றை பஸ் நிலையத்திலும் இன்னொன்றை ஸ்ரீமாவின் சிங்கள உரையை தமிழில் மொழிபெயர்க்கவிருந்தவரின் வீட்டிலும் மற்றைய குண்டுகளை முக்கியமான இடங்களிலும் வெடிக்க வைக்கிறார். செட்டி என்னும் ஒருவனும் பிரபாகரனுக்கு உதவி செய்கிறான்.. அந்த குண்டு வெடிப்பில் உயிர்ச்சேதம் எதுகுமில்லை. ஆனாலும் சிங்களம் நடுங்கியது. ஸ்ரீமாவின் கூட்டம் திட்டமிட்டபடி கோலாகலமாக நடக்கவில்லை.. பொதுசனங்கள் வரவில்லை. . லட்சக்கணக்கில் மக்களை குவித்து ஸ்ரீமாவின் விழாவை சிறப்பிக்க நினைத்த அல்பிரட் துரையப்பா ஏமாற்றம் அடைகிறான்..

1974 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதி அது… குண்டு வெடிப்பிற்காக பிரபாகரனின் உதவியாளன் செட்டி சிங்கள போலீஸாரால் கைது செய்யப்படுகிறான்.. கைது செய்யப்பட்டு சித்திரவதைப்படுத்தப்படுகிறான். முடிவில் எல்லா ரகசியங்களையும் சொல்லி போலீஸின் உளவாளியாகவும் துரோகம் செய்து தமிழருக்கு எதிராக மாறுகிறான்.
பிரபாகரனால் பழைய இடங்களில் இருக்க முடியவில்லை.. காடுமேடு புற்கள் புதர்கள் என மறைந்து வாழுகிறார், கையில் பணமும் இல்லை.. பசி பட்டினி.. கடன் வாங்குதல் இலைகள் பழங்கள் என காலத்தை கடத்துகிறார், ஓரிரு முறை வல்வெட்டுத்துறையில் புத்தக விற்பனையாளர் ப்ருவரிடம் 30 ரூபாய்கள் வாங்கி சாப்பிடுகிறார். காலம் இப்படியாக ஓடுகிறது..

சிவக்குமரனின் கொலைக்கு அர்த்தம் தேவை.அவன் விட்டுச்சென்ற பணியை முடிக்க வேண்டும்… அல்பிரட் துரையப்பா என்ற துரோகி கொல்லப்பட்ட வேண்டும் என முடிவெடடுக்கிறது புதிய தமிழ்ப்புலிகள் அமைப்பு… திட்டம் போடுகிறார் தலைவர் பிரபாகரன். சரி அந்த இனத்துரோகியை தீர்த்துக்கட்டலாம்.. எங்கு வைத்துக்கொல்லலாம்???

தனக்கு துணையாக கிருபாகரன், பற்குணராஜா, கலாவதி என்ற மூன்று இளைஞர்களை சேர்த்துக்கொள்கிறார். திட்டம் தீட்டி முடிக்கிறார்கள். அவனை கொல்ல அவர்கள் தேர்ந்தெடுத்த இடம் “பொன்னாலை வரதராஜ பெருமாள் கோவில் வாசல்”. ஊருக்கு ஒதுக்குப்புறம் உள்ள அமைதியான இடம். வெள்ளிக்கிழமைகளில் துரையப்பா அங்கு வருவது வழமை. அதை தெரிந்திருந்த பிரபாகரன் அந்த இடத்தை தேர்ந்தெடுத்தார்..

அதன்படி 1975 ஜீலை 26 ஆம் திகதி இரவு பொன்னாலையில் இருக்கும் ஒரு நண்பனின் வீட்டிற்கு செல்கிறார் பிரபாகரன்.. நண்பனின் தாய் பரிமாறிய உணவை நண்பனும் அவரும் சேர்ந்து உண்டபின்பு படுக்கைக்கு செல்கிறார்கள்.. அப்போதுதான் பிரபாகரனின் நண்பன் பிரபாகரனின் துப்பாக்கியை காண்கிறார். நண்பனின் கண்களில் ஒரு நக்கல். சிரித்தபடி இதை வைத்து குருவியை வேண்டுமானால் சுடலாம் என்று நக்கலாக சொல்கிறான்… பிரபாகரனும் சிறுது நக்கலாக ஓம் ஓம் நாளைக்கு குருவியைத்தான் சுடனுமெ என்று சொல்லி விட்டு தூங்குகிறார்.

காலை 6 மணிக்கெல்லாம் புறப்படுகிறார் பிரபாகரன். கோவிலின் வாசலில் நால்வரும் காத்திருக்கின்றனர். ஒரே படபடப்பு. கோபம் வெறி. துரோகி அல்பிரட் துரையப்பாவின் வருகைக்கு காத்திருக்கின்றனர்… ம்ம்ம் கார் வருகிறது.. வேகமாக வந்து மரநிழலி நிற்கிறது.. பிரபாகரனுக்கு துரையப்பாவின் முகம் தெரியாது.. கிருபாகரனுக்கு தெரியும்.. கண் சைகை மூலம் இவனேதான்.நாம் கொல்ல வேண்டிய இனத்துரோகி என அடையாளம் காட்டிக்கொடுக்கிறான் கிருபாகரன்.. அடுத்த நிமிசமே காரை நோக்கி செல்கிறார்கள் பிரபாகரனும் கலாவதியும்…….. அல்பிரட் துரையப்பா காரை விட்டு இறங்கியதுதான் தாமதம் “வணக்கம் ஐயா” என வணக்கம் வைக்கிறார் பிரபாகரன். துரையப்பா வணக்கம் சொல்லி முடிக்கும் முன்பு டுமீல் என ஒரு துப்பாக்கிக்குண்டு துரையப்பாவின் நெஞ்சை துளைக்கிறது. மொத்தம் 4 குண்டுகளை சுடுகிறார் பிரபாகரம்

அழிந்தான் துரோகி. அதே இடத்தில் மடிகிறான் அல்பிரட் துரையப்பா.. மக்களுக்கு ஒரே அதிர்ச்சி. மக்கள் கூட்டமாக கூடவே அல்பிரட் வந்த காரை எடுத்துக்கொண்டு அந்த 4 பேரும் தப்பிக்கின்றனர், நீர்வேலி என்னும் இடத்தில் காரை மறைத்துவிட்டு ஆளுக்கொரு பக்கம் நடையை கட்டுகிறார்கள்;;; தமிழ் பிரதேசம் முழுவதும் ஒரே மகிழ்ச்சி .. பட்டாசுகள் வெடித்து மக்கள் கொண்டாடுகின்றனர்,

ஆனால் ஸ்ரீமாவோ உச்சகட்ட கோபமடைகிறார். தனக்கு விசுவாசமான அல்பிரட் துரையப்பா கொலை அதிர்ச்சியளிக்கிறது.. அல்பிரட் துரையப்பாவின் இறுதி ஊர்வலம் நடந்து முடிய முன்பு கொலையாளிகள் பிடிபட வேண்டும்ன் என உத்தரவை போடுகிறார்.

தமிழர் மாணவர் இயக்கத்தை சேர்ந்த சிலரை கைது செய்கிறது சிங்களப்போலீஸ்.. ஆனால் உண்மையான கொலையாளிகளான மூவரையும் சிங்கள அரசால் இலகுவில் கைது செய்யப் முடியவில்லை. பல நாட்களின் பின்னர் பற்குணராஜா.கலாவதி ஆகிய இருவரும் கைதுசெய்யப்படுகிறார்கள்…சித்திரவதைகளை தாங்க முடியாத் அவர்கள் பிரபாகரனின் பெயரையும் புதிய தமிழ்ப்புலிகளென்ற பெயரையும் சொல்லுகிறார்கள்.. அதன் பின்னர்தான் சிங்கள அரசுக்கு இந்த அமைப்பு பற்றி தெரிய வருகிறது………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………….

மிகுதி பதிவு 7 இல்