பிரபாகரனியம் – பகுதி 8

அல்பிரட் துரையப்பாவின் கொலையின் பின்னர் பிரபாகரன் முக்கியமாக தேடப்பட்டு வந்தார், வெறுமனே தாக்கிவிட்டு ஓடி ஒளிந்து கொள்ளலாம், சிங்கள ஜேவிபியினர் போல நாடு முழுக்க புரட்சியை செய்து சிங்களவனை கதிகலங்கச்செய்து விடலாம் என ஆரம்பிக்கப்பட்ட விடுதலைப்போராட்டம் இன்னும் உக்கிரமாக வலுவடைகிறது . பிரபாகரன் மிகுந்த முனைப்புடன் செயலாற்ற ஆர்ம்பிக்கிறார்..

இளைஞர்களுக்கு பலமான ஆயுதப்பயிற்சியும் உடற்பயிற்சியும் வழங்குகிறார் பிரபாகரன். இதற்கிடையில் லண்டனின் இருந்தும் தமிழீழத்தில் இருந்தும் இயங்கி வந்த ஈரோஸ் இயக்கத்தினருடன் சேர்ந்து பாலஸ்தீனத்தின் விடுதலைப்போராட்டத்தின் மூலமும் ஆயுதப்பயிற்சியை சில விடுதலைப்புலிகள் அமைப்பினர் பெற்றுக்கொள்கின்றனர்.

படிப்படியாக மக்கள் இராணுவமாக புலிகள் அமைப்பு உருவாக்கப்படுகிறது… அது ஒரு புறம் நடக்க தமிழரசுக்கட்சி பொறுமை இழக்கிறது.. கூட்டாட்சி இனி கைகூடாது என முடிவெடுக்கிறது. தனித்தமிழீழமே சரியான தீர்வாக அமையும் என அரசல் புரசாலக கட்சிக்குள்ளும் பேச்சு எழத்தொடங்குகிறது…

அந்த நேரத்தில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள வட்டுக்கோட்டையில் உள்ள பன்னாகம் என்ற இடத்தில் மாநாட்டை ஏற்பாடு செய்கிறது தமிழரசுக்கட்சி, அந்த மாநாட்டில் தான் தனித்தமிழீழம்தான் தமிழர்களுக்கான நிரந்த தீர்வு எனவும் முடிவெடுக்கப்படுகிறது, இந்த தீர்மானத்தை அறிவித்தது “தந்தை செல்வா” தான்…. அத்துடன் இவ்வளவு காலம் தான் முன்னிலைப்படுத்திய கூட்டாச்சி முறை தமிழருக்கு சரி வராது என்பதையும் அது தோற்றுப்போனதையும் நினைத்து வருத்தம் அடைகிறார்.

இந்த வரலாற்றுச்சிறப்பு மிக்க தீர்மானமே வட்டுக்கோட்டை தீர்மானம்..

தீர்மானத்தில் பேசிய தந்தை செல்வா

“இலங்கையின் வடக்கும் கிழக்குமே தமிழீழம். அங்கு வாழும் அனைவரும் தமிழீழத்தில் குடியுரிமை பெற்றவர்கள். தமிழிழத்தில் தமிழருக்கே முன்னுரிமை,” என்றும் இன்னும் விரிவாக பல விடயங்களையும் அறிவித்தார்.

இதுவரை காலமும் சிங்களவனுடன் சேர்ந்துதான் கூட்டாட்சி செய்யவேண்டும் என வலியுறுத்திய தந்தை செல்வாவே தனித்தமிழீமே தீர்வு என அறிவித்ததும் இளைஞர்க: வெறி கொண்டு சத்தமிட்டார்கள். . தமிழீழமே தீர்வு எனவும் தமீழிழம் பெற உயிரையும் கொடுப்போம் எனவும் ஆக்ரோசமாக கர்சித்தார்,.. அதில் கலந்து கொண்டவர்களில் பிரபாகரனும் ஒருவர். ஆனாலும் அவருகு இந்த தீர்மானத்தில் முழு உடன்பாடு இல்லை. காரணம் தமிழரின் தீர்வை ஆயுதப்போராட்டமே தீர்மானிக்குமே தவிர அரசியல் போராட்டம் அல்ல என நினைத்த்துக்கொண்டார்.

இது இப்படியாக நடந்து கொண்டிருக்க தமிழரின் நடவடிக்கையை வேவு பார்க்க இலங்கைப்போலீசில் இருந்த பாஸ்தியம்பிள்ளை மற்றும் பத்மநாதன் ஆகியோர் ம்றைமுகமாக செயற்பட்டு வந்தனர், பிரபாகரனுக்கும் இது தெரியும் , இந்த துரோகிகளும் கொல்லப்பட்ட வேண்டும் . அதற்காக காலம் வரும் என காத்திருந்தனர் புலிகள்

இது இப்படியாக நடந்து கொண்டிருக்க சிலரின் சிபாரிசின் பெயரில் குழுவில் “உமாமகேஷ்வரன்” என்னும் இளைஞன் சேர்த்துக்கொள்ளப்படுகிறான். தலைவரிய விட பத்து வயது மூத்தவர். நன்றாக ஆங்கிலம் மற்றும் சிங்களம் மாற்றும் தமிழ் பேசத்தெரிந்தவர், அதலால் புலிகள் அமைப்பில் சற்று மேலான இடத்தை கொடுத்தார் பிரபாகரன்,

இப்படியாக அரசியல் மற்றும் போராட்டம் நடந்து கொண்டிருக்கையில் 1977 ஏப்ரல் தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் தந்தை செல்வா இறைவனடி சேர்கிறார். தமிழர் விடுதலைக்கூட்டணியின் புதிய தலைவராக திரு அமிர்தலிங்கள் தேர்ந்தெடுக்கப்டுகிறார்,,

அடுத்த தேர்தலும் வருகிறது. தமிழர் விடுதலைக்கூட்டணிக்கு மக்கள் பூரணமாக ஆதரவளிக்கின்றனர். காரணம் வட்டுக்கோட்டையில் வைத்து தமிழீழமே தீர்வு என அவர்காள் நிறைவேற்றிய தீர்மானம்தான். அந்த தேர்தலில் தமிழர் விடுதலைக்கூட்டணி பலமான வெற்றியை பெற்றது… அத்துடன் அப்போது ஆட்சியில் இருந்த ஸ்ரீமாவோ தேர்தலில் மண்ணைக்கவ்வுகிறார். புதிய பிரதமராக ஜே.ஆர்,ஜெயவர்தனா பதவியேற்கிறார்,

அப்போதுதான் புலிகள் மீண்டும் சினமடைகிறார்கள்… வட்டுக்கோட்டையில் தமிழீழம்தான் தீர்வு என முழங்கிய தமிழர் விடுதலைக்கூட்டணி தேர்தலில் வென்றவுடன் அவற்றை எல்லாம் மறந்து சிங்கள நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாக அமர்ந்தது..

இது தமிழரிடத்தேயும் புலிகள் இடத்தேயும் பலத்த எதிர்ப்பை உண்டாக்கியது,எந்த அரசை எதிர்க்கிறோமோ அதே அரசின் கீழும் அந்த அரசியல் சாசனத்தின் கீழ் நாடாளுமன்றம் செல்லும் தமிழர்கள் கூட்டணி மீது சினம் கொள்கிறார்கள் தமிழர்கள்’..

இனி இவர்களை நம்பி நமக்கு பயனில்லை நாமே நமக்கு தீர்வு என புலிகள் முடிவெடுக்கிறார்கள்.

அப்போதுதான் அந்த கோரச்சம்பவத்தை அரங்கேற்றியது சிங்கள அரசு.

யாழ்ப்பாணம் லோட்டரி கிளப்பால் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது, அந்த பணத்தில் வரும் பணத்தை வைத்து புற்று நோய் நோய் முகாம் அமைப்பதாக முடிவெடுத்தார்கள். திட்டமிட்டே இரு போலீஸ்காரங்கள் உள்ளே நுழைந்து பிரச்சனை செய்கிறார்கள்.. தமிழர்களின் எதிர்ப்பால அவர்கள் கலைந்து சென்றாலும் ஆகஸ்து 15 மீண்டும் அதே இடத்தில் பிரச்சனையை உண்டாக்கி அப்பாவித்தமிழர்களை தாக்குகின்றனர். துப்பாக்கியாலும் சுடுகின்றனர். தொடர்ச்சியாக நடந்த கலவரத்தில் 4 தமிழர்காள் சுட்டுக்கொல்லப்படுகிறார்கள்…

20 வரை பலமான காயத்துக்கு உள்ளாகிறார்கள்., நிலமை மோசமடைகிறது.. புலிகள் அமைப்பால் ஒன்றும் செய்ய இயலவில்லை,,

இதற்கிடையில் ஆகஸ்து 18 இல் எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்ற அமிர்தலிங்கம் யாழ்ப்பாணத்தில் “ ஏன் அப்பாவிகளை தாக்குகிறீர்கள்” அவர்கள் என்ன் செய்தார்கள் என சத்தம் போடுகிறார். பேசி முடிக்கும் முன்னரே எதிர்க்கட்சி தலைவர் என்று கூட பார்க்காமல் பின் தலையில் துப்பாக்கியால் தாக்குகிறது சிங்கள போலீஸ்.

அரசியல் தலைவருக்கே இந்த நிலை என்றால் அப்பாவித்தமிழர்களின் நிலை சொல்லவா வேண்டும்.. நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைகிறது… முடிவில் 112 தமிழர்கள் கொல்லப்பட்டும் 25000 பேர் வீடுகளை இழந்தும் 100 கோடி மதிப்பிலான சொத்துக்களை இழந்தும் பாதிப்படைகின்றனர்.

இதனால் ஆத்திரமடைந்த அமிர்தலிங்கம் பாராளுமன்றத்தில் தனது எதிர்ப்பை எழுப்புகிறார், அதற்கான சிங்கள பிரதமரான ஜே,ஆர் ஜெயவர்த்தனவில் பதில் பின்வருமாறு அமைந்தது.

“நீங்கள் தமிழீழம்,,தனிநாடு என கோசம் எழுப்புவதால் சிங்கள மக்களும் இளைஞர்களும் கோபம் அடைகின்றனர். அதனால்தான் தாக்குகின்றனர், சண்டை போடவேண்டும் என்றால் சண்டை போடலாம் தைரியமாக வாருங்கள் என திமிராக சொல்கிறார். .

தமிழர்கள் இதை எதிர்பார்க்கவில்லை.. இவ்வளவு காலம் மறைமுகமாக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையை வெளிப்படையாகவே சிங்கள அரசு அதுகும் பாராளுமன்றத்திலேயே அறிவித்தது தமிழர்களுக்கு உச்சகட்டமாக கோபத்தை ஏற்படுத்தியது,,, அந்த நேரத்தில்தான் கிழக்கு வடக்கு தெற்கு என பல பிரதேசங்களிலும் பாதிக்கப்பட்ட பல இளைஞர்கள் புலிகள் இயக்கத்திலும் மேலும் பல இயக்கத்திலும் இணைகிறார்கள்..

அந்த நேரங்களில்தான் தேசத்தின் குரலாக ஒலித்த அண்டன் பாலசிங்கத்தில் தொடர்பும் புலிகளுக்கு கிடைக்கிறது.. அன்ரன் பால்சிங்கள். ஒரு பத்திரிக்கையாளர்.. முதல் மனைவி சக்கரை நோயால் இறக்கவே சிறிது காலத்தில் ஆஸ்திரேலியாவின் அடெல் பாலசிங்கத்தை மணந்து விடுதலைப்போரில் இறுதி வரை பணியாற்றிய ஒருவர்,

அது அப்படியிருக்க சிங்கள ஜே.ஆர், அரசு சர்வதேசத்திற்கு தமிழருக்கு தமிழீழத்தில் மீது ஆர்வம் இல்லை எனக்காட்ட ஒரு உக்தியை கையாண்டது..

கிழக்கிலங்கை தமிழர்களுக்கு தமிழீழத்தில் மீது விருப்பம் இல்லை எனவும் வடக்கு தமிழர்கள் மட்டுமே தமிழீழம் என பிரிவினை செய்வதாக ஒரு தோற்றம் உருவாக்கினர்.

அதற்காக அவர்கள் தேர்ந்தெடுத்தது கனகரத்தினம் என்னும் ஒரு தமிழனை அவர் வேறுயாருமல்ல. பொத்துவில் தொகுதியில் தமிழர் விடுதலைக்கூட்டணியின் சார்ப்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ம.கனகரத்தினம்..

சிங்களவர் எப்படியோ அவனை விலைக்கு வாங்கி விட்டார்கள். தமிழர் விடுதலைக்கூட்டணியின் வெற்றி பெற்றாலும் சிங்களவர்களின் ஆசை வார்த்தைகளால் தடம் மாறி ஐக்கியதேசியக்கட்சியில் இணைந்தார், . இணைந்தது மட்டுமல்லாமல் சிங்களவர்களுக்கு ஆதரவாகவும் தமிழர்களுக்கு ஈழத்தின் மீது பற்றி இல்லை எனவும் கருத்துக்களை பரப்பினான்..

இது பிரபாகரனுக்கு கோபத்தையும் எரிச்சலையும் தூண்டியது… துரோகி முத்திரை குத்தினார் பிரபாகரன்.. இவனை தீர்த்துக்கட்ட வேண்டும் என முடிவு கட்டப்படுகிறது. அதன் படி திட்டமும் தீட்டப்படுகிறது,,

சிங்களமும் ஆங்கிலமும் நன்றாக பேசத்தெரிந்த உமாமகேஸ்வரன் கனகரத்தினத்தின் நடவடிக்கைகளை கவனிக்கிறான். ஒரு நாள் அல்ல இரு நாள் அல்ல . தொடர்ந்து இரு வாரம் கவனிக்கிறார்.

முழுதாக தகவல்களை திரட்டிய பின்பு பிரபாகரனுக்கு அறிவிக்கிறார், பிரபாகரனும் காலம் தாழ்த்தவில்லை..

1978 ஜனவரி 26 இல் இரயில் ஏறி அடுத்த நாள் கொழும்புக்கோட்டையை வந்து அடைகிறார்கள். இரயில் நிலையத்தில் உமாமகேஸ்வரன் தயாராக நிற்கிறார்.. பிரபாகரனின் வருகைக்கு பின்னர் இருவரும் காலை உணவை முடித்து விட்டு கொழும்பில் உள்ள கொள்ளுப்பிட்டியவிற்கு செல்கிறார்கள்.. அங்குதான் கனகரத்தினத்தின் வீடு உள்ளது…

2 வாரம் அவதானிப்பின் படி காலை 9 மணிக்கு கனகரத்தினம் வெளியே வருவார் என்பது அவர்களின் எதிர்பார்ப்பு.. அதன்படியே கனகரத்தினமும் வெளியே வந்து காரை நோக்கி நடக்கிறார், அவனுக்காக காத்திருந்த பிரபாகரன் சட்டென ஓடி வந்து கனகரத்தினத்தை நோகி சுடுகிறார்
கண்ணிமைக்கும் நேரத்தில் 3 குண்டுகள் கனகரத்தினத்தை துளைக்கிறது.. ரத்த வெள்ளதிதில் விழுகிறான் கனகரத்தினம். சுட்டதுதான் தாம்தம் பிரபாகரன் ஒரு திசையிலும் உமாமகேஸ்வர்ன ஒரு திசையிலும் செல்கிறார்கள்…. அதன்படியே உமாமகேஸ்வரன் கொழும்பிலும் பிரபாகரன் யாழ்ப்பாணத்தை நோக்கியும் புறப்படுகின்றனர்,

ஆனாலும் கனகரத்தினம் இறக்கவில்லை. குண்டடி பட்டு மயங்கிய நிலையில்தான் இருந்தான். உடனடியாக வைத்தியசாலைக்கு எடுத்துச்சென்றதால் அவசர சிகிச்சை மூலம் காப்பாற்றப்படுகிறான்..
கண் விழித்த கனகரத்தினம் போலீஸ் வாக்குமூலத்தில் தன்னைசுட்டது ஒரு கட்டைப்பையனும் நெட்டைப்பையனும் என சொல்கிறார்,கட்டைப்பையன் பிரபாகரன். நெட்டைப்பையன் உமா மகேஸ்வரன்.

சிகிச்சை பெற்று வீடுதிரும்பிய கனகரத்தினத்தால் அதிக காலம் உயிர் வாழ முடியவில்லை. துப்பாக்கி தந்த அதிர்ச்சியால் சரியாக 3 மாதங்கள் கழித்து உயிர் விடுகிறார்,..

இது சிங்கள அரசை கொதித்தெழ வைக்கிறது. முதலில் அல்பிரட் துரையப்பா பின்னர் கனகரத்தினம் என சிங்களவனுக்கு ஆதரவான தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்பது சிங்களத்தை ஆட்டம் காண வைத்தது
உடனடியாக கனகரத்தினத்தை கொலை செய்தவர்களை கைது செய்ய வேண்டும் என உத்தரவை போடுகிறது சிங்கள அரசு. அதற்காக யாழ்ப்பாணத்தில் ஒரு தனிப்படை அமைக்கப்படுகிறது.

அந்த தனிப்படைக்கு தலைமை தாங்கியது அதே பாஸ்தியம்பிள்ளைதான். அல்பிரட் துரையப்பா வழக்கில் பிரபாகரனை தேடித்திரிந்த பாஸ்தியம்பிள்லைதான் கனகரத்தினம் கொலையையும் விசாரிக்கிறார், ஏற்கனவே தமிழருக்கு எதிராக பணி செய்யும் பாஷ்தியம் பிள்ளை மீது கொலை வெறியில் இருந்த புலிகளுக்கு இது நல்ல சந்தர்ப்பமாக அமைகிறது….

பிரபாகரனியம் 09இல் தேசியத்தலைவரின் தாக்குதல்கள் மற்றும் இந்தியாவின் தலையீடு என்பன இடம்பெறும்………………………………….