பிரபாகரனியம் 4ம் பாகம்

தமிழ் அரசியல் கட்சிகள் மீது இருந்த அவநம்பிக்கையால் தொடங்கப்பட்ட “தமிழ் மாணவர் பேரவையில் பல துடிப்புள்ள தமிழ் இளைஞர்கள் இணைந்தார்கள். அதில் முக்கியமானவர் சிவக்குமரன். மிகுந்த இனப்பற்றுக்கொண்டவர். சிங்களவன் அடித்தால் திரும்ப அடிக்க வேண்டும் என்ற கொள்கையை கொண்டவர்.. ஈழம் மூழ்வதும் ஒரே படபடப்பு.

இதற்கிடையில் பள்ளிக்கூடத்திலேயே வெடிகுண்டுகளை தயாரிக்க பிரபாகரன் ஆரம்பித்து விட்டார். பாடசாலையின் ஆய்வு கூடத்தில் இருந்த ஒரு அமிலப்போத்தலை எடுத்து அதை சோடாப்போத்தலில் அடைத்து மரத்தக்கையால் அடைத்து ஒரு திரியை செருகுகிறார். வெடிக்க வைத்து பரிசோதனை செய்யப்போவது எங்கே? வேறு எங்குமல்ல?. பாடசாலை பாத்ரூமிலேயேதான். எல்லாம் தயாராகிறது.. எல்லோரும் இடைவேளை முடித்து வெளியேறும் வரை காத்திருக்கின்றனர். சந்தர்ப்பம் சரி வரவே பாத்ரூமின் உள்ளே வெடிகுண்டை வைத்து பத்த வைத்து விட்டு ஓடி வருகின்றனர். ம்ஹூம் வெடி வெடிக்கவில்லை. சில நிமிடங்கள் ஆகியும் வெடிக்கவில்லை.

. எல்லோர் முகத்திலும் ஒரு ஏக்கம்… சுமார் 10 நிமிடங்கள் தாமதம் ஆன பிறகு பிரபாகரனின் நண்பன் ஒருவன் உள்ளே சென்று பார்த்து விடலாம் என முடிவெடுக்கிறார். டமார் என ஒரு சத்தம்.. குண்டு வெடித்துவிட்டது. ஒரே கூச்சல் . சத்தம் என கொண்டாட்டமாக பிரபாகரனும் நண்பர்களும் ரகளைப்படுத்தி விட்டனர்.
தலைமை ஆசிரியர் சத்தம் கேட்டு ஓடி வருகிறார். பிரபாகரனும் நண்பர்களும் ஒரே ஓட்டம். வகுப்பறையினுள் நல்ல பிள்ளையாக அமருகின்றனர், தலைமை ஆசிரியருக்கு நன்றாகவே தெரியும் இது பிரபாகரனின் வகுப்பு மாணவர்கள்தான் என்று.
ஆனால் அவர் அதை பெருது படுத்தவில்லை..

லேசான குரலில் கண்டிக்கிறார். “
நீங்கள் என்னவும் செய்யுங்கோ. ஆனால் இந்தச்சேட்ட எல்லாம் பள்ளிக்குடத்துக்க வச்சுக்கொள்ளக்கூடாது. விளங்கிட்டோ?. எது எண்டாலும் வெளிய பாத்துக்கொள்ளுங்கோ. என அதட்டுகிறார். ஆனால் .இதெற்கெல்லாம் பிரபாகரன்தான் காரணம் என அவருக்கு தெரியாது.. அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வெடிகுண்டு தயாரிப்பு சிறிய அளவில் தொடங்குகிறார்கள்.

அது ஒருபுறம் இருக்க அரசியல் நகர்வு ஒரு புறம் நகர்கிறது. தமிழ் மாணவர்களுக்கு கல்வியில் இழைக்கப்பட்ட அநீதிகளை எதிர்த்து தமிழரசுக்கட்சி இலங்கையின் பிரதமர் ஸ்ரீமாவோவை சந்திக்க செல்கிறார்கள். ஆனால் எதுவானாலும் கல்வி அமைச்சர் முகம்மது பதியுதீனிடம் தெரிவியுங்கள். என்னால் ஒன்றும் செய்ய இயலாது என்று புறக்கணிக்கிறார். பதியுதீனையும் சந்தித்தார்கள். ஆனால் கல்விக்கட்டுப்பாட்டைத்தவிர எதையும் கேளுங்கள் என கைவிரிக்கிறார் கல்வி அமைச்சர்..

தமிழ் இளைஞர்கள் பொறுமை இழக்கின்றார்கள். சிங்கள நாய்களுக்கு அவர்கள் பாஷையில் சொன்னால்தான் புரியும் என முடிவெடுக்கிறார்கள். தமிழ் மாணவர் பேரவையை சேர்ந்த சிவகுமரன் வன்முறைக்கு திட்டமிடுகிறார். சரி இனி சிங்களவனிடம் கேட்டுப்பெற முடியாது அடித்துத்தான் பிடுங்க வேண்டும்..

கலாச்சாரத்துறை உதவி அமைச்சர் சோமவீர சந்திரஸ்ரீ என்னும் சிங்களவன்.. தமிழர்கள் மீது மிகுந்த இனவெறி கொண்ட ஒரு சிங்களவன். புரட்சிக்கார தமிழ் இளைஞர்கள் அவனை இலக்கு வைக்கிறார்கள்… யாழ்ப்பாணம் வரட்டும் வகையாக விருந்து கொடுக்கலாம் என நினைத்துக்காத்திருக்க்கிறார்கள். அவனும் உரும்பிராய் இந்துக்கல்லூரிக்கு 1970 ஜீன் 13 இல் வருகிறான். ஏற்கனவே திட்டமிட்ட படி சிவகுமரன் அவனின் காரை இலக்கு வைத்து குண்டு வைக்கிறான். ஆனால் சந்திரஸ்ரீ அதிஸ்டவசமாக தப்பித்துக்கொள்கிறான். கார் பலத்த சேதம் அடைகிறது. ஆனால் உயிர்ச்சேதம் எதுகுமில்லை..

சம்பவம் யாழ்ப்பாணத்தை உற்சாகமாக்கிறது… “ எங்கட தமிழ்ப்பெடியல் இறங்கிட்டாங்கள். இனி உந்த சிங்களவனுக்கு தெரியும் நாங்கள் யாரெண்டு “ என்று ஈழத்தமிழில் சந்திக்கு சந்தி பேச்சும் சிரிப்புமாக இருக்கிறது. அந்த குண்டு வெடிப்பால் சிவகுமரன் போலீஸாரால் கைது செய்யப்படுகிறார். சொல்லவே இயலாத கொடுமையான சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படுகிறார். சிவகுமரன் உறுதி கொள்கிறார். இனி இந்த சிங்கள நாய்களிடம் மாட்டக்கூடாது.. இறந்தாலும் என் இனத்துக்காக இறக்கவேண்டும் என உறுதி கொள்கிறார்.

அவ்வாறாக போராட்டம் சிறிது சிறிதாக ஆரம்பிக்கிறது. அரசாங்கம் மீதான தமிழ் இளைஞர்களின் வெறுப்பு உச்சகட்டமாகிறது. களத்தில் இந்த முறை தேசியத்தலைவர் பிரபாகரன். 16 வயதுப்பொடியன்.. அரசாங்க சொத்துக்களை சேதப்படுத்தியும் அழித்தும் அவர்களுக்கு நம் எதிர்ப்பைக்காட்டலாம் என நினைக்கிறார்.

சரி சரி செய்யலாம. ஆனால் என்ன செய்வது. சிறிது நேர யோசனை.. சரி உயிர்ச்சேதம் இல்லாமல் ஒரு அரச பஸ்ஸை எரிக்கலாம் என முடிவெடுக்கப்படுகிறது.. தன்னுடன் இன்னும் இரண்டு பேரைச்சேர்த்துக்கொள்கிறார். கடைசிப்பயணம் முடிந்த பிறகு பஸ் பருத்துறைக்கு யாரையும் ஏற்றாமல் போகும். அதை எரிக்கலாம். இரவு நேரம் மறைந்து இருக்கிறார்கள். முழுவதுமாக இருட்டு. சிறிது நேரத்தில் பஸ் பார்க்கும் தூரத்தில் வேகமாக வருகிறது. உடன் இருந்த இருவருக்கும் பயம். ஓட்டம் பிடிக்கிறார்கள். பிரபாகரன் பின்வாங்கவில்லை. வரட்டும் என காத்து இருக்கிறார்.. பஸ் அருகில் வருகிறது.. பஸ்ஸை பலவந்தமாக நிறுத்துகிறார். அடுத்த கணமே ட்ரைவரையும் கண்டெக்டரையும் துரத்தி விட்டு பெற்றோலை ஊற்றி பற்ற வைக்கிறார். பஸ் முழுவதுமாக எரிந்து சாம்பலாகிறது. அப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக சிங்களவன் உணரத்தொடங்குகிறான் தமிழனின் போராட்ட குணத்தை……

போராட்டம் இப்படியாக சூடு பிடிக்க இடைநடுவே ஜனநாயகக்கட்சிகளும் முடிந்த அளவு முயற்சி செய்கின்றன. இந்தியாவின் மாநில மத்திய அரசுகளைப்போல இலங்கையில் 5 மாநிலம் 1 மத்திய அரசு எனவும் இந்தியாகின் மாநிலங்களுக்கு இருக்கும் அதிகாரத்தை விடவும் குறைந்த அளவு தங்களுக்கு போதும் எனவும் திட்டத்தை சிங்களவனுக்கு சமர்ப்பிக்கிறார்கள். ஆனால் சிங்கள அரசோ முடியவே முடியாது. ஒரே நாடு ஒரே மொழி ஒரே அரசுதான் என திட்டவட்டமாக மறுக்கிறது.

அது ஒருபுறம் நடக்க ஸ்ரீமாவின் ஆட்சியை விரும்பாத சிங்கள அமைப்பான ஜேவிபி கிளர்ச்சியின் மூலம் ஆட்சியைக்கைப்பற்ற நினைக்கிறது
அதுதான் ஜேவிபி புரட்சி.. ஸ்ரீமாவோவின் ஆட்சிக்கு முன்னரான டட்லி சேனநாயக்காவின் ஆட்சியின் போது இராணுவ ஆட்சிக்கு முயற்சித்ததாக கைது செய்யப்பட்ட ரோஹன் விஜவீரதான் இதற்கான அடிப்படைக்காரணம்..

சிறையில் இருந்து வெளியே வந்த விஜயவீர தங்கள் சிங்கள இயக்கத்தில் பெருமளவு சிங்கள இளைஞர்களை சேர்க்கிறார். ஸ்ரீமாவோவின் ஆட்சியைக்கலைக்க பெருமளவு ஆயுதங்களையும் வாங்குகிறார். புரட்சிக்கான திட்டம் தீட்டப்படுகிறது, எல்லாம் தயார் நிலைக்கு வைக்கப்படுகிறது. ஆனால் எதிர்பாராத விதமாக வெயில் சூட்டினால் அவர்களின் வெடிமருந்துகள் யாவும் தீப்பிடித்து வெடிக்க தொடங்கின. சிங்கள அரசு சுதாகரித்துக்கொண்டு உடனடியாக மக்கள் கிளர்ச்சி என ரோஹன் விஜவீரவை கைது செய்கிறது.

.பலர் கைது செய்யப்படுகின்றனர்
சிங்கள இளைஞர்களின் புரட்சி நாடு முழுவதும் வெடிக்கிறது. இலங்கை முழுவதும் ஜேவிபி என்னும் புரட்சிப்படை தாக்கத்தொடங்குகிறது.. பெரும்பாலும் சிங்கள கிராமங்களும் சிங்கள நகரங்களுமே தாக்கப்பட்டன. இலங்கை முழுவதும் இருந்த 273 போலீஸ் நிலையங்களில் 93 போலீஸ் நிலையங்களை கைப்பற்றினர் ஜேவிபியின் புரட்சிப்படையினர், ஆனால் அவர்கள் தமிழ் பிரதேசங்கள் மீதோ தமிழர்கள் மீதோ தாக்குதல் நடாத்தவில்லை இந்தச்சண்டையில் 5000க்கும் மேலான சிங்கள இளைஞர்கள் சிங்கள இராணுவத்தால் கொல்லப்பட்டும் 18000 பேர் கைது செய்யப்பட்டும் அடைக்கப்பட்டனர். ஆனால் உண்மையான இறப்பு 25000 ஐயும் தாண்டியதாக உத்தியோகபூர்வமற்ற செய்திகள் வெளிவந்தன. ..

இந்தப்புரட்சியில் வடகொரியாவின் பங்களிப்பு பிரபாகரனியம் 5 இல்..
தொடரும்…………………………………………………………………..