பிரபாகரனைவிட ரணில் மிகவும் ஆபத்தானவர் – ஞானசார தேரர்!

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை விடவும் ரணில் விக்கிரமசிங்க மிகவும் ஆபத்தானவர் என பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொட ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

கண்டியில் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், ரணில் விக்ரமசிங்க ஒரு வஞ்சகமான நரி என பிரபாகரன் கூறியிருந்தார் எனவும் அதன் அர்த்தம் தற்போது புரிகின்றது எனவும் அதனை விடவும் ரணில் மோசமானவர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

70, 71, 88 மற்றும் 89ம் ஆண்டு பாரிய மனித கூட்டுப் படுகொலைகளுடன் ரணிலுக்கு தொடர்பு உண்டு என குற்றம் சுமத்தியுள்ள அவர் இந்தியாவுடனான எட்கா உடன்படிக்கையே, ரணிலின் இலங்கை மக்கள் மீதான அடுத்த கூட்டுப் படுகொலைத்திட்டம் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இந்தியாவின் காலணியாக இலங்கையை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.