தலைவர் பிரபாகரனை அழிக்க சிங்களவர்களால் முடியுமா?
தலைவர் பிரபாகரனை அழித்துவிட்டதாக இலங்கை அரசு கூறிவந்தாலும், பிரபாகரனது எண்ணங்களையும், சிந்தனைகளையும் அழிக்க முடியாமல் திண்டாடுகிறது என்பது கசப்பான உண்மையாகும்! எங்கோ ஒரு குட்டித்தீவில், தனது மக்களுக்காக போராடிவந்த பிரபாகரனை – உலகறிய வைத்தது மட்டுமல்லாமல், அவரது எண்ணங்களையும் உலகம் முழுக்க பரப்பவைத்து, தனக்குத்தானே ஆப்புவைத்திருக்கிறது சிங்கள அரசு!
இன்று பிரான்சில், ஈபில் டவர் முன்பாக, மாபெரும் கண்டனப் பேரணி நடைபெறுகிறது! பிரபாகரனது உருவப்படங்களைத் தாங்கியவாறு பல்லாயிரக்கணக்கான மக்கள் அங்கே ஒன்று குவிய இருக்கின்றனர்! – பிரபாகரன் அழிந்துவிடவில்லை! இதேபோல லண்டன், கனடா, சுவிஸ், நோர்வே, ஜெர்மனி ,இந்தயா, தமிழ் நாடு எங்கும், இன்று பிரபாகனியம் கொழுந்து விட்டு எரியப்போகிறது (எரிகிறது)! – இதனைத் தடுத்து நிறுத்த சிங்கள ஆட்சியாளர்களால் முடியுமா? இப்போது சொல்லுங்கள் பிரபாகரனை அழிக்க சிங்களவர்களால் முடியுமா?
பிரபாகரனை அழிக்க யாராலும் முடியாது! – காரணம் அவர் ஒரு தனிமனிதர் அல்ல!
விடுதலையை வேண்டிநிற்கும் பலகோடி தமிழ் மக்களின் ஒட்டுமொத்த திரட்சியே பிரபாகரன்!!
தமிழர்களின் சேவகனாகி தமிழர்களின் தொண்டனாகி, தமிழர்களின் தளபதியாகி, தமிழர்களின் தலைவனாகி, தமிழர்களின் பலமாகி, தமிழர்களின் கவசமாகி, தமிழர்களின் மணிமகுடமாகி… அடக்கி ஒடுக்கப்பட்டு முடங்கிச் சருண்டு கிடக்கும் உலகத் தேசிய இனங்களுக்கு உன்னதமான ஒரு முன்னுதாரணமாகி… பூலோகத்தின் முள்ளந்தண்டைச் சிலிர்த்திடவைக்கும் ஒரு பெயராகிவிட்டது பிரபாகரன்!