Fotor09241432611

பிரபாகரன் இது வெறும் பெயரல்ல தமிழனின் தாரகமந்திரம்…

தலைவரின் இராணுவசிந்தனைக்கும்,போர்திறமைக்கும்,நுணுக்கமான தாக்குதல் திட்டங்களை வரைந்து அதை செயல்படுத்தும் விதத்திலும் தலைவருக்கு நிகர் யாருமில்லை.உதாரணமாக சொல்லப்போனால் ஆணையிறவு சண்டையை குறிப்பிடலாம்

ஆணையிறவுக்கான தாக்குதல் திட்டத்தை வரைந்து அதை அண்ணண் பால்ராஜ் அண்ணாவுக்கு விளக்கப்படுத்தி கொண்டிருக்கும்போது பால்ராஜ் அண்ணா இடைமறித்து இது வெட்டவெளி பகுதி மறைந்திருந்து தாக்குதல் நடத்த ஏற்ற இடமில்லை மேலும் இங்கால 20,000 ஆமி நிக்கிறாங்கள் இந்த இடத்தில் இந்த சண்டை எப்படி சாத்தியமாகும் என்று கேட்கின்றார்.

இந்த கேள்வியை கேட்பது ஏனைய தளபதிகளோ போராளிகளோ அல்ல சமர்களநாயகன் என்றும்,தன்னைவிஞ்சிய போராளி என்றும் தலைவரால் புகழப்பட்டவர்.பிரபாகரனை விட பெரிய போர்வீரன் என்று சிங்கள ராணுவத்தாலேயே புகழப்பட்ட பிரிகேடியர் பால்ராஜ் அண்ணாதான் இந்த கேள்வியை கேட்கின்றார்.

அதற்க்கு தலைவர் அவர்கள் 20,000 என்ன 40,000 ஆமி இந்த இடத்தில் நிண்டாலும் இதில்தான் சண்டை நடக்கும் நீ திட்டத்தை செயல்படுத்தி படை நடவடிக்கையை முன்னொடுத்துசெல் வெற்றி உன்னை தேடிவரும் என்று கூறுகின்றார்.

ஆணையிறவு படைத்தளம் முற்றுமுழுதாக புலிகளால் வெற்றிக்கொள்ளப்பட்டு வெற்றி விழாவில் பால்ராஜ் அண்ணண் பேசும்பொழுது

தலைவர் அவர்கள் இந்த தாக்குதல் திட்டத்தை எனக்கு கூறியபோது எனக்கு வியப்பாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது பிறகு தலைவர் அவர்கள் எனக்கு தாக்குதல் திட்டத்தை மிக தெளிவாக விளக்கி கூறும்போதுதான் எனக்கு புரிந்தது தெட்ட தெளிவான,மதிநுட்பமான,மிக மிக உன்னிப்பான தாக்குதல் திட்டத்தை வரைந்து கொடுத்திருக்கிறார் என்று எனக்கு நம்பிக்கை ஏற்பட்டது இந்த தாக்குதல் திட்டம் நிச்சயம் வெற்றிபெறும் என்று.திட்டத்தை வரைவதோடு மட்டுமல்லாமல் திட்டத்திற்கேற்றாப்போல் ஆளணிகளின் பயிற்ச்சி அந்தந்த இடத்திற்கேற்ப தளபதிகள் பொறுப்பார்கள் எங்கே நிற்கவேண்டும்மென்று அம்புகுறி இட்டாரோ அந்தந்த இடங்களில் அனைத்தும் சரியாக நிறைவேற்றப்பட்டது.நான் பலமுறை பார்திருக்கின்றேன் மிக முக்கியமான தாக்குதல் திட்டங்களில் தலைவர் அவர்கள் அவருடைய கையால் தாக்குதல் வரைபடத்தில் அம்புகுறியிடுவார் அவர் கையால் அம்புகுறி இட்டாரேயானால் அந்த சண்டையில் வெற்றி உறுதி என்று பேசினார்.

இவ்வாறான தலைவன் தமிழினத்திற்கு வாய்காவிடில் சிங்கள இராணும் மட்டுமில்லாது உலக நாடுகளையும் எதிர்த்து போரிட்டு 30 ஆண்டுகளுக்குமேல் அந்த சின்னஞ்சிறிய தீவில் தாக்குபிடித்திருக்க முடியுமா ? ? ?

பிரபாகரன் இது வெறும் பெயரல்ல தமிழனின் தாரகமந்திரம்…

-பிரபாசெழியன்