கொட்டிவருமாம் மீண்டும் கொட்டிவருமாம்
கெட்டித்தனமா நாங்கள் ஒன்றும் வெட்டக் கிழிக்கலைடா தட்டிக் கொடுக்க நாடுகள் வந்திச்சு முட்டி முழிக்கலைடா
பிரபாகரன் இருக்கிறார் என்று ஊருக்குள்ள பேச்சு அதை கேட்ட நாளில் இருந்து எங்க நிம்மதியே போச்சு
மப்பில நான் பாடயில்லை சத்தியமா உண்மை தப்பு சென்ச எங்களுககு தண்டனையும் உண்மை
(சிறிலங்கா இரானுவ வீரனின் ஆதங்கம்)
கொட்டிவருமாம் மீண்டும்
கொட்டி வருமாம் ….
சுட்டு விடுமாம் பெட்டிக்குள்ள
எம்ம பொடிய வைச்சு விடுமாம்
கெட்டித்தனமா நாங்கள் ஒன்றும்
வெட்டக் கிழிக்கலைடா
தட்டிக் கொடுக்க நாடுகள் வந்திச்சு
முட்டி முழிக்கலைடா
நாங்க செய்வது நாசம் என்று
எங்களுக்கும் தெரியும்
அது நாசம் என்று
ராஐபக்ச மாத்தையாவுக்கும் தெரியும்
பிரபாகரன் இருக்கிறார் என்று
ஊருக்குள்ள பேச்சு
அதை கேட்ட நாளில் இருந்து
எங்க நிம்மதியே போச்சு
பாக்கும் இடமெல்லாம்
கொட்டி வாறது போல இருக்கு
பயந்து பயந்து வாழுறேனே
வாழ்வே எனக்கு வெறுப்பு
நூலைக் கட்டி காவல் என்டு
அனுப்பி வைச்சார் பிக்கு
இங்க சென்றிக்கு காவல் வந்து
நிக்கும் நானும் ஒரு மக்கு
நச்சு குண்டு அடிச்சு தானே
சண்டையில நாம் வென்டோம்
பல நாடுகள கூட்டி வந்து
நாங்க தமிழர்களை கொண்டோம்
மப்பில நான் பாடயில்லை
சத்தியமா உண்மை
தப்பு சென்ச எங்களுககு
தண்டனையும் உண்மை
கொட்டிவருமாம் மீண்டும்
கொட்டிவருமாம்
சுட்டு விடுமாம் பெட்டிக்குள்ள
எம்ம பொடிய வைச்சு விடுமாம்