ltte

பிரபாகரன் காலம் தந்த கொடை அவன் பிறந்தான் பிறந்தது புலிகள் படை

ஒரு தலைவன் வரவுக்காய் காத்திருந்தோம் எங்கள் தலைவன் பிறந்தான் எங்கள் பகைவன் ஓடி பறந்தான். மண்ணை மறவா என் தலைவன் அவன் எங்கள் மண்ணில் வேறூன்றி நின்ற பனை அன்னை மண் பறிக்கும் மாற்றார் எதிரில் அவன் அனலை பொழிகின்ற ஏவுகணை பிரபாகரன் காலம் தந்த கொடை அவன் பிறந்தான் பிறந்தது புலிகள் படை

நெஞ்சை நெருப்பாகி நிமிர்ந்த தமிழீழ நிலத்தை உருவாக்கி காட்டியவன் பிஞ்சு மழலைக்கும் பகைவர் நஞ்சுடல் விளக்கும் தமிழ்வீரம் ஊட்டியவன் பிரபாகரன் காலம் தந்த கொடை அவன் பிறந்தான் பிறந்தது புலிகள் படை வாழத் துடித்த தமிழ் இனத்தின் வசை தீர்த்து வரலாறு படைத்த வழிகாட்டி ஈழத்தமிழ் மண்ணின் தலைவன் அவன் எங்கள் இனத்தை கரை சேர்த்த படகோட்டி

பிரபாகரன் காலம் தந்த கொடை அவன் பிறந்தான் பிறந்தது புலிகள் படை மான தமிழ் மாந்தர் மறவர் வரலாற்றில் வான்படை கண்ட முதல் தமிழன் தானை தலைவன் உலகெங்கும் வாழ்தமிழர் தாகம் தீர்க்க வந்த தனி தலைவன் பிரபாகரன் காலம் தந்த கொடை அவன் பிறந்தான் பிறந்தது புலிகள் படை,…

பிறந்தநாள் வாழ்த்துகக்கள்

தமிழனாய் நீங்கள் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தோம் என்று பெருமைக் கொள்கிறோம்

(www.eelamalar.com)