download (84)

பிரபாகரன், பொட்டு அம்மானுக்கு என்ன நடந்தது? உண்மையை கண்டறிய வேண்டும்!

கேபி வெளியில் கேபி வழங்கிய துப்பாக்கியை வைத்திருந்த இளைஞர்கள் இன்றும் உள்ளே அநுரகுமார திசாநாயக்க

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மானுக்கு என்ன நடந்தது? பிரபாகரன் கொல்லப்பட்டது எவ்வாறு? பொட்டு அம்மான் எங்கே போன்ற விடயங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு உண்மை கண்டறிய வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி வலியுறுத்தியுள்ளது.

பிரபாகரன், பொட்டு அம்மான், லசந்த விடயங்களின் பின்னணியில் கோத்தபாய உள்ளரா என்றும் கேள்வி எழுப்பியுள்ள ஜே.வி.பி சுயாதீன விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு உண்மைகள் கண்டறிய வேண்டும் என்றும் சும்மா காலத்தை கடத்த கூடாது என்றும் அக் கட்சி தெரிவித்துள்ளது. கடந்த காலத்தை இவ்வாறு இழுத்துச் சென்றால் சர்வதேச தரப்பினருக்கு பாரிய வாய்ப்பை ஏற்படுத்தும் என்றும் இறுதி யுத்தம் தொடர்பில் சரத்பொன்சேகா மாறுபட்ட கருத்துக்களை கடந்த சில காலமாக முன்வைத்து வருவதாகவும் ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரிவின் சில்வா தெரிவித்துள்ளார்.

இராணுவத்தினர் மக்களை மீட்டெடுத்தனர் என்பது மாத்திரமே தங்களுக்குத் தெரியும் என்று கூறிய ரிவின் சில்வா பிரபாகரன், பொட்டு அம்மான், லசந்த தொடர்பில் சரத்பொன்சேகா கூறும் கருத்துக்கள் வியப்பாகவும் சந்தேகத்திற்கிடமாகவும் உள்ளதாகவும் குறிப்பிட்டார். இதேவேளை இறுதி யுத்தத்தின் தவறான செயற்பாடுகள் தொடர்பிலும் விசாரணை அவசியமானது என்றும் ரிவின் சில்வா மேலும் கூறினார்.

 


 

விடுதலைப்புலிகளின் மிக முக்கிய உறுப்பினரான கேபி வெளியில் சுதந்திரமாக காணப்படுகின்றார். ஆனால் கேபியால் வழங்கப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்திருந்த இளைஞன் இன்றும் சிறையில் இதுதான் நல்லாட்சி என ஜேவிபியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கடந்த புதன் கிழமை கிளிநொச்சியில் இடம்பெற்ற கட்சியின் கூட்டம் ஒன்றில்  உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில் மக்களின் பிரச்சினைகளை தீர்க்காத அரசு நல்ல அரசாக இருக்க முடியாது, கடந்த 68 வருடங்களாக இந்த நாட்டில் மாறி மாறி ஆட்சிக்கு வருகின்ற  அரசுகளால் மக்கள் ஏமாற்றப்பட்டு வந்திருக்கின்றனர்.

மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை, குறிப்பாக வடக்கில் மக்களின் காணிப் பிரச்சினை,அரசியல் கைதிகளின் பிரச்சினை, காணமல் போனோர் பிரச்சினை, வாழ்க்கைப் பிரச்சினை, என அடிப்படைப் பிரச்சினைகள் இன்னும் தீh்க்கப்படவில்லை எனக்குறிப்பிட்ட அவர், கேபியிடம்  கப்பல்கள்  இருந்தன, பணம் இருந்தது எனவே கேபி  வெளியில் உள்ளார். ஆனால் கேபியால் வழங்கப்பட்ட   துப்பாக்கியை வைத்திருந்த இளைஞா்களிடம் இவை எதுவும் இல்லை எனவே அவர்கள் தொடர்ந்தும் உள்ளே இருக்கின்றார்கள் இதுதான் நிலைமை  எனவே மக்கள் இதில் விழிப்பாக இருக்க வேண்டும். எனவும் அவர் கேட்க்கொண்டார்.

(www.eelamalar.com)