unnamed-2

பிரித்தானியப் பாராளுமன்றத்தில் “இலங்கைத் தமிழர்களின் உண்மை நிலை”

“இலங்கைத் தமிழர்களின் உண்மை நிலை” எனும் தலைப்பில் பிரித்தானியப் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் 11-04-2016 திங்கள் அன்று மாலை பிரித்தானிய தொழில்கட்சிக்கும் பிரித்தானிய தமிழர்களுக்குமிடையிலான ஒன்றுகூடல் ஒன்று Boothroyd Room, Portcullis House Parliament எனும் இடத்தில் நடைபெற்றது.

unnamed-3
இவ் ஒன்றுகூடலில் பிரதம விருந்தினராக தொழில்கட்சி தலைவர் மதிப்பிற்குரிய எதிர்க்கட்சித் தலைவர் ஜெறமி கோபன் (The Leader of the Labour Party Rt Hon Jeremy Corbyn MP), கௌரவ விருந்தினராக நிழல் வெளிவிவகார அமைச்சர் மதிப்பிற்குரிய கிலாரி பெண் (The Shadow Foreign Secretary Rt Hon Hilary Benn Mp) ஆகியோரும் பிரான்ஸிஸ் ஹறிஷன் (Former BBC Presenter Francis Harrison), ஷோனியா ஸ்கீட்ஸ் (Derector Of Freedom Form Forture Sonya) கரும் மக்றே (Director of Killing Fields Cullum Mcrae), DR சதா நடராஜா (SOAS University Of London Lecture Dr Sutha Nadarajah) ஆகியோரும் கலந்து கொண்டு உரையாற்றினர்.

unnamed-7

அத்தோடு 20க்கும் மேற்பட்ட தொழில்கட்சி பாரளுமன்ற உறுப்பினர்கள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள் மற்றும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தில் பணியாற்றும் செயற்பாட்டாளர்களும் இவ் ஒன்றுகூடலில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

unnamed

இன் நிகழ்வில் அங்கு வருகை தந்த Freedom From Torture director of policy & advocacy Miss SONYS SCEATS, international truth & justice project & research manager Miss FRANCES HARRISON, Chanel 4 journalist film maker and writer Mr CALLUM MACRAE இவர்களுக்கு ஈழத் தமிழர்களான வேதநாயகம் சஞ்ஜீவ் தனுஷன் மற்றும் விநாயகமூர்த்தி கவிதாசன் ஆகியோரால் சிங்கள அரசினால் ஈழத்தமிழருக்கு நடைபெற்ற, நடந்து கொண்டிருக்கின்ற இன அழிப்பின் ஆவனங்களும் சமர்ப்பிக்கப்பட்டது.

unnamed-4unnamed-6