பிரித்தானியாவிலும் தனது 61வது பிறந்த நாளைக் கொண்டாடிய தலைவர்
பிரித்தானியாவில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் நடாத்தப்பட்ட எமது தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 61வது பிறந்த நாள் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழா பிரித்தானிய வாழ் தமிழ் இளைஞர் யுவதிகள் மற்றும் பொது மக்கள் படைசூழ வான வேடிக்கைகளின் மத்தியில் தலைவரின் 61வது அகவை கேக் வெட்டப்பட்டுக் கொண்டாடப்பட்டது இவ் விழாவில் நூற்றுக் கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
மற்றும் இன்றைய நாளில் அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி கோரிக்கை கடிதம் எழுதி வைத்துவிட்டு தன்னுயிரை மாய்த்துக் கொண்ட ஈழப் பற்றாளன் மாணவப் போராளி யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மாணவன் ராஜேஸ்வரன் செந்தூரன் அவர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.