புறப்படு தமிழா புறப்படு
புலியின் பாச்சல் தொடங்கட்டும்
புறப்படு தமிழா புறப்படு
புலியின் பாச்சல் தொடங்கட்டும்
புயலும் பூகம்பம் ஆகட்டும்
அடிமை விலங்குகள் உடையட்டும்
ஆயுத வாழ்க்கை முடியட்டும்
செந்தமிழா நீயும் உறங்காதே
எதிரியை விட்டு வைக்காதே
எங்கள் நிலம் எங்களுக்கு வேண்டும்
எட்டப்பர் கூட்டம் அழியட்டும்
எம் தமிழ் ஈழம் விடிகின்ற பொழுது
புன்னகை தவழும் பூக்களும் மலரும்
கிழக்கில் சூரியன் உதயம்
திசைகள் எட்டும் விடியும்
காற்றும் புயலாய் மாறும்
கண்ணீர் கோடுகள் மறையட்டும்
மண்ணில் பெரும் பகை அழியட்டும்
மனங்கள் எல்லாம் மாறட்டும்
தமிழர் படை பகையை வெல்லும்
எம்மை தடுத்த உலகம் நிமிர்ந்து பார்க்கும்
இருளின் திசைகள் வெளிக்கும்
இனிமை காலம் மலரும்
புத்தனின் போதிமரம் சரியும்
புயல் காற்றாய் தமிழர் படை
எதிரி மீது சுழன்றடிக்கும்
தலைவனின் ஆணைக்காக காத்திருக்கின்றோம்
ஆயுதம் கொண்டு பகையழிக்க
போர்க்களத்தில் விழித்திருக்கின்றோம்
எம் அன்னை பூமியில்
கண்ணீரும் செந்நீருமாய்
வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்
வரிப்புலியாய் மாறுவோம்
வரலாறு எம்மை ஏற்கட்டும்
-சிவா TE