12189895_157819861238671_8965542317629929908_n

புலிகளின் விமானம் வெசாக் பார்க்க கொழும்பு வந்தது

போர் நடைபெற்ற காலப்பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சி அரசு ஆட்சியில் இருந்திருந்தால் நிலைமை எப்படியிருந்திருக்கும் என விளக்கமளித்துள்ளார் நாமல் ராஜபக்ச எம்.பி. சாவகச்சேரியில் மீட்கப்பட்ட வெடிபொருட்கள் பழைய பொருட்கள் எனக்கூறி விடயத்தை தட்டிக்கழிக்கின்றனர். போர் நடைபெற்ற காலத்தில் இந்த அரசும், தற்போதிருக்கும் பாதுகாப்புச் செயலாளரும் இருந்திருந்தால், புலிகளின் விமானத்தை விளையாட்டு விமானம் என்றும், கொழும்புக்கு தாக்குதலுக்கு வந்த விமானம் வெசாக் பார்க்க வந்தது என்றும் கூறியிருப்பவர். தேசிய பாதுகாப்பு தொடர்பில் அரசுக்கு அக்கறையில்லை. அதைப்பற்றி பேசினால் அதற்கு எரிச்சல் ஏற்படுகிறது” எனவும் நாமல் எம்.பி. சுட்டிக்காட்டியுள்ளார்.

(www.eelamalar.com)