ஸ்ரீலங்கா அரசு விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஐநாவில் முறைப்பாடு??

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஐ.நா மனித உரிமைப் பேரவையில் முறைப்பாடு செய்யும் நோக்கில் ஸ்ரீலங்காவின் முன்னாள் கடற்படை உயர் அதிகாரி ரியர் அட்மிரல் சரத் வீரசேகர ஜெனீவாவிற்கு விஜயம் செய்ய உள்ளார்.
விடுதலைப் புலிகள் மேற்கொண்ட 340 போர்க் குற்றச் செயல்கள் தொடர்பிலான தகவல்கள், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அமெரிக்கப் பிரதிநிதி நிக்கி ஹெலியிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
இந்த விபரங்கள் மனித உரிமைப் பேரவையிடமும் ஒப்படைக்கப்பட உள்ளது. சரத் வீரசேகரவுடன் இலங்கையின் இரண்டு சிரேஸ்ட சட்டத்தரணிகள் இந்த விஜயத்தில் இணைந்து கொள்ள உள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் ஜெனீவாவில் முறைப்பாடு செய்யும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
இதற்கு முன்னதாக எந்தவொரு அரசாங்கமும் புலிகளுக்கு எதிரான போர்க் குற்றச் செயல் ஆதாரங்களைளோ தகவல்களையோ வெளியிட்டதில்லை.
எனினும், இது தொடர்பாக தெரிவித்துள்ள சிங்களப்பத்திரிகை  புலி ஆதரவு புலம்பெயர் தரப்புக்கள் அரச படையினர் போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக போலித் தகவல்களை மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பித்துள்ளனர் எனவும் அரசாங்கம் செய்ய வேண்டிய பணிகளை முன்னாள் படையதிகாரிகள் நாட்டுக்காக செய்ய உள்ளனர் என  சிங்களப் பத்திரிகை யொன்றில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.