விடுதலைப்புலிகளின் படகுகளை அழிக்க உதவிய அமெரிக்கா! முன்னாள் தளபதி விளக்கம்……!

இலங்கையின் கடற்படையினர் விடுதலைப்புலிகளின் படகுகளை அழிப்பதற்கு அமெரிக்கா எவ்வாறு உதவியளித்தது என்பதை இலங்கையின் முன்னாள் கடற்படை தளபதி விபரித்துள்ளார்.

கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல ஜெயநாத் கொலம்பகே அண்மையில் வெளியிட்ட நூல் ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மிதக்கும் ஆயுதக்களஞ்சியம் மற்றும் செய்மதி வசதிகள் என்பவை இதில் அடங்கும் என்று கொலம்பகே குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக மிதக்கும் ஆயுத களஞ்சியம் விடுதலைப்புலிகளின் படகுகளை அழிப்பதில் முக்கிய பங்கை வகித்தன.

இதன்காரணமாகவே இலங்கையின் இராணுவம் தரையிலும் வான்படை ஆகாயத்திலும் பயமின்றி விடுதலைப்புலிகளின் இலக்குகளை தாக்கின என்றும் கொலம்பகே சுட்டிக்காட்டியுள்ளார்

ஆயுதக்களஞ்சியங்களை பொறுத்தவரை அவை, விடுதலைப்புலிகளின் ஆயுத விநியோகங்களை தடுத்தன. இலங்கை இராணுவம் ஒரு எறிகனை தாக்குதலை நடத்தினால் விடுதலைப்புலிகள் 20 எறிகனை தாக்குதல்களை நடத்தினர்.

இதன்காரணமாகவே படையினரின் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்தது இந்த அதிகரிப்பு 50வீதமாகும். இதனையடுத்தே அமெரிக்காவின் உதவிக்கோரப்பட்டது.

இதன்போது சிவிலியன் கப்பல்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படாது என்ற உறுதிமொழியை அமரிக்கா, இலங்கையிடம் இருந்து பெற்றுக்கொண்டது என்றும் கொலம்பகே தமது நூலில் குறிப்பிட்டுள்ளார்.