புலிகள் தமக்கான தற்காலிக தலைவரை அறிமுகம் செய்யும் காலம் நெருங்கி வருகின்றது…!

புலிகளின் ஆயுத மௌனிப்பை சிலர் புலிகளின் இறுதி முடிவாக நினைப்பது நகைப்பிற்கிடமானது…!

“போராட்ட வடிவங்கள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் என்றுமே மாறவே மாறாது”சொன்னவர் எமது தேசியத் தலைவர் “மேதகு வே.பிரபாகரன் அவர்கள்” அவர் அன்று சொன்ன சொல்லை இன்று சிலர் மறந்திருக்கலாம்’ ஆனால் அவரால் உருவாக்கப்பட்ட போராளிகள் ஒருபோதும் அவரின் இக்கூற்றை என்றுமே மறக்க மாட்டார்கள்.
இறுதியாக ஒரு புலி இருக்கும்வரை நாம் தொடர்ந்து போராடுவோம் என்று எமது தேசியத் தலைவர் அவர்கள் அடிக்கடி தான் சொல்லிவந்த வார்த்தைக்கு சில விசமிகள் 17-05-2009ல் எமது தலைவர் அவர்களின் உத்தரவிற்கமைவாக மௌனிக்கப்பட்ட எமது ஆயுதப் போராட்டத்தை இறுதிப் புலியின் முடிவாக அர்த்தங்கொள்வது வேடிக்கையானது. உண்மையில் எமது தலைவர் சொன்ன இறுதிப் புலி என்பது அவர் தன்னையோ அன்றி தனது தளபதிகளில் எவரையுமோ அடையாளப்படுத்தி அந்த இறுதிப் புலி இன்னார்தான் என்று எவரிடமும் சொல்லவில்லை’ தலைவரின் கூற்றுப்படி தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் ஒருவர் தான் போராளியாக இருக்கும்வரையும், அவர் தன்னால் போராட்டத்தை நடத்திச்செல்லும் தற்துணிவு உள்ளவரைக்கும், அவரின் இறுதிமூச்சு அடங்கும்வரைக்கும் அவர் யாராக இருந்தாலும் அவர் தமிழீழ விடுதலைப் புலியாக இருக்கும்வரை தொடர்ந்து போராடுவார் என்பதையே எமது தேசியத் தலைவர் அவர்கள் குறிப்பிட்டு கூறியுள்ளார்.

எமது தலைவரின் இக் கூற்று மிகவும் வலிமையானது, அவரின் “இறுதிப் புலி” என்பதற்கான உண்மையான அர்த்தங்கள் நிறைய உள்ளன. அவற்றில் முதன்மையாக தான்கூட ஒருவேளை சில சந்தர்ப்பங்களில் மரணிக்கலாம்? என்பதை அவர் திடமாக எதிர்பார்த்தார்’ அதனால் அவர் தன்னுடன் இப்போராட்டம் ஒருபோதும் முடிந்துவிடக்கூடாது என்பதற்காகவே பிரதானமாக எமது தேசியத் தலைவர் அவர்கள் தான் மரணித்தாலும் தன்னால் உருவாக்கப்பட்ட போராளிகளில் எவன் இறுதிவரை தனது விடுதலைக்கான பயணத்தை தொடர்கின்றானோ அவனின் மரணம்தான் இறிதிப் புலியின் மரணம் என்பதையே எமது தேசியத் தலைவர் அவர்கள் தான் கூறிவந்த இறுதிப் புலிக்கான உண்மையான அர்த்தமாகும்.
ஆகவே எமது தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்ட எமது தமிழீழ மீட்புக்கான ஆயுதப் போராட்டம் மட்டும் தாயகத்தில் மௌனிக்கப்பட்டதேயன்றி இறுதிப் புலியின் மரணமாக ஒருபோதும் எமது தேசியத் தலைமையின் தலைமையிலான “வடிவம் மாறிய” தமிழீழ விடுதலைப் போராட்டத்தை எவராலும் தன்னிச்சையாக முடித்துவைக்க முடியாதென்பதை மிகவும் காட்டமாக இங்கே பதிவுசெய்ய விரும்புகின்றேன்.
முள்ளிவாய்க்காலுடன் புலிகள் அழிந்துவிட்டார்கள் என்றோ, முள்ளிவாய்க்காலில்தான் தலைவர் சொன்ன இறுதிப் புலி மரணித்துவிட்டானென்றோ, தலைவரின் உண்மையான கூற்றை யாரும் மறுதலித்து தமது அரசியல் பிழைப்பிற்காக எஞ்சிய போராளிகளை களங்கம் செய்தால் தலைமறைவாக இருக்கும் தலைவரின் உத்தரவுக்கமைவாக சில தளபதிகள் தங்களை இந்த உலக அரங்கில் பகிரங்கமாக அறிமுகம்செய்து தலைவரின் மீழ்வருகை சாத்தியமாகும்வரைக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு பதில் தலைமைத்துவத்தை பகிரங்கமாக அறிமுகம்செய்யவேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்பதுமட்டும் உறுதி.
மேலும் முள்ளிவாய்க்காலில் தலைவர் ஒருவேளை இறுதிப் புலி இருக்கும்வரை நாம் தொடர்ந்து போராடுவோம் என்ற முடிவை எடுத்து அங்கிருந்த போராளிகளை ஒருங்கிணைத்து மக்களை முள்ளிவாய்க்காலிலிருந்து வெளியேறி இராணுவ கட்டுப்பாட்டுக்குள் செல்லவிட்டு விட்டு தொடர்ந்து போராடியிருந்திருந்தால் நிச்சயமாக அதில் ஏற்பட்டிருக்கக்கூடிய போர்முடிவை நாம் ஆயுத மௌனிப்பென்றோ, சரணடைதலென்றோ, தலைவரின் வெளியேற்றமென்றோ, தலைவர் இன்னும் இருக்கிறாரென்றோ யாரும் எதிர்பார்க்கவேண்டிய சந்தர்ப்பமே எழுந்திருக்காதென்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ஆகவே தலைவரால் முள்ளிவாய்க்காலில் மாற்றப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்ட வடிவத்தை இறுதிப் புலியின் மரணம் நிகழாதவிடத்தில் யாரும் தப்பாக எடைபோட்டு மாற்றப்பட்ட வடிவத்தை எல்லாமே முடிந்துவிட்டதாக கருதி தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு மூடுவிழா நடத்த முற்பட்டால் அதற்கான கடுமையான சூழலை சொல்பவர்கள் யாராகிலும் சந்திக்கநேரிடும் என்பதையும் மறந்துவிடாதீர்கள்.
எனவே முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த போர் மௌனிப்பின் பின் எமது தேசியத் தலைவர் உள்ளடங்கலாக நூற்றுக்கணக்கான தளபதிகளும், ஆயிரக்கணக்கான எமது போராளிகளும் உயிருடன் உலகளாவிய அளவில் இன்னும் இருந்துவருகையில், தமிழீழ விடுதலைப் புலிகள் அழிந்துவிட்டார்கள், இனி அவர்களை யாரும் கணக்கெடுக்கவேண்டியதில்லை என்ற நிலையினை தற்போதுவரை நம் எதிரியாகிய சிங்கள அரசுகூட கடுகளவும் இதை நம்பவில்லை’ இதன் காரணமாகவே தற்போதுவரை ஆயுதமேந்திய இலட்சக்கணக்கான சிங்களப் படைகள் இலங்கை பூராகவும் தொடர்ந்தும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளார்கள்.

போரினில் அகப்பட்ட ஆயிரக்கணக்கான போராளிகளை இலங்கை அரசு கைதுசெய்து அவர்களுக்கு புனர்வாழ்வெனும் மனிதநேய பெயர் ஊடாக ஒவ்வொரு போராளியையும் குத்தி கிழித்து காயப்படுத்தி அவர்களுக்கு கோபத்தை இன்னும் தூண்டிவிட்டுள்ளார்களேயன்றி எமது போராளிகள் எவரும் உண்மையான மனிதாபிமான புனர்வாழ்வினை சிங்கள அரசிடமிருந்து தாம் பெறவில்லை என்பதனையும், இந்த உண்மை நிலையினை அதை செய்த சிங்கள அரக்கர்படைக்கே இது நன்கு தெரியும் என்பதனையும் இங்கே கூறிவைக்க விரும்புகின்றேன்.
ஆகவே புனர்வாழ்வு கொடுக்கப்பட்டதாக கூறப்படும் எமது போராளிகள் அனைவரும் சந்தர்ப்பம் தமக்கு சாதகமாக வரும் வராதவரைதான் தாம் புனர்வாழ்வுதான் பெற்றோமென சொல்வார்களே அன்றி சந்தர்ப்பம் அவர்களுக்கு சாதகமாக அமைந்தால் உண்மையான புனர்வாழ்வு என்ன என்பதை அவர்கள் நிரூபிக்க என்றுமே தயங்கமாட்டார்கள் என்பதே உண்மை.

எனவே புயலுக்கு முந்திய அமைதிக் காலமாகத்தான் தற்போதைய காலத்தை நாம் கணிக்கலாமே அன்றி இனி ஒருபோதும் எமது விடுதலைக்கான புயல் தமிழர் தாயகத்தில் அடிக்கவே அடிக்காதென்பது மிகவும் தவறான கணிப்பீடாகும். உலக ஒழுங்கில் புலிகள் தமது அரசியல் போர் வியூகத்தை அவதானிக்கும் காலமே இக்காலம்’ கால ஓட்டத்தில் உலகம் தானே முன்வந்து எம்மை தூக்கி நீ போய் அடி நானே தாறேன் எல்லாம் என்ற நிலை உருவாகும் என்பதற்கான எதிர்பார்ப்பே 2009ற்கு பின்னரான புலிகளின் அமைதி நிலைக்கான உண்மைக் காரணம் என்பதை அனைவரும் விளங்கிச் செயற்படுங்கள்.

நன்றி
உங்கள்…….
கழுகுவிழியன்.