உலக போரியல் வரலாற்றில் ஓரே நேரத்தில் ஓரே இடத்தில் 21 உயிர்கொடை போராளிகள் உயிர்பூவை கிள்ளி எடுத்து விடுதலைக்கு விலை கொடுத்த அரிதிலும் அரிதான நிகழ்வு….
வான்புலிகளும் இணைந்து தொடுத்த
தாக்குதல் நிகழ்வு
தமிழீழ தேசியத்தலைவரின் நேரடி வழிநடாத்தலின் கீழ் நடைபெற்ற படை நடவடிக்கை…..
காலம் கண்டிராத புயலின் அதிர்வு
ஞாலம் பார்த்திராத வரலாற்று பதிவு
அனுராதபுரம் வான்படை தளமுடைத்த
விடுதலைப்புலிகளின் எல்லாளன்
பாய்ச்சல் நிகழ்வு,இளங்கோ
தலைமையில் 21 கரும்புலிகள்
எதிரியை சுட்டெரித்த நெருப்பு
விழிகள்,தமிழீழ தேசியத்தலைவர்
வழிநடாத்திய போர்க்களம், சிதறியது
சிங்கள வான்படைத்தளம்,
தலைநிமிர்ந்தது தமிழர் தாய் நிலம்.
கரும்புலி மகளிரும் இணைந்து ஆடிய
நெருப்பு குளிப்பு,தோற்றது சிங்கள
இனவெறியன் சுழிப்பு, உலக
போரியல்
வரலாற்றில் 21 உயிர்கொடை
போராளிகள் கலந்துகொண்ட முதல்
போர் நிகழ்ச்சி, தமிழீழ விடுதலைப்
பேரெழுச்சி,புலிகள் படைத்த
எல்லாளன் புரட்சி,ஒன்றா இரண்டா,
ஒன்றா இரண்டா 28 சிங்களபடை
உன்னுர்திகள் உடைந்து சிதறின
சிதறின சிங்கள சிறீலாங்காவின்
அத்தனை படத்தளங்ளும் கதறின
கதறின,எங்கள் மாவீரர்களின் ஆடை
களைந்து கலங்க
படுத்தயெண்ணினான் சிங்கள
வெறியன் அடேய் புலியின் மானம்
உடையிலல்ல படையில் உடையிலல்ல
படையில்,அவன் வீரவாழ்வில்
அவனுன் வான்படை தளத்தை
உடைதெறிந்த வராலாற்றில்…
புலிகளே புலிகளே அனுராதபுர
வான்படைத்தளத்தின் ஆணிவேர்
புடுங்கியவர்களே புயலுக்கு
வகுப்பெடுத்து புரட்சி படைத்தவர்களே
தலைவனுக்கு பெருமைதேடி
தந்தவர்களே தங்கங்களே ஈழத்தாய்
விடுதலைக்கு எறுவாகி
போனவர்களே மாவீரர்களே
உங்கள் வீர உணர்வில் கலந்து
விடுதலை உணர்வில் தோய்ந்து
உங்கள் இலட்சியத்தை நாங்கள்
வென்றெடுக்க உறுதியேற்கின்றோம்.
-காசிஆனந்தன்
“தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்’