தாயக விடுதலைக்காய் இறுதிவரை களமாடி,
நெருப்பாகிப்போனவரின் வழிகளிலே 
புலிப்படை மீண்டெழும் என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்து பயணிப்போம்.

ஆனந்தபுரச்சமர் வெற்றியளித்திருந்தால் முள்ளிவாய்க்காலில் கைதுகள்,சரணடைவுகள்,
இடம்பெற்றிருக்காது.ஆயுதப்போராட்டம் அதன் இலக்கை அடைந்திருக்கும் அல்லது ஆயுதப்போராட்டம் இன்னும் உயிர்ப்புடன் இருந்திருக்கும்.

அதனை நன்குணர்ந்த இந்திய,மேற்கத்தைய ஏகாதிபத்தியங்கள் ஆனந்தபுரச்சமரில் விடுதலைப்புலிகளை எப்பாடுபட்டேனும் அழித்துவிடவேண்டுமென்பதில் உறுதியாயிருந்தது.
விடுதலைப்புலிகளின் படையணிகளின் உக்கிரதாக்குதலை எதிர்கொள்ளமுடியாத வேளையில் சிறிலங்காவின்
சிங்கள இராணுவத்தரப்பு தங்களால் தாக்குப்பிடிக்க முடியாதென உலகத்திடம் மண்டியிட்டது.
அந்த உலகமே இராசயனக்குண்டுகளை ஏவி வரலாற்றுச்சமர் ஒன்றை வெற்றிகரமாக நடத்திக்கொண்டிருந்த 
எமது வீரஞ்செறிந்த போர்ப்புலிகளை நயவஞ்சகமாக போரியல் தர்மத்தை மீறி அழிப்பதற்கு ஆயுதங்களையும் கொடுத்துதவியது.

நச்சு இராசயனக்குண்டுத் தாக்குதல்களை எதிர்கொண்டு ஆனந்தபுரச்சமரில் வீரவரலாறு படைத்தனர் சமர்க்கள நாயகர்கள்.
வல்லரசு நாடுகளின் படைக்கல சக்தியின் உதவியுடன் போர்செய்யமுடியாத சிறிலங்காவின் சிங்களக்கூலிப்படை நச்சு இராசயனக் குண்டுத் தாக்குதலை மேற்கொண்டு விடுதலைப்புலிகளை அழிக்கமுடிந்தது. இதனையே சிறிலங்கா பேரினவாதம் பெரும் போரியல் வெற்றியாகவும்,சாதனையாகவும் அறிவித்து மார்தட்டிக்கொண்டது.

ஆனால் நச்சு இராசயனக்குண்டுகளையும் தங்கள் மார்பிலேந்தி மலைகளாக நின்ற மூத்தபல மூர்க்கமான புலிகளும் ஆனந்தபுரமண்ணிலே சாய்ந்துகொண்டது தமிழரின் வீர வரலாறாகிப்போனது.

தர்மத்தின் அறநெறியில் நின்று போராடிய
விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகளாக சித்தரித்துக்கொண்ட உலகநாடுகள் தங்களின் பயங்கரவாதத்தை மூடிமறைத்துக்கொண்டன.

மூன்று தசாப்தகால ஆயுதப்போராட்டத்தின் இறுதிப்பெரும் களமாகவும்,சமராகவும்
விரிந்த ஆனந்தபுரச்சமர் முற்றுப்பெறாமலே முடிவிற்கு வந்ததால் அதுவே ஆயுதப்போரின் அமைதியை வலிந்து திணிப்பதற்கு காரணமாயும் அமைந்தது.

சிங்களப் பயங்கரவாதத்தோடும்,உலகப் பயங்கரவாதத்தோடும் போராடி 
மீண்டுமொரு ஆனந்தபுரச் சமர் முற்றுப்பெறும் வேளையிலேதான் தமிழினம் தன்னை தலைநிமிர்த்திக்கொள்ளும் நிலை உருவாகும். அதுவரை தமிழர்கள் உலகெங்கும் அடிமை அகதிகளே.
தாயக விடுதலைக்காய் இறுதிவரை களமாடி,
நெருப்பாகிப்போனவரின் வழிகளிலே 
புலிப்படை மீண்டெழும் என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்து பயணிப்போம்.

போராளிகள்.