பெற்ற தாயின் கண்ணீரையும் விட 
தலைவனை உயிராய் மதித்த புலி வீரர்களின் தியாகம் 

ஆரம்பத்தில் கிட்டு அண்ணாவுடன் அவரது தாயை பார்க்க போகும் போதெல்லாம் உணவு பரிமாறி விட்டு நாங்கள் புறப்படும் போது அந்த தாயின் கண்களின் ஓரத்தில் கண்ணீர் துளிகள் எட்டிப்பார்க்கும் 
இனி அம்மா நீ இப்படி நடந்தால் நான் உன்னை பார்க்க வர மாடடேன்
கிட்டு அண்ணா தாயுடன் உரையாடியது

உன்னை இயக்கத்தில் இருந்து விலத்தி விடடார்கள் எங்கயாவது வெளிநாட்டுக்கு போவண்டா
அண்ணையும் கிட்டண்ணாவும் என்னை நம்பித்தான் வெளியில் எடுத்தவர்கள் நான் உனது சொல்லை கேட்டு சென்றால் நான் அவர்கள் என்மீது வைத்த நம்பிக்கைக்கு செய்யும் துரோகம்
மேஜர் .அருணா ஹிந்திய இராணுவ வீரனிடம் துப்பாக்கியை பறித்து அவர்களை கொன்று வீர மரணம்.

கிட்டண்ணாவிடம் திலீபனின் தாயார் ஒருமுறை தம்பியை பார்த்து ரொம்ப நாட்கள் ஆகுது ஒருக்கா வீட்டுக்கு வர சொல்லுங்கோ என்கிறார் கிட்டண்ணையின் உத்தரவின் பேரில் வீட்டுக்கு சென்ற திலீபன் அம்மா எனக்கு நேரம் இருந்தால் கண்டிப்பாக வருவேன்
நீ கிட்டண்ணாவை தொந்தரவு செய்ய வேண்டாம் நான் கிட்ட இருப்பதால் தான் என்றால் இனி நான் மட்டக்களப்புக்கு அல்லது திருகோணமலைக்கோ போய் விடுவேன் வெளி மாவட்ட போராளிகள் எத்தனை பேர் மாத கணக்காக பிரிந்து இருக்கிறார்கள்
அவர்களையும் உன் பிள்ளைகள் போல நினைத்து பார்

கனடாவில் இருந்து சராவின் சித்தப்பா ஊருக்கு வந்து ஒரு சூட்கேஸ் நிறைய பணத்துடன் தலைவரை பார்க்க வந்த போது
மச்சான் சித்தப்பரிடம் சொல்லு சூட்கேஸை தமிழேந்தியிடம் கொடுத்து விட்டு 2.30 pm யாழ் தேவியை பிடித்து வந்த வழியை பார்த்து போக சொல்லு .ஆனையிறவில் பின்னர் வீர மரணம் அடைந்தார்

படித்த வசதியான குடும்பம் உயரமான தோற்றம் நாம் அண்ணார்ந்து விமானத்தை பார்த்த போது விமானத்தில் போகும் வசதி படைத்த குடும்பத்தில் பிறந்து இயக்கத்துக்கு வந்தவன் ஆரம்பத்தில் அரசியல் நாம் கதைத்தால் விலகி நிற்பான் ஒருமுறை சாதி குறைந்த பெடியலுடன் உன்மகன் சுற்றுகிறான் என்று சொன்ன உறவினர்களிடம் தாய்க்கு முன்னாலேயே எனது கையையும் அவர்களின் கையையும் கீறுகிறேன் என்ன வித்தியாசம் என்று சொல்லுங்கள் என்று கூறியவன் எல்லா விளையாட்டுகளிலும் முதன்மையானவன் சமாதான காலப்பகுதியில் பிரித்தானியாவில் இருந்து தாய் சென்று தன்னுடன் வரச்சொன்ன போது கருணைவைப்போல துரோகம் தலைவருக்கு நான் செய்ய மாடடேன் என்று சொன்ன எங்கள் சசி மாஸ்டர் (மித்திரன் )
இப்படி எத்தனையோ போராளிகளால் இரத்தமும் உயிரும் கொடுத்து வளர்ந்த இயக்கம் ஒருபோதும் அழியாது
யார் வேண்டுமானாலும் புலி வேஷம் போடலாம்
ஆனால் புலியின் காட்டுக்குள் சிங்கங்களும் நரிகளும் வாழ முடியாது காலம் பதில் சொல்லும்.

-வித்தகன்