பூக்கள் கூட உன்னைப்
போல் புன்னகையால்
முகம் மலர்ந்ததில்லை
சமாதான புறா கூட
உன்னைப்போல் சமாதானம்
பேச உலகம் சுற்றியதில்லை
உலக பேச்சுவார்த்தை
மேசைகளுக்கே தமிழ்
கற்றுக்கொடுத்த சமாதான
புறா நீயல்லவா
உன்னோடு ஆயுதம்
குழந்தையாய்
உறங்கியபோதும்
அழகு தமிழ் சொல்லெடுத்து
செல்வன் நீ அற்புதமாய்
போரடினாயே
வழிகாட்டி பலகைகூட
காட்டிவிட்டு இருந்துவிடும்
தளபதியாய் நீ இருந்தபோதும்
கூடவே கைபிடித்து
கூட்டி வந்து விட்ட
தாயல்லவா நீ
தேசத்தின் குரலோடு
ஈழத்தின் விடிவிற்காய்
அகிலம் சுற்றி வந்த
ஈழத்தின் குயிலே
கூட்டைவிட்டு நீ
வாரக்கணக்கில் அல்லவா
உலகம் சுற்றி வந்தாய்
ஏன் ஏன்
எங்கள் கூட்டில்
இருந்தபடியே நீ
நிரந்தரமாய் உன்
உயிரை பறக்கவிட்டாய்
உன் கல்லறையில் நீ
தூங்க முன் நீ கண்ட
தமிழிழக்கனவு நிறைவேறும்
அதுவரை நீ தூங்காமல் இரு