ஒவ்வொருமுறையும் இலக்கை நோக்கி கரும்புலிகளை கையசைத்து வழியனுப்பும் போது கண்ணிர்மல்க நீங்கள் முன்னால் செல்லுங்கள் நான் பின்னால் வருகின்றேன் என்று கூறுவானே அவனன்றி யார் உனக்கு தலைவன்…
நினைவிலிருந்து அகலாத நினைவு….
வான் புலிகளின் விமான பயிற்ச்சி ஒன்றுக்கு தலைவர் அவர்களுக்கும் பொட்டம்மானுக்கும் அழைப்பு விடுக்கப்படுகின்றது அழைப்பினையேற்று அண்ணணும் பொட்டுடண்ணையும் ஏனைய சில தளபதிகளும் செல்கின்றனர்
ஓடுதளத்தில் விமானம் வந்து நிற்கின்றது விமானத்தில் ஏற தலைவர் செல்கின்றார் அவரை தொடர்ந்து பொட்டம்மானும் செல்கின்றார் தலைவர் பொட்டம்மானை இடைநிறுத்தி
“பொட்டு நீ நில்லு நான் போறேன் நான் போயிட்டா நீ பார்த்துக்கோ”
என்று கூறுகின்றார் தலைவர் கூறியதன் அர்த்தம் பொட்டம்மானுக்கு சற்று தாமதமாகத்தான் விளங்கியது அதாவது இந்த பயிற்ச்சியின் போதுகூட என்னுடைய உயிருக்கு ஏதும் நிகழ்ந்துவிட்டால் விடுதலை போராட்டத்தை நீ முன்னெடுத்து செல் என்பதுதான் தலைவர் கூறியதன் அர்த்தம்.இலட்சியத்திற்காக ஓவ்வொரு நொடியும் மரணத்தை முத்தமிட மிகக்தெளிவான சிந்தனையுடன் இருந்தவர் எம் தலைவர்.
யார் தலைவன் எவன்டா தலைவன்
முன்ஜாமீன் வாங்கும் மூடர்களே
ஒவ்வொருமுறையும் இலக்கை நோக்கி கரும்புலிகளை கையசைத்து வழியனுப்பும்போது கண்ணிர்மல்க நீங்கள் முன்னால் செல்லுங்கள் நான் பின்னால் வருகின்றேன் என்று கூறுவானே அவனன்றி யார் உனக்கு தலைவன்… போராளிகளுக்கும் தளபதிகளுக்கும் உயிரைபறிக்கும் நஞ்சுமாலை ஒன்றை அணிவித்துவிட்டு தான்மட்டும் இரண்டை அணிந்து கொண்டானே அவனல்லவா உனக்கு இறைவன்.
பிரபாகரன் பிள்ளைகள் என்பதில் பெருமிதம் கொள்வோம்….
-பிரபா செழியன்
போராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.
- தத்தமது தேசங்களிற்கும் இனங்களிற்கும் தங்களது பெயர்களினால் பெருமையினைத் தேடித்தந்த உலக சரித்திரத்தின் தலைசிறந்த் மனிதர்களின் வரிசையில் அவரது பெயரும் பொறிக்கப்பட்டுவிட்டது. பிரபாகரன் என்ற பெயர் தமிழீழத்திற்கும், தமிழினத்துக்கும் ஓர் அழியாத புகழ்! என்றும் கிடையாத தலைநிமிர்வு.
- ஒரு புதிய வரலாற்றைத் தமிழர்களுக்குத் தந்த தலைவன்!
- தமிழர்களின் சேவகனாகி தமிழர்களின் தொண்டனாகி, தமிழர்களின் தளபதியாகி, தமிழர்களின் தலைவனாகி, தமிழர்களின் பலமாகி, தமிழர்களின் கவசமாகி, தமிழர்களின் மணிமகுடமாகி… அடக்கி ஒடுக்கப்பட்டு முடங்கிச் சருண்டு கிடக்கும் உலகத் தேசிய இனங்களுக்கு உன்னதமான ஒரு முன்னுதாரணமாகி… பூலோகத்தின் முள்ளந்தண்டைச் சிலிர்த்திடவைக்கும் ஒரு பெயராகிவிட்டது பிரபாகரன்!