பொன்விழா நாயகனை வாழ்த்தி..!
கடலன்னை தன் அலைகளால் தாலாட்டித் தன் அணைப்பிலே தூங்கவைக்கும் இயற்கை வளமும் பெருமையுங்கொண்ட வல்வெட்டித்துறை மண்ணிலே எம் தமிழினத்தின்மேற் கொண்டபற்றால்தமிழினத்தின் விடுதலைக்கேயென எம் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள்பிறந்தார்.
தாயக விடுதலைக்காக நெஞ்சிற் கனைத்த நெருப்புடன் மிக இளமையிலேயே விடுதலைப் பாதையைத் தெளிவாய்த் தேர்ந்தெடுத்த, தமிழினத்தின் முதற் செயற்றலைவர்.
எவ்விடர்வரினும் நேர்கொண்டு அதை உடைத்தெறியும் அஞ்சாத ஆளுமைமிக்க வீரப்புலிப்படையை உருவாக்கிய மாபெருந்தலைவர்
இன்று உலகையே தமிழனைத் திரும்பிப்பார்க்கவைத்து இராணுவ , அரசியல் நகர்வுகளிற்
பிரமிப்படையவைத்து , தமிழரின் இலக்கை எட்டிக்கொண்டிருப்பவர் எம் தேசியத்தலைவர்.
ஒட்டுமொத்தத் தமிழினத்தின் தலைவராக அனைத்துள்ளங்களிலும் வியாபித்துநிற்கும் அவர், டோர்க்களத்திற் போர்த்தளபதியாக, அரசியற்களத்தில் தூரநோக்கராகச் செயற்படுவதில் அனைவரையும் ஆச்சரியத்திலாழ்த்தும்மாபெரும் மனிதர்.
தேசியக்கொடியான புலிக்கொடியை உருவாக்கி அதன்கீழ்த் தமிழீழத் தேசிய விளையாட்டுப் போட்டியிற் சிங்கள அணியையும் அணிவகுக்க வைத்த தலைவர்.
தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்பவற்றின் ஒட்டுமொத்தச் செயலுருவமாக விளங்கும் எம் மாபெரும் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் தனது பொன்விழாக் காணும் இவ்வேளை,பிரான்ஸ் வாழ் தமிழ் மக்கள் சார்பாக வாழ்த்துவதிற் பேருவகையடைகின்றேன்
-பரிதி
பொறுப்பாளர்,
தமிழீழ விடுதலைப் புலிகள் பிரெஞ்சுக்கிளை.
தமிழீழத் தேசியத்தலைவரின் அகவை 50 ல் பருதி அண்ணை அவர்களால் எழுதிய வாழ்த்து செய்தி இன்று பருதி அண்ணையின் 5 ம் ஆண்டு வீரவணக்க நாளிலிருந்து வேர்கள்.!