பொட்டம்மானை அனுப்பி வைத்த தலைவர் பிரபாகரன்! மருத்துவரால் காப்பாற்றப்பட்ட போராளிகள்

சிறப்பான முறையில் மருத்துவம் பார்த்த மருத்துவரை காண்பதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் புலனாய்வுத் துறைப் பொறுப்பாளர் பொட்டம்மானை அனுப்பி வைத்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் மருத்துவராக பணியாற்றியிருந்த ரத்னம் வேலுப்பிள்ளை என்பவரே இது குறித்து ஊடகம் ஒன்றிற்கு கருத்து வெளியிட்டுள்ளார்.

தலைவர் பிரபாகரனிடம் சிறந்த வைத்தியர் என்ற பெயரை தாம் பெற்றுக் கொண்டதாக அந்த மருத்துவர் தெரிவித்துள்ளார்.

யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் ஓமந்தை, மாங்குளம், விசுவமடு முகாம்களில் சேவை செய்த ரத்னம், முகாமில் மரணிக்கும் நிலையில் இருந்த மக்களுக்கு அவரால் முடிந்தளவு மருந்து கொடுத்து அவர்களை காப்பாற்றியுள்ளார்.

அந்த காலத்தில் விடுதலை புலிகள் அமைப்பின் பல போராளிகள் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களை காப்பாற்றுமாறு விடுதலைப் புலிகளால் வைத்தியர் ரத்னத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

விடுதலைப் புலிகளின் புலனாய்வுதுறை பொறுப்பாளர் பொட்டு அம்மானினால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வைத்தியர் ரத்னம் தெரிவிக்கையில்,

நோயினால் பாதிக்கப்படும் விடுதலைப் புலி போராளிகளுக்கு சிகிச்சை அளிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

என்னிடம் உள்ள மூலிகைகளை வைத்து மருந்து தயாரிப்பதற்கு வாக்குறுதியளித்தேன். ஆங்கில மருந்து தயாரிப்பதற்கான பொருட்கள் இல்லை.

ஆயுர்வேத மருந்து வகைகள் தயாரிப்பதற்கு பொருட்கள் காணப்படவில்லை. எனினும் மக்கள் மரணிப்பதற்கு அனுமதிக்க முடியாது.

நான் முதலாவதாக முகாம்களில் உள்ள மக்களுக்கே மருந்து தயாரித்தேன். விடுதலை புலிகளின் தலைவர், பொட்டு அம்மானை என்னிடம் அனுப்பி வைத்திருந்தார்.

நாதன் என்ற விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் தொடர்ந்து என்னிடம் மருந்து பெற்றார். நான் செய்யும் சேவையை பார்த்த பிரபாகரன் விடுதலை புலிகள் எல்லைக்குட்பட்ட பகுதியில் சிறந்த வைத்தியராக என்னை அடையாளப்படுத்தினார்.

வைத்தியர் ஒருவர் உயிர்களை காப்பாற்றுவதற்கு அவர் எந்த அமைப்பை சேர்ந்தவர் என பார்க்க மாட்டார். இன்று நான் மருத்துவம் பார்க்கின்றேன்.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.