மக்களை தாக்கிய மகிந்த

மகிந்தவை தாக்கிய மக்கள் அதிர்ச்சி வீடியோ

 தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே தனது கட்சி தொண்டரை தாக்கியமை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் சார்பில் மாத்தறை மாவட்டத்தில் அக்குரஸ்ஸ தொகுதியில்  தேர்தல் பிரச்சாரம்  நடைபெற்றது.அப்போது தொண்டர் ஒருவர்  முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ச மேடையில் ஏறுவதற்கு முன்பாக அவரது கையை பிடித்து இழுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மஹிந்த ராஜபக்‌ஷ அவரை  நோக்கி தாக்கியுள்ளார். பின்னர் அவரது பாதுகாவலர்களும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் உறுப்பினர்களும் அவரை சமாதானப்படுத்து அழைத்துசென்றனர். பின்னர் மேடையில் ஏறிய அவர் புத்த பிக்குகளுக்கு மரியாதை செலுத்தினார்.மேலும் எதுவும் நடக்காதது போல் தொண்டர்களை நோக்கி கையையும் அசைத்தார்.

Fotor0721215543