fotor0907220113

அகிம்சை வேள்வியில் தியாக தீபத்தின் ஆறாம்நாள்….

கட்டிலில் படுத்து புழுவாய் நெளித்து துடிதுடித்து கொண்டிருக்கின்ற திலீபன் அண்ணணை பார்த்து வாஞ்சி அண்ணை “தம்பி ஆறுநாள் ஆகிட்டுது நமக்கு சாதகமா எந்த பதிலும் வரவில்லை. நீங்க தண்ணி மட்டும்மாவது அருந்தி போராட்டத்தை முன்னெடுக்க கூடாதா”.திலீபன் அண்ணயை இழந்து விடக்கூடாது என்ற பரிதவிப்பில் கேட்கின்றார் வாஞ்சி அண்ணை.

அதுக்கு திலீபன் அண்ணை ” “என்ன பகிடியா பண்ணுறீங்க ஒருசொட்டு தண்ணியும் குடிக்கமாட்டேன் என்ற நிபந்தனையோடுதானே இந்த உண்ணாவிரதத்தைதொடங்கினேன் பிறகு எப்படி நான் தண்ணி குடிக்க வேண்டும்மென்று கேட்டிங்க ” ” அதுக்கு வாஞ்சியண்ணை ” “இல்லை இப்பவே சலம் போறது நின்னு போச்சு இனியும் நீங்க தண்ணி குடிக்காமலிருந்தால்……..

“”இனிமேல் என்னை தண்ணி குடிக்கச்சொல்லி கேட்கவேண்டாம் சரியோ,உண்ணாவிரதம் என்றால் என்ன தண்ணீர்,குளுகோஸ்,இளநீர் எல்லாமே உணவுதான் இந்த உணவை எடுத்துக்கொண்டு எவ்வளவு நாளும் உயிர் வாழலாம் ஆனால் அது உண்ணாவிரதமில்லை. உண்ணாவிரதமெண்டால் அதுக்கு அர்த்தம் வேணும் ஒரு புனித இலட்சியம் நிறைவேற வேணுமெண்டதுக்காகதான் எங்களை நாங்களே வருத்திக்கொண்டு உண்ணாவிரதம் இருக்கின்றது.இது வெறும் அரசியல் லாபத்துக்காக தொடங்கப்பட்டதல்ல வயிறு முட்ட குடித்த்துவிட்டு மக்களை ஏமாற்ற என்னால் முடியாது””அவ்வளவு சோர்விலும் துன்பத்திலும் திலீபனிடமிருந்து உறுதி குலையாமல் வந்து விழுகின்றன வார்த்தைகள்.
மு.வா.யோ
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”
பிரபாசெழியன்.

(www.eelamalar.com)