மண்டைதீவு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோர் நினைவுதினம் 23.08.1990, 25.09.1990

ஒட்டுக்குழுவான ஈபிடிபி , இராணுவத்துடன் சேர்ந்து மண்டைதீவில் 92 மேற்பட்ட இளைஞர்களை கைது செய்து ,பின்னர் காணாமல் ஆக்கப்பட்டனர்.

23.08.1990 அன்று இராணுவம் நோட்டீஸ் போட்டது மண்டைதீவு , அல்லைப்பிட்டி , மண்கும்பான் மக்களை வீட்டில் இருக்க வேண்டாம் , கோவில்களில் தங்குமாறு. 
பின்னர் இராணுவம் கிராமங்களுக்குள் முன்னேறி , வீடுகளில் இருந்த மக்களை – 20 பேர் வரை , படுகொலை செய்தது. அல்லைப்பிட்டி தேவாலயத்தில் கூடி இருந்த 500 இளைஞர்கள் [ 15-45 வயதுடையோர் ] கைது செய்யப்பட்டு இராணுவத்தால் ஒட்டுக்குழு துணையுடன் அழைத்து செல்லப்பட்டனர். இவர்களில் பலரும் படிப்படியாக விடுதலை செய்யப்பட்டனர்.
பின்பு மண்கும்பான் பிள்ளையார் கோவிலில் படுத்திருந்த இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட 70 இளைஞருடன் திடீர் என்று இராணுவ முகாம் காலி செய்யப்பட்டது.

இதற்கு பின்னர் மக்களை சந்தித்த கொப்பேக்கடுவ மற்றும் டக்ளஸ் தேவானந்தா , மக்களுக்கு ஆறுதல் வழங்கினார்.
டக்ளஸ் கூறினார் இளைஞர்கள் தன்னுடன் தான் உள்ளதாகவும் தான் கோட்டை பிடித்தவுடன் விடுவோம் எண்டு.
அனால் மொத்தமாக 92 பேர் காணாமல் செய்யப்பட்டு / படுகொலை செய்யப்பட்டு போயினர் .

1996 ஆம் ஆண்டு ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை நடத்தி , 92 காணாமல் ஆக்கப்பட்டோரை டக்ளஸ் தேவானந்தாவிடம் கேற்கும்படியும் , தாங்களும் அவரிடம் கேற்கிறோம் என்று கூறி முடித்தனர்.

இதுவரை டக்ளஸ் தேவானந்தா பதில் கூறவில்லை, காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றி ஆமியிடம் கேற்க முன்னர் , ஒட்டுக்குழுவிடம் கேற்பது தான் நியாயம்.

Mandaithivu disappearances – 23.08.1990, 25.09.1990
**************************
பதிவு தமிழ்மகன் புருசோத்தமன்