மனித குலத்திற்கே ஆபத்தானது சிங்களப் பேரினவாதம்…!

‘உங்கள் இரு அழகான குழந்தைகள் அமைதியாக, தற்காப்பான எதிர்கால வாழ்க்கை வாழவேணும்’ 1987ன் நடுப்பகுதியில் இந்தியாவிற்கு வலுக்கட்டாயமாக அழைத்தச்செல்லப்பட்ட தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களிடம் இந்திய இராணுவ அதிகாரி இவ்வாறுதான் அவரது குடும்பத்தைச் சுட்டிக்காட்டி எச்சரிக்கை விடுக்கின்றார்.
அவரது கருத்து முடிவதற்கு இடையிலேயே சிரித்தபடி ‘எந்தவொரு இராணுவத்தில் இருக்கின்றவர்களும் தங்களது கடமையை யோசிக்கவேண்டுமே தவிர, தங்களது பிள்ளைகளைப் பற்றி யோசிக்க மாட்டார்கள்’ என்று அவர்களின் பிடியில் இருந்தபோதும், எந்தவித அச்சமுமின்றி உடனடியாகவே உறுதியோடு கூறியவர் தமிழீழத்தின் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள்.
தமிழீழத் தேசியத் தலைவர் தனது பிள்ளைகளை மட்டுமல்ல தமிழினத்தின் ஒவ்வொரு பிள்ளைகளையும் தன் பிள்ளைகள் போல்க் கருதியவர். அதனால்தான் குண்டு மழை பொழிந்த தேசத்திலும் ஆதரவற்ற குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக அறிவுச்சோலைகளையும், செஞ்சோலைகளையும் உருவாக்கி அவர்களை நற்பண்புமிக்க தலைமுறையாக வளர்த்தெடுப்பதற்கு அரும்பாடுபட்டார். ஆனால், இத்தனை உறுதிமிக்க தலைவரின் பிள்ளை பாலச்சந்திரன் சிங்களப் பேரினவாதத்தின் கைகளில் உயிருடன் அகப்பட்டு, மிகக்கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டுள்ள
ான்.
மோதலின் போதே உயிரிழந்ததாக ஏற்கனவே படங்களுடன் தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், சிறீலங்கா இராணுவத்தின் கைகளில் உயிருடன் அகப்பட்டு பின்னர் அச்சிறுவன் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டுள்ளான் என்பதை பிரித்தானியாவின் சனல்-4 தொலைக்காட்சி கடந்த வாரம் வெளியிட்டது. சனல்-4 தொலைக்காட்சியின் ஆதாரபூர்வமான நிழற்படங்கள் உலகத் தமிழனத்தை மட்டுமல்ல, மனித நேயமிக்க ஒவ்வொருவரையும் அதிர்ச்சிக்கும், சோகத்திற்கும், கடும் கொந்தளிப்பிற்கும் உள்ளாக்கியுள்ளது.
‘தன் தந்தையை தங்களோடு ஒன்றாக வாழ அனுமதிக்கும்படி
.’ ஒரு சிறு பெண்பிள்ளை தமிழீழத் தேசியத் தலைவருக்குக் கடிதம் எழுதியிருந்தார். தமிழினத்தை அழிப்பதற்காக ஆயுதத்துடன் வந்தவன் அப்பிள்ளையின் தந்தை என்றபோதும், அந்தச் சிறு பிள்ளையின் கடிதத்திற்கு மதிப்பளித்து கைது செய்து போர்க் கைதியாக வைக்கப்பட்டிருந்த சிங்கள இராணுவச் சிப்பாயை விடுவித்து அந்தப் பிள்ளையுடனேயே உடனடியாக அனுப்பிவைத்தவர் தமிழீழத்தின் தேசியத் தலைவர். அத்தனை உயர்ந்த குணம் கொண்ட, மனித நேயமிக்க தமிழீழத்தின் தேசியத் தலைவர் எங்கே…? இனவெறிகொண்டு நிற்கும் சிங்களத் தலைமைகள் எங்கே..?
எத்தனையோ போராளிகளையும், அவர்களின் பிள்ளைகளையும் உலக நாடுகள் எங்கும் அனுப்பி படிக்கவைத்தவர் தலைவர். அவரால் அனுப்பப்பட்டவர்
கள் இன்று எங்கெங்கோ நல்ல நல்ல நிலைகளில் வாழ்ந்துகொண்டும் இருக்கின்றார்கள். தலைவர் நினைத்திருந்தால் தனது பிள்ளைகளையும் வேறு நாடுகளுக்கு அனுப்பிப் பாதுகாப்பாக வைத்திருந்திருக்க முடியும். ஆனால், தான், தனது தாய்-தந்தை, மனைவி, பிள்ளைகள் என மூன்று தலைமுறைகளுடன் களத்தில் நின்று சிங்களத்தின் போரை எதிர்கொண்டார். உலக வரலாற்றில் எங்குமே நடந்திருக்க முடியாத சம்பவம் இது.
முள்ளிவாய்க்கால் பேரழிப்பின் பின்னர் சிங்களத்தின் கொடும் கரங்களில் அகப்பட்டு மனோ ரீதியான சித்திரவதையில் தாயும், தந்தையும் அடுத்தடுத்து உயிரிழக்க, இப்போது அதே சிங்களப் பேரினவாதத்தின் கரங்களில் தேசியத் தலைவரின் இளைய மகனும் அகப்பட்டு கொல்லப்பட்டிருக்கின்றார். தேசியத் தலைவரின் மகன் என்பதற்காகவே இத்தனை கொடூரமாக அச்சிறுவன் கொல்லப்பட்டிருக்கின்றான். இத்தனை குரூர சிந்தனை கொண்ட சிங்களப் பேரினவாதம் என்பது தமிழர்களுக்கு மட்டுமல்ல மனித குலத்திற்கே ஆபத்தானதுதான்.
வியட்நாமில் அமெரிக்கா நடத்திய மிகக் கொடூரமான அழிப்பு நடவடிக்கைக்கு ஆதாரமாக வெளியான ஒரு படம் தான் அந்நாட்டில் நடந்த போரைத் தடுத்து நிறுத்தியது. நேபாம் எரிகுண்டுகளை வியட்நாம் மக்கள் மீது வீசித்தாக்கியபோது எரிகாயங்களுடன் நிர்வாணமாக ஒரு சிறுமி தப்பியோடும் நிழற்படத்தைப் பார்த்து உலகம் அதிர்ச்சியடைந்தது. குறிப்பாக போரை நடத்திய அமெரிக்காவில் அந்நாட்டு மக்கள் கிளர்ந்தெழுந்து போரை நிறுத்துப்படி அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள். தங்களது நாட்டிற்குள்ளேயே எழுந்த கடும் எதிர்ப்பினால் போரைத் தொடரமுடியாமல் அமெரிக்கா அங்கிருந்து பின்வாங்கியதற்க
ு அந்தவொரு நிழற்படமே முதற்காரணம். இப்போது சிறீலங்காவின் இன அழிப்புப் போருக்கு மிகவும் ஆதாரமான நிழற்படங்கள் வெளிவந்துள்ளன. இந்தப் படங்கள் குறித்து ஐ.நா. ஆலோசனை நடத்துகின்றது.
உலகம் பதிலின்றி மௌனம் காக்கின்றது. தமிழகம் எரிதணலில் இருப்பதால் இந்தியா திரிசங்கு நிலையில் சுழல்கின்றது. சிங்கள தேசத்து மக்களிடம் இருந்து எந்தவொரு கவலையோ கண்டனமோ வரவில்லை. மகிந்த அரசாங்கம் இதனைப் போலியானதென்று புறந்தள்ளி தனது இன அழிப்பை மூடிமறைக்க முயல்கின்றது.
கசாப்புக் கடைக்காரனிடம் கருணையை எதிர்பார்க்க முடியாதுதான். ஆனால், தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் மகன் என்பதற்கும் அப்பால் 12 வயதான ஒரு சிறுவனை உயிருடன் பிடித்து இத்தனை கொடூரமாக படுகொலை செய்த சிங்கள தேசத்தை இந்தச் சர்வதேசம் இப்போது எப்படிக் கையாளப்போகின்றது என்ற கேள்வியே எழுந்து நிற்கின்றது. இத்தனை கொடூரமான சிங்களப் பேரினவாதத்துடன்தான் தமிழர்கள் இணைந்து வாழவேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்போகின்றதா?
அத்தோடு, இந்தச் சிறுவனின் படுகொலைக்கு சிறீலங்கா அரசை மட்டும் காரணம் கூறி தப்பித்துவிட முடியாது. இந்த இன அழிப்புப் போருக்கு துணை நின்ற அத்தனை நாடுகளும் இந்தப் படுகொலைக்கு பொறுப்பேற்றாக வேண்டும். உள்நாட்டுப் போர் நடைபெறும் நாடுகளின் உண்மை நிலையைப் புரிந்துகொள்ளாம
ல், மேற்குலக நாடுகள் விடுதலைக்காகப் போராடுகின்றவர்கள் மீது பயங்கரவாத முத்திரை குத்துவதும், அவர்கள் அழிக்கப்படுவதை வேடிக்கை பார்ப்பதும் காலம் காலமாக நடைபெற்றுக்கொண்
டிருப்பதுதான்.
ஆனால், பயங்கரவாதத்திற்கு எதிரான என்ற போர்வையில் சிறீலங்கா பாரிய போரை முன்னெடுத்தபோது, இதுவொரு இன அழிப்புப்போர், இதனைத் தடுத்து நிறுத்துங்கள் என்று உலகத் தமிழர்கள் எல்லோரும் மிகக் கடுமையாகப் போராடினார்கள். போரை நிறுத்துவதற்காக தீக்குளித்தும் தங்கள் உயிரை விட்டார்கள். ஆனால் வழிகள் பல இருந்தும் ஐ.நா. முதல் மகிந்தவின் போருக்கு ஆதரவு வழங்கிய நாடுகள் வரை மௌனமாகவே இருந்தது.
மட்டுமல்ல, போர் புரிந்த சிங்களப் பேரினவாதத்திற்கு முழு உதவிகளையும், ஒத்துழைப்புக்களையும் வழங்கினார்கள்.
எனவே, ஐ.நாவும் சிறீலங்காவிற்கு உதவி புரிந்த நாடுகளும் இந்தப் படுகொலைக்கு தார்மீகப் பொறுப்பை ஏற்று, படுகொலையாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்ப
துடன் மட்டும் நின்றுவிடாது, தமிழ் மக்களுக்கான பாதுகாப்பான, நிரந்தரமான வாழ்வை ஏற்படுத்தவும் உறுதி வழங்கவேண்டும். இதுதான் கடந்தகாலத் தவறுகளுக்கான ஒரேயரு இழப்பீடாக இருக்கமுடியும்.