மாற்றுத் தலைமைக்கு இடமில்லை –வடமாகாண முதலமைச்சர்!

தமிழ் மக்களுக்கான மாற்றுத் தலைமைக்கு இடமில்லையெனவும், ஒற்றுமையே பலம் எனவும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கனேடிய உயர்ஸ்தானிகர் ஷெல்லி வைட்டிங் மற்றும் வடமாகாண முதலமைச்சருக்கு இடையில் முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் 11.07.17 விஷேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

இச்சந்திப்பின் பின்னர் ஊடகங்களால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த முதலமைச்சர் அண்மையில் ‘தடுமாறாத தமிழர்களுக்கு தலைமை ஏற்பது யார்?’ என்ற கலந்துரையாடலில் தமிழ் மக்களுக்கான தலைமையை விக்னேஸ்வரன் ஏற்கவேண்டுமென வலியுறுத்தப்பட்டதாகவும் அது தொடர்பான அவரது நிலைப்பாடு என்ன எனவும் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்,

அவ்வாறானதொரு நிலைப்பாட்டுக்கு இடமில்லையெனவும், தற்போதிருக்கும் தலைமையின் கீழ் ஒற்றுமையாக செயற்படுவதே தமிழினத்திற்கு பலம் என்றும் முதலமைச்சர் சூசகமாக தெரிவித்துள்ளார்.