மாவீரர் யாரோ என்றால் மரணத்தை வென்றுள்ளோர்கள்!

தாய் மானம் வாழ என்றே தம்மையே தந்துள்ளோர்கள்!

ஊர் வாழ வேண்டும் என்றே உன்னத ஆர்வம் கொண்டோர்!

ஏராளமான துயர் எண்ணங்கள் தாங்கி நின்றோர்!

ஏராளமான துயர் எண்ணங்கள் தாங்கி நின்றோர்!

மாவீரர் யாரோ என்றால் மரணத்தை வென்றுள்ளோர்கள்!

மதம் சொல்லி மொழியை சொல்லி மரபுகள் இனங்கள் சொல்லி

வதம் செய்யும் ஆட்சி தன்னை..

உதைத்திட எழுந்ததீரர் சிதைந்தது மானம் என்றால்

சினந்திடும் வீரவான்கள்..

உதைத்திட எழுந்த தீரர் சிதைந்தது மானம் என்றால்

சினந்திடும் வீரவான்கள்….

சுதந்திரம் உயிர் மூச்சென்றே துணிந்தெழும் ஞானவான்கள்!

துணிந்தெழும் ஞானவான்கள்!

(மாவீரர்….)

தேசிய உரிமை வாழ்வின் சின்னமாய் மின்னுவோர்கள்

வீசிய இளம் தென்றல்கள்!

விடுதலை தளிரில் மீன்கள் வெற்றிக்கோர் ஊக்கம் நல்கும்

விடுதலை ஆண்பெண் பொன்கள்!

தேசிய உரிமை வாழ்வின் சின்னமாய் மின்னுவோர்கள்

வீசிய இளம் தென்றல்கள்!

விடுதலை தளிரில் மீன்கள் வெற்றிக்கோர் ஊக்கம் நல்கும்

விடுதலை ஆண்பெண் பொன்கள்!

பற்றுகோடாகி எங்கள் பலமாகி நிற்கும் தூண்கள்!

பலமாகி நிற்கும் தூண்கள்!

உலகின் எல்லா நாடுகளின் இராணுவத்திலும்
மது உண்டு….

சில நாடுகளின் இராணுவத்தில் சிகரெட்டு பிடிக்க அனுமதி உண்டு…

சில நாடுகளின் இராணுவங்களில் பாலியல் உறவுகளுக்கு கூட அனுமதி உண்டு…!!

சில நாட்டு இராணுவத்தில் போரில் கைப்பற்றுகிற எதிரி நாட்டின் பெண்களை சீரழிக்கலாம்…

உலகின் எல்லா நாட்டு இராணுவங்களிலுமே பணிபுரிகிற வீரர்களுக்கு நல்ல சம்பளம் உண்டு…பணி ஓய்வுக்கு பின்பு சலுகைகள் உண்டு…!!

ஆனால் உலகில் ஒரே ஒரு நாட்டின் இராணுவத்தில் மட்டும் தான்…

புகை பிடிக்க அனுமதி கிடையாது…மது அறவே கிடையாது…

சம்பளமே வாங்காமல் பணிபுரிகிற வீரர்கள் உண்டு…

இந்த நாள் , இந்த நேரம் தான் மரணம் என்று தெரிந்து சமராடுகிற தனிப்படை உண்டு..

சாவை சயனைடு குப்பியில் ஏந்தித்திரிகிற தைரியம் உண்டு…!!

தன் நாட்டுப்பெண்களல்ல,எதிரி நாட்டு பெண்களின் தாவணியை கூட தொட்டிராத சுய ஒழுக்கம் உண்டு…!!

அந்த இராணுவத்திற்கு இன்னொரு பெயரும் உண்டு…

தமிழீழ விடுதலைப் புலிகள்…!!!