மிகவும் குறும்பான போராளி அவனது பேச்சில் எப்போதும் நக்கல் இருக்கும்..!
மேஜர்.பிரபு மிகவும் குறும்பான போராளி அவனது பேச்சில் எப்போதும் நக்கல் இருக்கும்..! நான் அவனை முதல் முதலில் 88களின் இறுதியில் மணலாற்றில் வைத்து சந்தித்தேன். என்னை போலவே வயதில் சிறியவனாக இருந்ததால் இலகுவில் இருவரும் நண்பர்கள் ஆனோம். அவன் மட்டகளப்பு மாவட்டத்தை சேர்ந்த போராளி என்பதால் அவனது பேச்சு வழக்கு மிகவும் ரசனையாய் இருக்கும். இதனாலேயே அவனை பானு அண்ணைக்கு மிகவும் பிடிக்கும். இந்தியராணுவம் எம் மண்ணை விட்டு போனதும் பானுஅண்ணை யாழ் செல்லும் அணிகளை தயார் படுத்தும் போது விசேட பியிற்சிகளை முடிதிருந்தவன் என்பதால் அவருக்கு மெய்ப்பாதுகாவல் அதிகாரியாக நியமிக்க பட்டு யாழ் நோக்கிய பயணம்.!
அங்கு சென்று அவருடன் ஒருவரட காலம் இருந்த பின் களமுனையில் தொடர் சண்டைகள் அவனை புடம் போட்டது. அதன் பின் 1991ஆனையிறவு சண்டையின் போது அதன் கட்டளை அதிகாரியான பொட்டு அம்மான் இவனை கண்டு தன்னோடு எடுத்திருந்தார். அவரும் இவனை காட்டில் இருக்கும் போதே இனம் கண்டிருந்தார்.அதனால் பல பணிகளை எதிரி பிரதேசத்தில் இவனை வைத்து நிறைவேற்றி இருந்தார். அதன் பின் மறைப்பு போராளியாக வலம் வந்தான்.
காலம் சுழன்று யாழ்பாணம் எமது கையை விட்டு போன போது இராணுவ வல் வளைப்பில் சிக்கி மக்களோடு மக்களாக மாறியிருந்தான். அப்போது யாழில் இவனை பாதுகாத்து வைத்திருந்த எமது ஆதரவாளர் அவரின் வீட்டில் தங்கையின் கணவர் என்று கூறி, (ஆபத்தென்று தெரிந்தும்)மறைப்பில் அவனை தன் கூடவே வைத்திருந்தார். அவனுக்கு போராளிகளுடனான தொடர்பும் துண்டிக்கப் பட்டிருந்தது. அவனும் கப்பல் மூலமாக கொலும்பு செல்லும் ஒரு ஆதரவாளர் ஊடக கடிதம் ஒன்றை வன்னிக்கு அனுப்பி தொடர்பை ஏட்படுத்தி இருந்தான்.
அந்த நேரத்தில் நாமும் ஒரு தேவையின் நிமித்தம் 1996இறுதியில் யாழ் சென்றிருந்தோம். அதற்கு அவனது உதவி பெறப்பட்டது. அந்த வேலையின் நிமித்தம் அவனை சந்தித்து உரையாடுவது வழக்கம். அப்படி ஒருநாள் 1997இன் ஆரம்பத்தில் திருநெல்வேலி சந்தைக்கு அருகில் சன நடமாட்டம் அதிகமுள்ள இடத்தில் உரையாடிக் கொண்டிருந்தோம். அந்த நேரத்தில் அவ்விடத்திற்கு வந்த இராணுவத்தினர் நிலை எடுக்க இருவர் மட்டும் இவனை நோக்கி வந்தனர். இருவரும் ஒருவரை ஒருவர் தெரியாதது போல் நகர முற்படும் போது பிரபுவிடம் வந்தனர்.
அப்போது எமக்கு தெரிந்து விட்டது யாரோ காட்டி கொடுத்து விட்டார்கள் என்று(சில நாட்களிலேயே அந்த துரோகியை புலிகள் இனம் கண்டு தண்டனையும் வழங்கப் பட்டது ) வந்தவர்கள் அவனிடம் அடையாள அட்டையை கேட்டனர், அதை கொடுத்ததும் இவனது பெயரை கேட்டு மீண்டும் உறுதி செய்த போது நடக்க போகும் விபரீதத்தை உணர்ந்த பிரபு துவிசக்கர வண்டியின் இருக்கையின் கீழ் மறைத்து வைத்திருந்த சயனைட் குப்பியை எடுப்பதற்கு இவன் தயாராகவும் அவர்கள் இவனை அதை கடிக்க விடாமல் தடுப்பதற்கு பாயவும் நேரம் சரியாய் இருந்தது.
எதிரி உயிரோடு பிடிப்பதற்கு முயன்றபோது,அவர்களை தாக்கி குப்பியை கடித்த பின் தன்னை பிடிக்க வந்த இருவரையும் குப்பி கடித்த வாயால் கடித்து ஒருவன் காயமடைய மற்றைய எதிரியை தன்னோடு இறுக்கிய படியே அவனையும் கொன்று இவனும் வீரச்சாவடைந்தான்.!! எதையும் கண்டு அஞ்சாத வீரன் மக்களுக்காக உயிர் பிரிந்து போனான். எல்லாமுமாகி என்னோடு இருந்த ஒரு நட்பு,ஒன்றாய் உறங்கி ஒரு கோப்பையில் உண்டு களித்த நட்பு,என் கண்முன்னே மரண வாசலில் நின்ற போதும் ஒருகனம் எமை பார்த்த பார்வை அது வீரனுக்கே மட்டும் உரியது..!!