மிஸ்டர் பிரபாகரன் நீங்கள்தான் முதலமைச்சர்.

இந்தியாவின் அசோகா ஹோட்டலில் இலங்கை-இந்திய ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்பட்டபோது தலைவரிடம் கூறினார் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி,
மிஸ்டர் பிரபாகரன் நீங்கள்தான் வடக்குமாகணத்திற்கு முதலமைச்சர்.அதற்கு தலைவர் கூறினார்…
பிரபாகரனுக்கு முதலமைச்சர் பதவி யாரும் தரவேண்டிய அவசியமில்லை.எனது மக்களுக்கு பிரபாகரன் எப்பவும் முதலமைச்சர்தான் எனது மக்களுக்கு பிரபாகரன் எப்பவும் ஜனாதிபதிதான்.எனது மக்களுக்கு பிரபாகரன் எப்பவும் தலைவர்தான்.
அது நடந்து இற்றைக்கு 30 வருடங்கள் கடந்துள்ளது.ஆனால் இன்றுவரை
தமிழர்களின் ஒரேயொரு தலைவர் என்றால் அது எமது தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் மட்டும்தான்.

இதேவேளை சுதுமலையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் இலங்கை-இந்திய ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்பட்ட விடையம் பற்றியும் அதன் ஒரு அங்கமான ஆயுதங்களை ஒப்படைப்பதுபற்றியும் எமது மக்களுக்கு விடுதலைப்புலிகளின் அதுசம்பந்தமான நிலைப்பாடுபற்றியும் தலைவர் பிரகடனப்படுத்தியிருந்தார்.
அதில் முக்கியமாக கூறியதாவது….
எமது மக்களின் ஒரேயொரு பாதுகாப்புச் சாதனமாக இருந்துவந்த இந்த ஆயுதங்களை இந்தியா எம்மிடமிருந்து பெற்றுக்கொள்வதன்மூலம் எமது மக்களின் பாதுகாப்பு என்ற பெரும்பொறுப்பை இந்தியா ஏற்றுக்கொள்கிறது.
பாரதப்பிரதமரின் உத்தரவாதத்திலும் உறுதிமொழியிலும் நம்பிக்கைவைத்தே எமது ஆயுதங்களை ஒப்படைக்கிறோம்.
போராட்ட வடிவங்கள் மாறலாம்-ஆனால்
போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.

தலைவர் அன்றே கூறிவிட்ட தீர்க்கதரிசனமான அந்த வார்த்தையை ஒவ்வொரு தமிழரும் தம்நெஞ்சங்களில் பதிவேற்றி இலட்சியத்தை நோக்கி தொடர்ந்து பயணிப்போம்.
“போராட்ட வடிவங்கள் மாறலாம்-ஆனால்
போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை”

“புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்”