Fotor0917143537

மீண்டும் “வரலாறு” படைக்க மாவீரர்கள் கருக்கொண்டுவிட்டார்கள்

12003338_930657886956624_6255828357920395887_n

பார்வதியம்மாள் தலைவர் பிரபாகரனை கருவுற்ற காலத்தில் நடந்த அறியாத உண்மை…!!!அவசியம் படியுங்கள் தோழர்களே…!!!

முன்பு ஒரு முறை தேசியத்தலைவர் பிரபாகரனின் சகோதரர் திரு மனோகரன் (டென்மார்க்கில் வசிக்கிறார்) அவர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தபோது ஒரு தகவலை குறிப்பிட்டார். தலைவர் அவர்கள் பிறந்தது வல்வெட்டித்துறையில்தான்

ஆனால் பார்வதியம்மாள் கருவுற்றது அநுராதபுரத்தில். கருவற்றிருந்த காலத்தில் பார்வதியம்மா தினமும் மாலையில் சிங்கள ஆட்சியாளர்களுக்கு சிம்மசொப்னமாக விளங்கிய எல்லாள மன்னனின் சமாதியின் கீழ் இளைப்பாறுவாராம். அங்கு வருகிற சிங்களப்பெண்கள் “என்ன எல்லாளன் மீண்டும் உனது வயிற்றில் பிறக்க வேண்டும் என்று இங்கு வந்து தினமும் குந்தியிருக்கிறியா?” என்று கேட்பார்களாம்.

இறுதியாக ஒரு நாள் சில புத்த பிக்குகள் “இந்த பெண்ணை இனி சமாதிக்கு அருகில் விடாதீர்கள். எல்லாளன் மீண்டும் பிறந்து சிங்களவர்களை பழிவாங்குவான் என்று ஐதீகம் இருக்கிறது. கருத்தரித்த இந்த பெண் தினமும் இந்த இடத்தில் இருக்ககூடாது” என்று பார்வதியம்மா அங்கு செல்வதை தடுத்தார்களாம். ஆச்சரியமான தகவலாக அது இருந்தது. பின்பு நடந்தது உலகறிந்த வரலாறுதானே..

இதை ஏன் இங்கு குறிப்பிடுகிறேன் என்றால் வன்னியிலுள்ள ஒரு நண்பர் இன்று பேசும்போது ஒரு கர்ப்பிணி தமிழ்பெண் அழிக்கப்பட்ட மாவிரர் துயிலுமில்லத்திற்கு அண்மையாக வெறித்து பார்த்துக்ககொண்டிருப்பதை தான் அடிக்கடி காண்பதாக குறிப்பிட்டார். மீண்டும் “வரலாறு” படைக்க மாவீரர்கள் கருக்கொண்டு விட்டார்கள். வரலாறு என்பது அதன் போக்கில் எழுதப்படும் என்பது ஒரு இயங்கியல்..!!!

மாவீரர்கள் புதைக்கப்படுவதில்லை அவர்கள் விதைக்கதான் படுகிறார்கள்..!!!
எம் தேசியத் தலைவனின் தலைமையில் தமிழீழம் அமைவது உறுதி இதையாரும் மறுக்க முடியாது…!!!

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்

(களத்தின் குரல்கள்)