>

 ‘மீண்டும் வருவோம்’ குறும்பட வெளியிட்டு நிகழ்வு.

தமிழீழ மண்ணில் இளம் தமிழ்ப்பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் பாலியல் தொல்லைகளை அடிப்படையாக வைத்து  உருவாக்கப்பட்ட பாசறைப் பட்டறை வழங்கும் ‘மீண்டும் வருவோம்'(குறும்படம்). 08.03.2015 ஞாயிற்றுக்கிழமை அனைத்துலக மகளிர் நாளன்று மாலை 6 மணிக்கு வடபழனியில் அமைந்துள்ள திரைப்பட்இசைக்கலைஞர்கள் சங்க மண்டபத்தில் வெளியிடப்பட இருக்கின்றது.

தேவர் அண்ணா,சரவணகுமார்,மற்றும் புதுவையைச் சேர்ந்த ஹர்சத் கான்,கலியசாமி மற்றும் கவிஞர் மனுஷி பாரதி நடிபில் உருவான இந்த குறும்படத்தினை  ஈழத்து ஒளிப்பதிவாளர் சிவபாஸ்கர்  ஒளிப்பதிவு  செய்துள்ளார் . அவருக்கு உதவியாளர்களாக புதுவை Rj.ஆரோ மற்றும் தஞ்சை சபரீஸ் ஆகியோர் செயற்பட்டுள்ளார்கள்.

படத்தொகுப்பு – நிதர்சனம் கலையகத்தில் சார்பில்ஜெயன்ந்த். மேற்கொண்டுள்ளார். ஒலிப்பதிவு மற்றும் இசையமைப்பினை இசையமைப்பாளார் ஆசான்

திரைக்கதை,வசனம்,இயக்கம் தேவர்அண்ணா.
இணை இயக்கம் புதுவை ஹர்சத்கான்.

தயாரிப்பு -ஆவல் கணேசன்,லாரன்ஸ் பிரபாகரன்,தமிழ் பிரபா ஈழம்,சரவணகுமார்,தேவர் அண்ணா ஆகியோர்