முதலமைச்சர் முடிவை மாற்றிக் கொள்ளாவிட்டால் பதவி விலக வேண்டும் -சுமந்திரன்

விசாரணைக் குழுவின் அறிக்கையில் குற்றவாளிகளாக குறிப்பிடப்படாத வடக்கு மாகாண சபையின் இரண்டு அமைச்சர்கள் தொடர்பிலும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வாரானால் அவருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீளப் பெறப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் கூறியுள்ளார்.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாவிட்டால் முதலமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என சுமந்திரன் தெரிவித்தார்.

ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவித்த போது . ஏ. சுமந்திரன் மேற்கண்டவாறு தெரித்துள்ளார்.